DNA Murders - 3 in Tamil Thriller by KATHIRMATHI books and stories PDF | DNA கொலைகள் - 3

Featured Books
Categories
Share

DNA கொலைகள் - 3

                      DNA☠️கொலைகள்-3


 பலவித அவஸ்தை போராட்டங்களுக்குப் பின் திறக்கப்பட்ட அந்த சவப்பெட்டியைக் கண்டு முதலில் அலறியவன் தோட்டக்காரன் ஜெபாஸ்டியன்.அய்யோ அம்மா... நீங்களா..

ஜெபாஸ்டியன் அலறியதும் அதுவும் அம்மா நீங்களா என்று அலறியதை கேட்டதும் கூடியிருந்த கூட்டம் மேலும் பதற்றமாகி உள்ளிருந்த உடலை பார்க்க முண்டியடித்து முன்னே வந்தது. கூட்டத்தை ஒருவழியாக சாமளித்துவிட்டு ஜெபாஸ்டியனிடம் திரும்பிய இன்ஸ்பெக்டர் ரவி.,

யாரு யா இது?

அய்யா.. இவங்க ஃபாதரோட சிஸ்டர் ரோஸ்லின் மேரி. ஆனா இவங்க எப்படி இங்கேனு தெரியலையே..

ஃபாதரோட சிஸ்டரா?.. நீ சொல்றதை பார்த்தா இவங்க இங்க இருக்குற மாதிரி தெரியலையே.

ஆமாங்க அவரோட அக்கா லண்டன்ல இருக்குறாங்க.

இவங்க இங்க வரத பத்தி உனக்கு எதுனா தெரியுமா? இதைப் பத்தி ஃபாதர் ஏதாவது.. எப்பவாச்சும் சொன்னாரா?

இல்லைங்களே.. இவங்க வரது பத்தி எதுவும் தெரியாதுங்களே.. ஆனா...

தோ பாரு ஜெபாஸ்டியன் உனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் மறைக்காம ஒன்னுவிடாம சொல்லிடு. இல்லைனா ஏதாவது சின்ன சிக்கல்னா, உன்மேல தப்பேயில்ல, நீ குற்றமே செய்யலைனாலும் அப்புறம் தேவையில்லாம நீயும் மாட்டிப்ப. அதனால உனக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் கொஞ்சம் யோசிச்சு பார்த்தாச்சும் சொல்லிடு.

அய்யா என்னென்னமோ சொல்லி பயமுறுத்துறீங்களே. ஜீசஸ் மேல சத்தியமா எனக்குத் தெரிஞ்சதெல்லா சொல்லிடறேங்க.

சொல்லு வீணா பிரச்சனையில மாட்டிக்காத.

அய்யா, இது கிறிஸ்டியன் சர்ச்-னாலும் இங்க மத்த மதத்துக்காரங்களும் வேலை பார்க்கறாங்க.

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

இருக்குதுங்கைய்யா சொல்றே. இங்க சுந்தரம்னு பழைய கணக்கு வாத்தியாரு சர்ச்சோட கணக்கு வழக்க பார்க்கறாரு. கணக்கு வழக்கு மட்டுமில்லாம ஃபாதர் எல்லா விஷயத்தையும் அவர்க்கிட்ட பேசுவாரு. வாத்தியாரா வேல பாத்ததால அவரும் ஃபாதருக்கு யோசனையெல்லாம் சொல்லுவாரு.

சரி.. விஷயத்துக்கு வா..

அவர்ட்ட ஃபாதர் ஜெபமாலை கூட்டத்துக்கு போறதுக்கு முன்னாடி ஒருநாளு அவங்க அக்காவ பத்தி வருத்தமா பேசிக்கிட்டிருந்தாரு.

என்னன்னு பேசிக்கிட்டிருந்தாரு.

ஜெபாஸ்டியன் சொல்ல ஆரம்பித்தான்.

சுந்தரம்: ஃபாதர் ஏதாவது பிரச்சினையா. யார்க்கிட்ட கோபமா நீ சொல்றத கேட்க மாட்ட உன் இஷ்டத்துக்குதா செய்வ, இருக்குற நிலைமையையும் புரிஞ்சிக்க மாட்டனு பேசிக்கிட்டிருந்தீங்க. நான் தெரிஞ்சிக்கலாம்னா சொல்லுங்க.

