Sivavin Malare Mounama.. - 14 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 14

Hi,
நான் உங்கள் சிவா,
Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..

அடுத்த நாள் காலை கவிதா விடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது. ராம் திரும்பவும் மெள்ள மெள்ள தன் வேலையை காட்ட ஆரம்பிக்கிறான் என்றும், Work Torture அதிகமாகிறது.. செய்த Work யே ஏதாவது Silly problems சொல்லி மறுபடியும் மறுபடியும் செய்ய சொல்லி Harash பண்ணுகிறான். மலர் பாவம் ரொம்பவும் Torture அனுபவிக்கிறாள். அவனை அடக்க ஏதாவது Plan பண்ணியிருக்கீங்களா? என்று கேட்க,

நான் கவிதா இந்த Matter யை Phone ல் இப்ப பேச வேண்டாம்.. நேர்ல வர்றேன். நீ மலருக்கு தெரியாமல் 11 மணி போல் Canteen பக்கம் வந்துடு என்று சொல்லி நேராக கவிதா வை பார்க்க போனேன்.

எனக்காக கவிதா Wait பண்ணிக்கொண்டிருந்தாள். நான் போனவுடன் என் பின்னால் யாரையோ அவள் கண்கள் தேட, எனக்கு ஏதோ ஒன்று புரிந்தது.
கவிதா மறுபடியும் அந்த ராம் பற்றி சொல்லி, அவனுக்கு ஏதோ Doubt வந்த மாதிரி இருக்கு, அவன் மேல ஆதாரம் இருந்தும் அவனை பத்தி நாங்க Management க்கு Complaint கொடுக்கலைனு.. So உங்களோட Plan என்னவென்று கேட்க,

கவிதா, ஒரு இரண்டு நாள்ல இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துடும். நீயும் மலரும் பயப்படத் தேவையில்லை. இப்படியே ஒரு இரண்டு நாள் Maintain பண்ணுங்க. Just 2 Days தான். நானும் நந்தாவும் இதுக்காக பக்கா வா Plan பண்ணியிருக்கோம். ஆனால் இப்ப என்ன Plan னு Reveal பண்ண முடியாது. சின்ன Doubt வந்தாலும் ராம் Alert ஆயிடுவான். ராம் வழியிலேயே போய் அவனை மாட்ட வைக்கிறது தான் எங்கள் Task. வேலை முடிஞ்சதும் உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்றோம்.

கவிதா ஏதோ கேட்க தயங்குவது போல எனக்கு தோன்ற..
என்ன கவிதா ஏதாவது கேட்கனுமா?

இல்ல அவர் உங்க Friend வரலையா?

நான் உள்ளுக்குள் ஓ அதான் சங்கதியா? என்று சிரித்துக்கொண்டே யாரு? நந்தா வா? அவன் Office விஷயமா கொஞ்சம் பாலக்காடு வரை போயிருக்கான். ஏன் அவனை பார்த்து பேசனுமா? Evening வந்துடுவான். வந்ததும் உன்னய Meet பண்ண சொல்றேன்.

அதை கேட்டதும் கவிதா தலை குனிந்து அழகாக வெட்கப்பட அவள் கன்னங்கள் சிவந்தன.

என்ன இருந்தாலும் பெண்கள் வெட்கப்படும் போது அது தனி அழகுதான்.

நான் சிரித்து கொண்டே சரி நான் கிளம்பறேன் என்று சொல்ல..

பார்த்து ஜாக்கிரதையாக Deal பண்ணுங்க இரண்டு பேரும் என்றாள் கவிதா வெட்கத்துடன்.

மலர் எப்படி இருக்கா? கவிதா

நல்லா இருக்கா.. கவலயேபடாத ரவி. நான் இருக்கேன். நான் பார்த்துக்கிறேன் மலரை. இப்போதைக்கு இந்த Problem Solve ஆனா போதும்.

Office ல் நந்தாவை Canteen ற்கு கூட்டி போய், நான் அவன் முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்க, அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை.
என்னடா இது தீபாவளி இனாம் கேட்குற மாதிரி.. ஈ னு என்னையே பார்த்து இளிச்சிகிட்டிருக்க. என்ன விஷயம்?

