Silence is the flower of Shiva.. Part 13 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 13

Hi,
நான் உங்கள் சிவா,

முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக

Office என் Cabin ல் நானும் நந்தாவும் மட்டும் இருக்க, நந்தா என்னை இங்கேயே Wait பண்ண சொல்லியிருந்தான். இந்த நாலு நாட்களாக ராமிடம் இருந்து எந்த வித புது Problem இல்லை னு கவிதா நந்தா விற்கு Phone பண்ணி சொல்லியிருந்தாள். But, ராம் அடிபட்ட புலி மாதிரி சுத்திகிட்டிருக்கான். ஏதோ Underground வேலை மட்டும் பண்றான்னு நிச்சயமா தெரியுது. Record பண்ண Matter Fake னு தெரிஞ்சிடுச்சுனா சிக்கலாயிடும். So, ஏதாவது ஒரு நல்ல Solution யோசிங்கனு கவிதா சொன்னதா நந்தா சொன்னான்.

சரிடா இப்ப யாருக்காக இங்கே நாம Wait பண்றோம்?

அப்போது என் Office Phone Ring ஆக, நந்தா டேய் Receptionist யாராவது முரளி னு உன்னய பார்க்க வந்திருந்தால் மேல இங்கே உன் Cabin க்கு வரச்சொல்லு.

Phone ல் Receptionist முரளிக்காக என் Permission கேட்க, உடனே மேலே வரச்சொன்னேன்.

டேய் யாருடா இது முரளி?

ரவி சில விஷயங்களை கொஞ்சம் Confidential ஆ தான் நாம பண்ணனும். அதான் முள்ளை முள்ளால தான் எடுக்கனும். முரளி என் Childhood Friend. கொஞ்சம் தில்லாலங்கடி வேலை லாம் அசால்ட்டா பண்ணுவான். முழுசா நம்பலாம். நம்ம ராம் Matter க்கு இவன் தான் Correct. நான் அன்னைக்கே ராம் பத்தி எல்லா விபரமும் அவன் கிட்ட கொடுத்திருந்தேன். மலர், கவிதா பத்தி மூச்சு விடலை. ராம் னால எங்களுக்கு தெரிஞ்ச Ladies க்கு Problem னு சொல்லி விசாரிக்க சொல்லியிருந்தேன். முரளி Network பெருசு. அவனை நம்பி இறங்கலாம். இப்ப வந்து சொல்லுவான் பாரு.

கொஞ்ச நேரத்தில் Goggles அணிந்து Casual ஆக முரளி வர, நந்தா என்னை Introduce பண்ணி வைக்க, எல்லா நல விசாரிப்புகளும் முடிந்த பின் முரளி ஒரு ஃபைலை எடுத்து Table ல் வைத்து Open பண்ணி காண்பிக்க, நிறைய Photos இருந்தது. அதில் ராமை முரளி எங்களுக்கு காட்ட, முதன் முதலாக நானும் நந்தாவும் ராமை Photo வில் பார்த்தோம். கொஞ்சம் உயரம் கம்மியாக, நல்ல செனப்பன்னி மாதிரி இருந்தான். ராமுக்கு தெரியாமலே அவனை Follow பண்ணி High Resolution Camera வில் Photo எடுத்திருந்தார்கள். இதைத்தவிர இன்னும் நிறைய Photos.. ராமின் வீடு, Family photos, Guest House distance Shot, Jupiter Bar, ராமின் Car.. அவன் Daily சந்திக்கும் Friends, பெண்கள்.. எல்லா Photos ம் இருந்தது.

