சரியாக அந்த இரட்டைக் கொம்பனின் ஆழ்ந்த மவுன வழிபாட்டிற்கு நேர் முகத்தில் நடந்து சென்றாள் கலிக் தேவதை, கொடூர தீய சக்திக்கும் கலிக் தேவதைக்கும் நடுவே ஒரு சூலம் ஊண்டப்பட்டு இருந்தது,
அது முழுவதும் கருப்பு நிறமாக இருந்தது அதன் ஓரங்களில் ஒளி வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்தது. அது கலிக் தேவதையின் மேல் இருந்து வந்த ஒளிப்பட்டதால் ஓரங்கள் மின்னியது.
மிகுந்த கருமை நிறம் கொண்ட அந்த சூலம் திடீரென முழுவதுமாக ஒளி பெற்றது. அவ்வொளி பார்ப்பவர்களின் கண்களை கவர்ந்தது. நான்கு தேவதைகளும் அந்த வசிய ஒளியினை கண்டனர். ஆனால் கலிக் தேவதை அச்சூலத்திற்கு மிக அருகில் இருந்தாள்.
இவற்றை கவனித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களும், தீய சக்திகளும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
கடுமையான தவத்தில் ஆழ்ந்திருந்த அந்த கொடூர உருவம் கொண்ட தீய சக்தியின் கையில் உள்ள சூலம் தான் இது என்று தேவதைகள் உணர்ந்திருந்தார்கள்.
இச்சூலத்தை எடுத்து தவத்தை மேற்கொண்டு இருக்கும் அந்த தீய சக்தியின் மீது வீசினால், தவத்தை கலைத்து விடலாம் என்ற எண்ணத்தில் கலிக் தேவதை துணிச்சலாக அச்சூலத்தில் மீது கையை வைக்க முற்பட்டாள்.
ஆனால் அச்சூலத்தின் அருகே யாரும் செல்ல முடியாத பொழுது, இவள் மாத்திரம் எவ்வாறு சென்றால் என்று தீயசக்திகளுக்கும், விலங்குகளுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
நடக்கவிருக்கும் விபரீதத்தை உணர்ந்த மற்ற தேவதைகள், கலிக் தேவதையை காக்க முடியாததை எண்ணி பதட்டத்துடன் அவளை நாமத்தை கூறி அழைத்த படியே இருந்தனர்.
மூன்று தேவதைகளும் மாறிமாறி 'கலிக்' தேவதையின் பெயரை கூறி அழைத்தும் அவள் செவி மடுக்கவில்லை, அவள் முழுவதுமாக தனது மனதின் போக்கையும் புத்தியையும் இழந்திருந்தாள்.
பல யுக காலங்கள் வாழக்கூடிய நீடித்த ஆயுள் கொண்ட ஒளி வடிவம் உடைய தேவதையான கலிக், அச்சூலத்தை தொட்ட மாத்திரத்தில், அச்சூலத்தின் ஆற்றல் வெளிபட்டு, தனது வெண்மை நிறத்தை இழந்து உடல் முழுவதும் கருமை நிறம் பரவி உடலின் உள்ளே தீ பிடித்து எரிந்து கருமை நிற சாம்பலாக மாறி பஸ்பமானாள்.
இதை நேரில் கண்ட மற்ற மூன்று தேவதைகளும் கலிக் என்ற ஆவளது பெயரைக் கூறி கதறி அழுதபடியே அவ்விடத்தை விட்டு பறந்து சென்றனர்.
கலிக் தேவதையின் உருவம் முழுவதுமாக எரிந்து, இறுதியில் ஒரு சிறு நெருப்புப் பொறியாக அது மாறி தவத்தில் ஆழ்ந்திருந்த இரட்டை கொம்பும், கிரீடமும் உடைய கொடூர உருவம் கொண்ட தீய சக்தியின் நெற்றியில் பட்டது.