ஒண்ணுமில்லை நேத்து நான் University போய் கவிதா வை Meet பண்ணேன். என்று Gap விட, நந்தா புன்னகையுடன் வெட்கப்பட..
பார்ரா.. நீ கூட வெட்கப்படுற.. இருடா ஒரு Selfie எடுத்துக்கறேன். அதை அப்படியே கவிதா வுக்கு அனுப்பி வைக்கிறேன்.
நந்தா இன்னும் வெட்கப்பட பார்க்க இன்னும் அழகாய் இருந்தது.
மவனே இங்கே என்ன பிரச்சினை போயிகிட்டிருக்கு. சைக்கிள் Gap ல கிடா வெட்டியிருக்க.. வாய திறந்து பேசுடா.. எப்பலேருந்து இது?

டேய் ரவி Sorry டா. உன்கிட்ட சொல்லனும்னு தான் நினைச்சேன். இந்த Problem Solve ஆகட்டும்னு Wait பண்ணேன். அன்னைக்கு கவிதா வை நாம University ல வச்சி Meet பண்ணோம்ல..

டேய் எப்ப? இரண்டு நாளைக்கு முன்னாடி..? அப்பவா..?

ஆமாம் அன்னையிலிருந்து தான். அவளை அன்னைக்கி பார்த்ததிலிருந்து Night லாம் மனசை போட்டு பிசையிற மாதிரி.. ஒரு Feeling. அவ எனக்கு Life partner ஆ வந்தால் நல்லாயிருக்கும்னு தோணுச்சு. உடனே அன்னைக்கி Night யே ஃபோன் பண்ணி கவிதாக்கு Propose பண்ணிட்டேன். அவளும் ஓகே சொல்லி Erode ல அவங்க வீட்ல வந்து பேச சொன்னா.. டேய் இதெல்லாம் நல்லபடியா முடிஞ்சி நீயும் மலரும் தாண்டா Erode போய் அவங்க அம்மா கிட்ட பேசனும்.

நான் அப்படியே வாயடைத்து போய் உட்கார்ந்திருந்தேன்.
டேய் நந்தா என்னடா இது, நான் இரண்டு வருஷமா போராடி இப்பதான் மலர் லவ் ஓகே சொல்லி.. இன்னும் Marriage Confirm ஆ னு கூட தெரியலை. எப்படிரா உனக்கு மட்டும்? ஏதோ Instant Love மாதிரி.. டக் டக்கு னு எல்லாம் முடிஞ்சி Tension யே இல்லாமல் Happy ஆ இருக்க. என்னய பாரு...

நந்தா சிரித்து கொண்டே அதெல்லாம் அப்படித்தான்.. இப்ப வா நாம போய் Office வேலையை பார்ப்போம். முதல்ல கவிதா வுக்கு போன் பண்ணிட்டு வந்தர்றேன் என்று அசால்ட்டாக நடந்து சென்றான்.

இதற்குள் ராம் க்கு எதிரான எங்களுடைய Operation Execute ஆக ஆரம்பித்தது. முரளியின் msg மூலம் எங்களுக்கு Frequent ஆக Updated Information வந்து கொண்டே இருந்தது. இரண்டு நாளாக சுரேஷ் Lady Getup ல் தன் இன்னொரு Friend டன் ஏதோ இருவரும் Lovers போல Jupiter Bar ல் ராம் எதிரில் சில்மிஷங்கள் பண்ணி அவன் கவனத்தை ஈர்க்க.. எலி தன்னாலே மெதுவாக பொறியை நோக்கி வர ஆரம்பித்தது.