முரளி சொல்ல ஆரம்பித்தான். நந்தா இவனை ஒரு மூணு நாளா Inch by Inch ஆ Watch பண்ணதுல.. Daily Office விட்டதும் பக்கத்தில இருக்கிற Jupiter Bar க்கு சரக்கடிக்க போயிடுவான். சாருக்கு அங்கே தனியா SPL. Private Room ஒண்ணு இருக்கு. பொம்பளை விஷயத்தில பயங்கர வீக். தப்பித்தவறி ஏதாவது பொண்ணு மாட்டுச்சுனா முடிஞ்சா அந்த Room ல யே எல்லாம்.. இதைத்தவிர Family Friend ட Guest House ஒண்ணு Outer ல இருக்கு. பெரிய பெரிய Party அங்கதான் ரகசியமா நடக்கும். பெரிய ஆளுங்களுக்கு, தான் கிட்ட மாட்டுன பொண்ணுங்களை Supply பண்ணி தன்னோட காரியம் எல்லாம் சாதிச்சிக்குவான். நிறைய பொண்ணுங்க பாவம் இவனால் சீரழிஞ்சி போயிட்டாங்க. மறை முக வேலையெல்லாம் அங்க Guest House ல தான் நடக்கும். அவனுக்கு Family R S Puram ல இருக்கு. Wife ஒரு பையன் Fifth படிக்கிறான். Wife நல்ல பசையுள்ள Family. அவங்க Side பெரிய ஆளுங்களை வச்சி நிறைய காரியம் சாதிச்சிக்குறான். பொண்ணுங்க Matter வீட்ல தெரியாது னு நினைக்கிறேன். ஏன்னா Family ட வெளியே வரும் போது பம்மிகிட்டு, அவ்வளவு நல்லவன் மாதிரி வேஷம். இவனோட Office, இதர வண்டவாளமெல்லாம் அவன் Wife க்கு அவ்வளவா தெரியாது.

நந்தா முரளி யை பாராட்டி,
சூப்பர் டா, செமயா Information Collect பண்ணியிருக்க.

சரி என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.

முரளி, நீ நான் ரவி இப்ப வெளியே போய் எங்காவது ஒரு நல்ல காஃபி ஷாப் ல போய் Discuss பண்ணலாம். இங்கே Office ல் வேணாம்.

காஃபி ஷாப்..

என்ன பண்ணலாம்னு நாங்கள் யோசிக்க.. ஆளை வச்சி ராமை தூக்கி, தாக்கி அவனை ஒரு 6 மாசம் எழுந்திரிக்க முடியாமல் பண்ணிடலாம்னு நந்தா Idea சொல்ல..

முரளி.. அதெல்லாம் சரிப்பட்டு வராது. Police Case ஆகும். நீங்க வேற யாரோ இதுல Ladies சம்பந்தப் பட்டிருக்காங்கன்னு சொல்றீங்க.. அவன் திரும்பவும் வந்து Torture கொடுப்பான்.
அவனாவே எந்த வித Problem மும் பண்ணாமல் விலகி இருக்க, என் கிட்ட ஒரு நல்ல Plan இருக்கு.

ஓகே முரளி சொல்லு என்று நந்தா அவனை உற்சாகப்படுத்த..

முரளி மறுபடியும் ஃபைலில் இருந்து ஒரு ஃபோட்டோ வை எடுத்து காண்பிக்க நானும் நந்தாவும் பார்த்தோம். ஒரு அழகான இளம் வயது பெண் Half Size Photo, Red Saree with Sleeve less Red ஜாக்கெட், Red Lipstick மிக அழகாக இருந்தாள்.
நந்தா.. யாரு இந்த Lady முரளி?.

முரளி சிரித்து கொண்டே First இது Lady யே கிடையாது என்று இன்னொரு Photo வை காண்பிக்க ஒரு நல்ல வசீகரமான இளைஞன். அதுதான் இது என்றான்.

எங்களால் நம்பவே முடியவில்லை. அசந்து போய் விட்டோம். ஒரு ஆம்பளை இப்படி பெண்ணாக அதுவும் இவ்வளவு அசத்துற அழகாக..‌ தீடீரென்று Doubt எனக்கு வந்தது.
உடனே முரளி யிடமும் இவங்க Transgender ஏதும்..

முரளி சிரித்து கொண்டே..அதெல்லாம் இல்லை சார்.‌ இவன் பேர் சுரேஷ். பிறந்தது என்னவோ Thrissur Kerala, But சின்ன வயசிலேயே இங்கே கோவை வந்தாச்சு. எங்க Team தான். இதுக்கு மேல Reveal பண்ண மாட்டேன். Sorry.