அத்தீப்பொறி அதன் நெற்றியில் பட்ட மாத்திரத்தில் அதன் கொடூர உருவம் மாறி, கருமை நிறமெல்லாம் மனித உடல் நிறம் பெற்றது, அவற்றின் கொம்புகளும் கீரிடமும் மறைந்தன. மிகுந்த அழகிய இளைஞனின் உருவமாக தவக்கோளத்தில் நின்றது.
பெண்கள் யார் கண்டாலும் அவன் உருவத்தின் அழகில் மதிமயங்கி விடுவார்கள். ஆண்களும் கூட இப்படிப்பட்ட அழகன் பூமியில் உண்டா! என்று எண்ணக் கூடிய அளவிற்கு இருந்தது அந்த இளைஞனின் உருவம்.
மங்களா, மௌலா, சாலும் ஆகிய மூன்று தேவதைகளும் அழுது கூக்குறல் இட்டபடியே வானவர்களின் தலைவரான கேப்ரிளை பார்க்கச் சென்றனர்.
சர்வத்தையும் ஆட்டிப்படைக்க கூடிய சர்வ வல்லமை உள்ள இறைவனின் அடிமையும் அவன் கட்டளைக்கு அடிபணிந்து அதை செய்து முடிக்கும் மிகுந்த சக்தி கொண்ட வானவர் தான் கேப்ரில்.
வானவர்களின் வான் கோட்டையில் நின்ற இரு காவலாளிகளின் ஒருவரின் பெயர் சலீம் மற்றொருவரின் பெயர் இந்திரன். இந்த மூன்று தேவதைகளையும் தடுத்து நிறுத்தினர். தங்கள் வந்த காரியம் என்னவென்று அவரிகளிடம் கேட்க,
தேவதைகள் நடந்தவற்றை எடுத்துக் கூறி வானவர்களின் தலைவர் கேப்ரில் அவர்களை சந்திக்க வேண்டும் என்றனர்.
அதற்கு அவர்கள், "மரியாதைக்குரிய கேப்ரியல் அவர்கள் இப்போது இறைவழிபாட்டில் உள்ளார் அவரை காண இயலாது" என்றார்கள்.
அதற்கு மௌலானா, " ஐயோ!! வானவர்களின் தலைவரான கேப்ரியல் அவர்களின் வழிபாடு முடிவதற்குள் பூமியில் 100 வருடங்கள் கடந்து விடுமே", என்று அந்த வானவர்களிடம் கூற,
அதற்கு இந்திரன் என்ற வானவர், "பூமியில் நூறு வருடம் கழிந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்கள்தான் நித்தியமாக வாழும் தேவதைகள் ஆயிற்றே, எது நடந்தாலும் அது இறை சித்தத்தோடுதான் நடக்கும்".
"வானவர் அவர்களே, பூமியில் இதுவரை ஒரு தேவதையும் அழிந்ததில்லை இன்றுதான் ஒரு தேவதை அழிந்து உள்ளார். இதிலிருந்து தீய சக்தியின் ஆளுமை பூமியை தாண்டி வானோகத்திலும் பாயும் என்ற அச்சம் உள்ளது.
எங்களின் நிலைமையை இவ்வாறு என்றால் பூமியில் வாழும் உயிரினங்களின் நிலைமை என்ன என்று யோசித்துப் பாருங்கள். பூமி முழுவதும் சீரழிந்து சின்னாபின்னம் ஆகிவிடும். தயவுசெய்து சூழ்நிலையை புரிந்து கொண்டு வானவர் தலைவரான கேப்ரிலை சந்திக்க எனக்கு அனுமதி தாருங்கள்" என்றாள் மௌலா.
தேவதைகளை நோக்கி வானவர் சலீம் அவர்கள், "தேவதைகளே எது நடந்தாலும் இறை சித்தம் என்று ஏற்றுக்கொண்டு மனதை தேற்றி கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பது போல் மதிப்புக்குரிய கேப்ரியல் அவர்களை சந்திப்பது சுலபமான காரியம் அல்ல. அவர்களின் வழிபாட்டை தடுத்தால் அவர் சபித்து விடுவார். உங்களால் நாங்களும் அச்சாபத்திற்கு ஆளாவோம். உடனே இங்கிருந்து கிளம்புங்கள் இல்லாவிட்டால் உங்களை நாங்களே தண்டித்து விடுவோம்" என்றார் கோபமாக.