மூன்றாம் நாள் அன்னைக்கு தான் Final Execution. Evening 5.30 pm க்கெல்லாம் நானும் நந்தாவும் Jupiter Bar ல் ஆஜராகி Beer Order பண்ணி மெதுவாக குடித்து கொண்டே ராம் வரவுக்கு Wait பண்ண, கொஞ்ச நேரத்தில் ராம் வந்து கொஞ்சம் தூரத்தில் Sofa ல் உட்கார்ந்து கொண்டு, ஃபோனை நோண்டிக்கொண்டு யாருக்காகவோ Wait பண்ணிக் கொண்டிருந்தான். Bar ல் அவ்வளவாக கூட்டம் இல்லை. வெளிச்சம் கம்மியாக இருக்க, காதுக்கு இனிமையாக Music ஒலித்து கொண்டு இருந்தது. ஆங்காங்கே விளக்குகள் எரிந்தாலும் இருட்டான குளிர்ச்சியான Atmosphere யே உணர்ந்தோம். கொஞ்ச நேரத்தில் சுரேஷ் Lady Getup ல் Costly Goggles, Hand Bag, Costly Watch, i Phone, ஆளை மயக்கும் Costly Perfume Smell டன் உள்ளே வர, நாங்களே அசந்து போனோம். அந்த Getup ல் சுரேஷை யாராவது ஆண் என்று சொன்னால் சத்தியமாக யாரும் நம்ப மாட்டார்கள். அவன் கவர்ச்சியில் எங்களுக்கே வாயில் எச்சி ஊறியது. சுரேஷ் யாரையும் கண்டுக்காமல் தனியாக மூலையில் போய் உட்கார்ந்து Vodka Order பண்ணி கொஞ்சம் கொஞ்சமாக Sip பண்ணியபடியே Phone ல் Busy யாக இருப்பது போல் இருக்க, ராம் எழுந்து போய் சுரேஷிடம் போய் வழிய ஆரம்பித்து, ஏதேதோ பேசி அவன் பக்கத்தில் உட்கார நாங்கள் அலர்ட் ஆனோம். கொஞ்ச நேரத்தில் அவர்கள் இருவரும் உள்ளே காரிடர் தாண்டி ஒரு Private Room க்குள் போக, 5 mts கழித்து எங்களுக்கு முரளியிடமிருந்து Signal msg வழியாக வர நானும் நந்தாவும் அந்த Room யை நோக்கி செல்ல..‌ நடுவில் வழியில் ஒரு Bouncer ஆல் நிறுத்தப்பட்டோம். எங்களை என்ன? ஏது? என்று அவன் விசாரிக்க, எங்களுக்கு வெல வெலத்து போய்விட்டது. இதற்குள் யாரோ Bearer வந்து அவங்க நம்ம ஆளுதாம்பா, ராம் சார் ஆளுங்க என்று சொல்லி எங்களை விடுவித்து விட்டு கண்ணை காட்டி விட்டு போக, அந்த மங்கலான வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்ததில் நம்ம முரளி தான் Bearer Getup ல் கையில் Serving Plate டோடு.

முரளியின் Intelligent personality எங்களுக்கு அப்போது தெரிந்தது. இந்த மாதிரி யெல்லாம் திடீரென Problems வரும் என்று முன்னாடி யூகித்து, யார் யாரையோ சமாளித்து Bearer Getup ல் உள்ளே வந்து.. வாவ்.. Great.

நாங்கள் அந்த Room க்குள் தட தட வென நுழைய பின்னால் முரளி யும் எங்களுடன் இணைந்து கொள்ள.. முன்னேற்பாடாக சுரேஷ் நாங்கள் வருவதற்காக கதவை திறந்து வைத்திருந்ததால், நாங்கள் உள்ளே நுழைய சுலபமாக இருந்தது.
உள்ளே சுரேஷ் பெண் வேஷம் பாதி கலைந்து வெற்று மார்புடன் நின்று கொண்டிருக்க, ராம் வெறும் Inner மட்டும் அணிந்து ஏற்கனவே குழப்பத்துடன் இருக்க.. மேலும் புது மனிதர்கள் எங்களை பார்த்தவுடன் இன்னும் வெளிறிப்போய் என்ன நடக்கிறது என்று ஒண்ணும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். முதலில் சுரேஷ் ஒரு ஆண், பெண்ணல்ல என்பதையே ராமினால் நம்ப முடியவில்லை.