Okay.. okay.. முரளி, But இப்ப இவளை Sorry இவனை வச்சு என்ன Plan?
ரவி Sir, நம்ம ராம் Ladies னா பயங்கர weak.. நாம இந்த சுரேஷை வச்சு ஒரு Trap பண்ண போறோம்.‌ எங்க? எப்படி? எப்போ? என்னைக்கு? இதெல்லாம் நம்ம Discuss பண்ணிட்டு ராம் க்கு வலையை விரிக்க வேண்டியது தான்.

எல்லோரும் சேர்ந்து யோசிச்சதில் Place Jupiter Bar, After 2 Days என்று Confirm ஆனது.

அப்படினா நம்ம அதுக்கு முன்னாடியே கொஞ்சம் Preliminary plans சுரேஷை வச்சு Execute பண்ணனும்.

அது என்ன?

Jupiter Bar ல ராம் க்கு கண்ணுல படற மாதிரி நம்ம சுரேஷை Lady Getup ல ராம் அவனை Tempt பண்றமாதிரி ஒரு ரெண்டு நாள் யாரோ Boyfriend கூட Bar க்கு வந்த மாதிரி Setup பண்ணா, அவன் Easy யா விழுந்துடுவான்.‌ சுரேஷ் அதிலெல்லாம் கில்லாடி. Third day அங்க Bar ல ராம் Private Room க்கு இவங்க ராம், சுரேஷ் இரண்டு பேரும் உள்ளே போனவுடன் நாம அப்படியே ராம் ஐ கோழியை அமுக்குற மாதிரி அமுக்கிட வேண்டியதுதான். அதற்கப்புறம் மத்ததெல்லாம் நீங்க பார்த்துக்கோங்க..
அதுக்கு முன்னாடி எனக்கு ராம் Wife கூட சில வேலைகள் இருக்கு. பயப்படாதீங்க.. எல்லாம் நம்ம Action Plan க்காகத்தான்.. நிறைய Details Collect பண்ணனும். முதல்ல சுரேஷை நாளையிலிருந்து Engage பண்ணனும்.

நந்தா முரளி யிடம்.. இதுக்கு சுரேஷ் ஒத்துக்குவானா?

பணம் பாஸ் பணம் டப்பு.. அது எல்லாம் பண்ணும். நீங்க கவலையே படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். கம்மியான Rate ல முடிச்சிடலாம். அதுவும் நந்தா நீ நம்ப Close Friend.. உனக்கு பண்ணாமலா? Trap Plan பண்ற Day மட்டும் Correct ஆ 5 pm Jupiter Bar வந்து நீங்க இரண்டு பேரும் ஒரு Table Reseve பண்ணி உட்கார்ந்துக்கோங்க. பார்த்துக்கலாம்.
Plan ல ஏதாவது Change னா எனக்கு Inform பண்ணுங்க. அதேமாதிரி என் Side ஏதாவது Change நானும் உங்க இரண்டு பேருக்கும் Intimate பண்றேன். I Keep in Touch with You Both. முரளி எல்லாம் சொல்லி முடித்து கொஞ்சம் நேரம் பேசியிருந்து விட்டு எங்கள் Silly Doubts எல்லாம் Clear பண்ணிவிட்டு போனான்.
எங்களுக்கும் இந்த Plan பக்கா Plan னு தோணியது. நாங்களும் கொஞ்ச நேரம் பேசியிருந்து விட்டு கலைந்தோம். எனக்கு கொஞ்சம் மனது நிம்மதியாக தெம்பாக இருந்தது.
Evening மலருடன் Casual ஆக பேசினேன்.‌ அவளும் என்னிடம் நன்றாக பேசினாள். ஆனால் ராம் பற்றி எதையும் என்னிடம் சொல்ல வில்லை. நானும் எதுவும் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ள வில்லை.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com
உங்கள் சிவா.