இவ்வார்த்தையை அந்த வானவரின் வாயில் இருந்து கேட்ட பொழுது மனம் நொந்து மூவரும் திரும்பிச் சென்றனர். அப்பொழுதுதான் மௌலாவிற்கு பழைய நினைவுகள் தோன்றிற்று.
இது வரை தோழியின் மரண சோகத்தில் ஆழ்ந்திருந்தவள். முன்பு ஒரு முறை வானவர்களின் தலைவரான கேபிரிலை சந்தித்த ஞாபகம் இப்பொழுது அவளுக்கு தோன்றிற்று.
அவளது சிந்தனையில் அவர்களின் சந்திப்பின் உரையாடல் ஓடியது. மற்ற இரு தேவதைகளும் அழுது கொண்டிருக்க இவள் மட்டும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு
பாரிஜாலன் என்ற அரசன் பூமி வடக்கு பகுதியைச் சார்ந்த நாடுகளை ஒன்றிணைத்து, உத்தர கண்டம் என்று நாட்டிற்கு பெயர் வைத்து ஆண்டு கொண்டு வந்தான்.
அவன் இறை பக்தி மிக்கவன் நேர்மையாளன், பெண்களை மதிக்க கூடியவன், எதிரியை மன்னிக்கக் கூடியவன், மக்களின் தேவைகளை அறிந்தவன், நாட்டினில் பசியும் பட்டினியும் இல்லாத அளவிற்கு தனது நாட்டினை சிறப்பாக ஆண்டு வந்தான்.
திருடியவருக்கும் கொலை செய்தவர்களுக்கும் இன்னும் கடுமையான தவறுகள் புரிந்தவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கினார். இதனால் நாட்டில் குற்றங்கள் குறைந்து போயின. பூமி முழுவதும் அவன் புகழ் பறந்தன.
இறைவனின் அருள் பெற்றவனாக இறை பக்தி மிக்கவனாக, அவனது ஆட்சியில் தேவதையெல்லாம் தன்தன் கடமைகளை செய்தது இயற்கை மலை பொழிய மறுக்கவில்லை, வானவர்களும் அவனுக்கு துணை இருந்தார்கள்.
இதைப் பார்த்துப் பொறுக்காத தீய சக்தியின் தலைவன் இரட்டை கொம்பன். அவனை வழி கெடுக்க காத்துக் கொண்டே இருந்தான். பொதுநலவாதியை சுயநலமாக்குவதும், பணம், பெயர், புகழுக்கு ஆசை கொள்வதும், சொத்தின் மீது பற்று வைப்பதும், அவனுடைய வலையில் விழுந்ததற்கான அறிகுறிகளாகும்.
இருப்பினும் இரட்டை கொம்பனால் அந்த பாரிஜால் அரசனை சுலபமாக வழி கெடுக்க முடியவில்லை.
பின்பு தான் தீய சக்தியின் தலைவனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. வானவ தேவதைகளான வெண்ணிற ஆடைப் பெண்களைக் கொண்டு தான் இவனை வழி கெடுக்க முடியும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதை செயல்படுத்த தொடங்கினான்
உத்தர கண்டம் நாட்டின் காட்டோரப் பகுதியில் ஒரு மரம் வெட்டும் தொழிலாளி தான் சிராஜ் என்பவன். இவன் ஒரு வெகுளி நல்லது கெட்டது அறியாதவன். கிடைப்பதை வைத்துக் கொண்டு போதும் என்ற திருப்தி உடையவன்.
சுருக்கமாகச் சொன்னால் மக்கள் எல்லாம் சொல்லும் ஏமாளி பிழைக்கத் தெரியாதவன் என்று சொல்லக்கூடிய நல்லவனாவான்.