சுரேஷ் தான் உடம்பில் மறைத்து வைத்திருந்த சின்ன Camera, Hand Bag Camera, Cellphone Camera மூலமாக Room ல் நடந்ததை Video Record பண்ணியதை முரளியிடம் கொடுக்க, முரளி எல்லாம் Correct ஆக வந்திருக்கிறதா என்று Check பண்ணி பார்த்து விட்டு அதை எங்களுக்கும் Forward பண்ண... Video பார்த்தோம். ராம் சுரேஷை Lady என்று கொஞ்சி குலாவி அவன் Dress ஒன்றொன்றாக அவிழ்க்க ஆரம்பித்தது, பின் சுரேஷ் ஒரு ஆண் போல இருந்து ராம் அவனை Homosexual பண்ணுவது போல் இருக்குமாறு சுரேஷ் பக்காவாக நடித்திருக்க.. எல்லாம் கனகச்சிதமாக Record ஆகியிருந்தது. ராம் கொஞ்சம் தெளிந்து.. யாரோ பணம் பறிக்கும் கும்பல் என நினைத்து எகிற..
முரளி முன்னால் வந்து பட்டென்று ராம் கன்னத்தில் ஒன்று விட்டு, மவனே ஏதாவது பிரச்சினை பண்ண.. முதல்ல சுதா அக்காவுக்கு இந்த Video வை அனுப்பி வச்சிடுவேன் என்று சொல்லி, நம்ம சுதா அக்காவுக்கு போன் போடுறேன் கேட்குறியா? என்று முரளி, ராம் Wife சுதா ராணிக்கு போன் செய்து..

மிகவும் மரியாதையாக.. அக்கா நான் முரளி பேசறேன். ராம் மாமா வீட்டுக்கு வந்துட்டாங்களா? நான் இன்னைக்கே தேனி கிளம்பறேன். ஊருக்கு போயிட்டு சித்தப்பா கிட்டயும் அப்பா கிட்டயும் உங்களை வீட்டுக்கு வந்து பார்த்து கோவில் விழா விஷயத்தை சொன்னதை சொல்லிடறேன். நீங்களும் மாமா வும் தேனி வந்தால் நம்ம வீட்டுக்கு கண்டிப்பா வரணும் என்று சுதாவின் தூரத்து உறவினர் போல Close ஆக ஏதேதோ பேச ராமின் முகம் வெளிறியது.

பேசி முடித்து விட்டு ராம் ஐ பார்த்து .
என்ன முழிக்கிற.. உன் ஜாதகமே இப்ப எங்க கையில.. உன்னோட wife சுதாராணி ஊர் தேனி பக்கத்தில.. அப்பறம் உங்க மாமியார் ஊர் கம்பம் எல்லாம் போயி விசாரிச்சு தெரிஞ்சிகிட்டு உங்க தூரத்து சொந்தக்காரங்க மாதிரியே பக்காவா நாங்க ஒரு நாலு பேர் எல்லாம் வேஷம் போட்டு இன்னைக்கு காலைல உன் வீட்டுக்கு போயி டிபன் சாப்பிட்டு ஊர் கோவில் திருவிழா பத்திரிகை வச்சுட்டு வந்திருக்கோம். சுதா அக்கா அப்படியே நம்பிட்டாங்க.. Doubt ஏதும் வரலை. மவனே ஏதாவது பிரச்சினை பண்ண.. முதல்ல இந்த Super Video வை நம்ம சுதா அக்கா க்கு அப்பறமா Social media ல விட்டுடுவோம். ஒழுங்கா இந்த சார் ங்க இரண்டு பேரும் சொல்றதை கேட்டு நடந்துக்கோ..
ஆளைப்பாரு நல்லா சென பண்ணியாட்டம்.. முதல்ல Dress யை போடுறா.. பொம்பளைனா போதும் ஈ னு பல்லை இளிச்சிகிட்டு Dress எல்லாத்தையும் அவுத்துட்டு நிப்ப..
உன் பேர் என்ன சொன்ன?

ராம்..

ஏய் முழு பேரை சொல்லு..

ராமச்சந்திரன் சார்..

முரளி மறுபடியும் ராம் கன்னத்தில் பட் டென்று ஒண்ணு விட்டு..
பேரைப் பாரு ராமச்சந்திரன்.. ஆனா செய்யிற வேலையெல்லாம் கலீஜ் வேலை. மவனே இரு உன்னய வந்து வச்சிக்கிறேன்.