ஃபாதர் மோசஸ்: எல்லா எங்க அக்காக்கிட்டதா.

அப்படி என்ன பிரச்சினை?

பின்ன என்னங்க சுந்தரம், அக்கா லண்டன்ல இருக்காங்க. எந்த மிஷன்லயும் மிங்க்கிள் இல்ல. சர்ச்சுக்கு போறாங்க வராங்க அவ்வளவுதான். இதுல ரெண்டு முறை ஸ்ட்ரோக் வந்து ஆண்டவர் அருளால பிழைச்சிட்டாங்க. எதுனா ஒன்னுனா சட்டுன்னு போய் பார்க்கற மாதிரியா இருக்கு. அதுவுமில்லாம எங்கப்பா எழுதி வச்ச உயிலும் அப்படியே இருக்கு. நானும் போனமுறை போனப்ப என்னோட பங்கையும் அக்காவுக்கு பவர் ஆஃப் அட்டர்னி போட்டு கொடுத்துட்ட. நான் லண்டனுக்கு வரேன் எல்லாத்தையும் சேல்ஸ் பண்ணிட்டு வந்துடலாம்னு சொன்னா கேட்க மாட்டேங்கறாங்க. போன தடவையே லாயர் சொன்னாரு அங்கயே இருக்கறது அங்காவுக்கு சேஃப்டி இல்ல, எனக்கு கூட இருக்கறவங்க மேல சந்தேகமா இருக்கு, அதனால அக்காக்கிட்ட எடுத்து சொல்லி இந்தியாவுக்கு கூட்டிட்டு போயிடுங்கனு. அதனால எல்லாத்தையும் வித்துட்டு இங்க வந்துடலாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேன்ங்கறாங்க.. இல்ல எல்லாத்தையும் டாக்குமெண்டேஷன் செஞ்சிட்டாச்சும் வந்துடலானாலும் கேட்கமாட்டேங்கறாங்க. லாயர் பயப்படற மாதிரி ஏதாவது ஆயிடுச்சுனா அப்புறம் அம்மான்னாலும் ஆண்டவரேனாலும் வராதே. அதுமட்டுமல்லாம நானும் கேர்லெஸா இருந்த மாதிரி ஆகி எனக்கும் குற்ற உணர்ச்சி இருக்குமில்ல.

சரிங்க ஃபாதர் நான் வேணும்னா அக்காக்கிட்ட பேசி பார்க்கட்டுங்களா?

பேசுங்க, ஆனா இப்ப வேணாம். ஏன்னா நீங்களே சாதாரணமா ஃபாதர் மூடவுட்டா பேசிக்கிட்டிருந்தாரு.. நான் என்னன்னு கேட்டதுக்கு அக்கா கூடத்தான் பேசிக்கிட்டிருந்தேன்னுதா சொன்னாரு என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க சிஸ்டர்னு கேட்டீங்கனாக்கூட ஏன் அவன் பேச சொல்லி அப்புறமா என்னை கன்விஸ் பண்ணச் சொன்னானு கேட்பாங்க. அதனால கொஞ்ச நாள் போகட்டும்.

சரிங்க ஃபாதர்.

இது மட்டும் தாங்க எனக்குத் தெரியும். மத்ததெல்லாம் தெரியாதுங்க என்று ஜெபாஸ்டியன் சொல்ல, இன்ஸ்பெக்டர் ரவி கேட்டார்.,

சரி இது மட்டும் உனக்கு எப்படித் தெரியும்.

இந்த விஷயத்தை பேசும் போது நா ஃபாதரோட ரூமை பெருக்கிக்கிட்டு இருந்தேனுங்க.

இன்ஸ்பெக்டர் ரவி யோசிக்க ஆரம்பித்தார். அக்காவோட உடல்நிலைனாலும் கூடவே இவரது சொத்துங்கறதும் சம்பந்தப்படுதே. ஜபமாலைக்கு போன ஃபாதரும் இன்னும் வரல.. ஃபோனையும் எடுக்கல. ஒருவேளை இதுக்கும் அதுக்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ?... யோசிச்சு பார்த்தா ஒன்னுக்கு ஒன்னு தொடர்பிருக்கற மாதிரியும் தெரியுது. அப்படி இருக்காதுங்கற மாதிரியும் தோனுது. இப்பதான் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குதுனே தெரியலையே. இல்ல ஒருவேளை சம்பந்தமே இல்லாம இந்த மூனுத்தையும் போட்டு நாமதா கோ-இன்சைட் பண்ணிக்கறமோ என்று சிந்தித்தவர் சரி கண்டுபிடிக்கலாம் என்று அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமானார்.