இவன் ஏழையாக இருந்தாலும் உதவி என்று கேட்டு வந்தால் இருப்பதை தருபவன், பல பேர் இவனிடம் பொய் சொல்லியே பணம் வாங்கி வந்தனர். இவனுக்கு பூமியில் எதன் மீதும் ஆசையே இல்லை.
தீய சக்திகளின் தலைவனான இரட்டைக் கொம்பனுக்கு மிகுந்த மகிழ்ச்சி நாம் தேடும் அரசனைச் சாய்க்கும் சக்திமிக்க ஒருவன் கிடைத்து விட்டான் என்று
ஆம் பூமியில் நல்லவர்கள் நமது பார்வையில் ஏமாளிகளும், பிழைக்கத் தெரியாதவர்களும் ஆவார்கள். ஆனாலும் தீய சக்தி மற்றும் நன்சக்திகளின் பார்வையில் அவர்கள் உயர்ந்தவர்கள்.
இவனுக்கு திருமணமாகி ஒரு வருடம் இருந்தது. திடீரென்று அவன் மனைவிக்கு ஒரு விதமான நோய் ஏற்பட்டு நாட்டிலுள்ள அனைத்து வைத்தியரிடமும் சென்று பார்த்தும் அந்த நோயிலிருந்து குணமாகவில்லை. இறுதியில் மரணம் அடைந்தாள். அது அவன் மனதை மிகுந்த சோகமாக்கியது.
அவன் தன் மனைவியை அளவு கடந்து நேசித்தான். இறக்கும் தருவாயில் அவனிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டாள். .
இரட்டைக் கொம்பன் தான் அவனுடைய மனைவியின் உட்பகுந்து நோயை ஏற்படுத்தினான். மேலும் வாக்குறுதியை வாங்க வைத்ததும் அவனே.
அவள் இறக்கும் தருவாயில் தன் கணவனை அழைத்து, "எனக்கு ஒரு வாக்குறுதி தாருங்கள், நான் இறந்த பிறகு நீங்கள் மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் பூமியில் வாழும் பெண்களை அல்ல. வெண்ணிற ஆடை உடுத்திய தேவதைகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் " என்று கூற,
அதற்கு சிராஜூம் தன் மனைவியிடத்தில், "சரி, நிச்சயமாக உன் ஆசை அதுவென்றால் அதை நிறைவேற்றுகிறேன்" என்று வாக்களித்தான். வாக்களித்த மாத்திரத்தில் அவள் மரணம் அடைந்தாள்.
காலத்தால், மனைவியை இழந்த துக்கம் சிறிது சிறிதாக அவனுக்கு குறைந்தது. அவன் மனதிற்குள் பூமியில் பெண் தேடுவதென்றால் சுலபம். ஆனால் இந்த வெண்மை நிற ஆடை உடுத்திய தேவதைகளை நான் எங்கு சென்று தேடுவது என்ற யோசனையிலேயே காலங்கள் ஓடின.
ஒரு நாள் காட்டிற்கு மரம் வெட்ட சென்ற பொழுது அவன் எதிரே ஒரு அந்தணர் தென்பட்டார். அவர் பார்ப்பதற்கு முகம் பிரகாசமாகவும் தேஜஸ் உடையவராகவும் இருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் சிராஜ் இரு கை கூப்பி வணங்கி அவரை வரவேற்றான்,
தனது உணவுக்காக சேகரித்து வைத்த பழங்களையும் தேனையும் அவருக்குத் தந்து பருக சொன்னான்.
"அந்தணரே, இந்தக் காட்டினில் நுழைந்து எதை நோக்கிச் செல்கிறீர்கள். பொழுது சாயும் வேலை ஆகிவிட்டது, இனி காட்டின் உள் சென்றால் இருள் சூழ்ந்து விடும். ஆகையால் நீங்கள் இன்று என்னுடைய வீட்டினில் தங்கிக் கொள்ளலாம். நாளைப் பொழுது உங்கள் பயணத்தை தொடருங்கள்" என்றான் சிராஜ்.
தொடரும்,,,,,,,,