முரளி எங்கள் இருவரையும் பார்த்து சார் நீங்க இவன்கிட்ட உங்களுக்கு ஆக வேண்டிய காரியத்தை பாருங்க.. நாங்க வெளியே நிக்கிறோம். என்று சொல்லி அதற்குள் பாத்ரூம் போய் மறுபடியும் அழகான Lady Getup ல் தயாராகி இருந்த சுரேஷையும் கூட்டி கொண்டு வெளியே சென்றான். சுரேஷும் Hi, Baby.. Bye என்று Lady Husky Voice ல் சொல்லி ராமின் கன்னத்தில் லேசாக தட்டிவிட்டு போனான்.

நானும் நந்தாவும் ராம் மை தனியாக Deal பண்ண ஆரம்பித்தோம்.
ராமிடம் நாங்கள் எங்களை Introduce பண்ணிகொண்டு மலர், கவிதா சார்பாக பேச வந்திருக்கிறோம் என்று சொன்னவுடன் அவனுக்கு அப்போது எல்லாம் புரிந்தது.
அதற்கு முன்னால் நான் ராமின் கன்னத்தில் இரண்டு விட, நந்தாவும் தன் பங்கிற்கு ஒண்று விட்டான். ராமிற்கு பொறி கலங்கி போனது. உடனே ராம் என் கைகளை பிடித்து கொண்டு,

சார் அடிக்காதிங்க, நான் பண்ணது தப்புதான். ஏதோ சபலத்தில புத்தி கெட்டு போய் அந்த மாதிரி அவங்களுக்கு Torture கொடுத்துட்டேன். இனி எந்த தப்பும் பண்ணமாட்டேன். நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். எப்படியாவது உங்க ஃப்ரண்ட் முரளி சார் கிட்ட சொல்லி அந்த Video வை வெளியே விடவேணாம்னு சொல்லுங்க. Main ஆ என்னோட Wife அவங்க வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சதுனா போதும். என்னோட Chapter Close. முரளி சார் க்கு என் Wife வீட்டு Side ஆளுங்க எப்படி பட்டவங்கனு நல்லாவே தெரிஞ்சிருக்கு. வேணாம் சார்.. இவங்க மலர், கவிதா னு இல்ல இனி எந்த Ladies கிட்டேயும் எந்த வம்பும் நான் வச்சுக்க மாட்டேன். Promise. என்னை நம்புங்க ப்ளீஸ், என்று கை கூப்பியபடி கெஞ்ச.. சரி உன் ஃபோனை கொடுடா என்று Open பண்ணி அவன் Secret Folders Open பண்ணி பார்த்தால் ஏகப்பட்ட Ladies Photos, Videos வயது வித்தியாசம் இல்லாமல் அவர்களுக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்தான். எங்களுக்கே ஆச்சரியமாக போய் விட்டது. கொஞ்சம் Surf பண்ணி பார்த்ததில் மலர் கவிதா Photos கூட இருக்க, மறுபடியும் எங்களிடம் ராம் சரியான அடி வாங்கினான். எல்லாத்தையும் including Google Photos, Hidden files உள்ளவற்றை எல்லாம் Erase பண்ண சொல்ல.. அதன் படியே எல்லாவற்றையும் அழித்தான். நாளைக்கு Office Personnel Computer Computer Systems ல உள்ள எல்லா Photos Videos Erase பண்ண சொல்ல எல்லாவற்றிற்கும் சரி என்றான்.

முரளி யை உள்ளே வரச்சொல்ல.. வந்து ராம் முகத்தை பார்த்து, என்ன ராம் சார்? உங்களுக்கு செம பரேடு போல.. முகமெல்லாம் கன்னிப் போய் இருக்கு, இப்ப தான் நீங்க பார்க்க ரொம்ப அழகா இருக்கிங்க என்றான் நக்கலாக. அதையடுத்து நாங்கள் மூன்று பேரும் Discuss பண்ணியபிறகு..

பின் முரளி ராமிடம்..
இதோ பார் உன்னையெல்லாம் நம்ப முடியாது. இவங்க நம்பினாலும் நான் உன்னை நம்ப மாட்டேன். ஏன்னா உன்னய பத்தி விசாரிக்க விசாரிக்க உன்னோட வண்டவாளமெல்லாம் என்ன னு எனக்கு தெரிய ஆரம்பித்தது. அதனால்தான் இனி Future ல அப்பப்ப உன் வீட்டுக்கே வந்து போற மாதிரி உன்னோட Wife Side Relatives Full ஆ Study பண்ணி.. Lucky யா என்னோட ஆளு ஒருத்தன் உங்க Wife Side தூரத்து சொந்தம். அவன் Help ட அவன் Place ல நான் வந்து, உன் Wife யை நம்ப வச்சி.. ஏன்னா உன்னய Watch பண்ணிகிட்டே இருக்கனும். எத்தனை பெண்களோட வாழ்க்கையில விளையாண்டிருக்க. உன்னையெல்லாம்.. வெளியே விடறதே தப்பு. இந்த Video Clips எப்பவும் என் கிட்ட ஒரு Copy இன்னொரு Secret Place ல ஒரு Copy அப்படி பத்திரமாக இருக்கும். ஏன்னா Future ல உன் கிட்ட எனக்கு நிறைய வேலை இருக்கு. உன்னய Warn பண்றேன். நாங்க எல்லாரும் போனதுக்கப்பறம் ஏதாவது ஏடாகூடமா வேலை பண்றது.. இல்ல மறுபடியும் எந்த பொண்ணுங்க வாழ்க்கையில விளையாண்ட, Automatic ஆ உன் Video Upload ஆயிடும். பார்த்துக்கோ.. நான் உன்ன விட மோசமானவன். எனக்கும் எல்லா இடத்திலும் அடிமட்டத்திலேயிருந்து ஆளுங்க இருக்காங்க. பார்த்து இனிமேலாவது பதவிசா நடந்துக்கோ.

எங்களை பார்த்து முரளி சரி, என் வேலை முடிந்தது. நான் Bar க்கு வெளியே Wait பண்றேன். என்று Dress Change பண்ணிக்கொண்டு.. எங்களை பார்த்து Sir, நாளைக்கு இவன் என்ன பண்ணனும் னு Clear ஆ சொல்லிடுங்க என்று சொல்லி விட்டு Room யை விட்டு வெளியே போனான். முரளி சொன்னது செய்தது எல்லாம் Correct என்று எங்களுக்கு பட்டது.

ராமிடம் நாளைக்கு நாங்க University Office வருவோம். நீ என்ன செய்யனும் னு இப்ப உனக்கு சொல்லுவோம். இன்னொன்னு உனக்கு 15 நாள் தான் Time. என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எங்களுக்கு தெரியாது. இங்கே கோயமுத்தூர் லேருந்து வேற தூரமா எங்காவது Transfer வாங்கிட்டு ஓடிப்போயிடு. நாளைக்கு மட்டும் Office வா. உன்கிட்ட சில வேலைகள் இருக்கு. அப்பறம் 15 நாள் Office க்கு Leave போட்டுட்டு Sincere ஆ Transfer க்கு Try பண்ணிட்டு மாத்தலாகி போயிடு. உனக்கு தான் நல்லது என்று முடிக்க..
ராம் கோவில் மாடு மாதிரி எல்லாவற்றுக்கும் தலையாட்டினான்.

அதன் பின்னர் நாங்கள் முரளி, நந்தா மூவரும் வெளியே ஒரு Restaurant போய் சாப்பிட்டபடியே இந்த Operation Successful ஆக நல்லபடியாக Execute ஆனது என்று Happy ஆக பேசிக் கொண்டு Celebrate பண்ணோம். ஆனால் முரளி மட்டும் அந்த ராமை எப்போதும் நம்ப வேண்டாம்.. அவனால் ஏதாவது Problem னா தன்னை உடனே Contact பண்ண சொன்னான். எனக்கென்னவோ இனி ராம் Silent ஆகி விடுவான் என்றே தோன்றியது. முரளி க்கு பணத்தை Settle பண்ணி விட்டு Thanks லாம் சொல்லிவிட்டு கலைந்தோம்.

நந்தாவிடம் இந்த Matter நாளை வரை Secret ஆக இருக்கட்டும். கவிதா விற்கு ஏதும் சொல்ல வேண்டாம். நாளைக்கு அவங்க இரண்டு பேருக்கும் ஒரு Surprise ஆக இருக்கட்டும் என்று சொன்னேன். அவனும் தம்ஸ்அப் பண்ணி ஓகே என்றான்.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
Please mail to siva69.com@gmail.com

உங்கள் சிவா.