அவரின் அழைப்பின் அடுத்த பத்தாவது நிமிடத்தில், தடவியல், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் அதன் பயிற்சியாளர் ஆகியோர் அங்கு குழுமினர்.

அனைவரும் அவர்களது பணியில் தீவிரமாக, ஏதேனும் தடயம் கிடைக்கும். பிறகு இது கொலையா இல்லை இயற்கை மரணமான்னு கண்டுபிடிக்கணும். ஆனா ஒன்னு. எப்படி இயற்கை மரணமா போகும்? அப்படினா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்ல அதனால கண்டிப்பா இது கொலைதான். என்று மனதை ஓட்டிக்கொண்டே இருந்தவரிம் சிறிது நேரம் கழித்து முதலில் தடவியல் நிபுனர் வந்து சாரி சார் உருப்படியா ஒன்னும் கிடைக்கலை. அதுகூட கம்மிதான் ஒன்னுமே கிடைக்கலைனுதான் சொல்லனும். அந்த அளவுக்கு பிளேம் பண்ணி செஞ்சிருக்காங்க என்றார். கைரேகை நிபுணர் வந்து சார் ஒரு ஸ்ட்ரக்ச்சரா இல்லாம டிஸ்ஸார்டரா ரைட் அன்ட் லெஃப்ட் ஹேண்ட்ஸோட கைரேகைகள் மட்டும் கிடைச்சிருக்கு பட் எங்களுக்கு என்னவோ அது இருட்டுல தடுமாறி விழுந்த தோட்டக்காரனோடதாதான் இருக்கும்னு தோனுது. இருந்தாலும் அவன் கைரேகையை ஒருமுறை வாங்கிக்கலாம் என்று சொல்லி தோட்டக்காரன் ஜெபாஸ்டியனின் கைரேகையும் வாங்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் பின் மற்ற நிபுணர்கள் வந்து ஒருவர் பின் ஒருவராக உதட்டை பிதுக்கி சாரி சார் என்று சொல்ல இன்ஸ்பெக்டர் ரவி மனம் வெறுத்துப் போனார்.

கொலைகாரர்கள் உள்ள வந்ததுதா வந்துட்டாங்க ஆனா கண்டிப்பா திரும்பிப் போன வழியாவது தெரியுமில்ல. அப்ப ஏதேனும் சின்ன தடயமாவது கண்டிப்பா கிடைக்கும் என்று அவர் இறுதி நம்பிக்கையாக வைத்திருந்த மோப்ப நாயும் அங்குமிங்கும் சிறிது தூரம் சுற்றி விட்டு காம்பௌன்ட் சுவர் வரை சென்று மூக்கை நிமிர்த்தி இரண்டு மூன்று முறை மோப்பம் பிடித்தது. ஆனால் சந்தேகப்படும்படி அதற்கே ஒன்றும் தோன்றாததால் திரும்பி  வந்து அமைதியாக  படுத்துக்கொண்டது.

சவப்பெட்டியைத் திறந்ததை தவிர இன்றைக்கு மற்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய ரவி மிகவும் சோர்ந்தார். என்னடா இது எஸ்.ஐ-யில் இருந்து இன்ஸ்பெக்டர் ஆனதும் முதல் கேஸ். ஆனால் ஆரம்பமே இப்படி திணறடிக்குதே என்று யோசித்தவர், எந்தத் தடயமும் கிடைக்காமல் மனது சலித்து போனாலும் விடமாட்டேன்டாநீ எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் விடமாட்டேன். ஒரு வழிபாடு பண்ற இடத்துல உன்னோட வேலையைக் காட்டியிருக்கன்னா.. போலிஸ்காரன்னா யாருன்னு உனக்கு நான் காட்டுறேன் என்று மனம் பொறுமிக் கொண்டிருந்தார்.

அப்போது ஹெட் கான்ஸ்டபில் கனகாபிஷேகம் வந்து, என்ன சார் ஒரு தடயமும் கிடைக்கல. சவப்பெட்டியில் எசகு பிசகா கிடைச்ச கைரேகை கூட தோட்டக்காரனுதாத்தா இருக்கும்னு சொல்லிட்டாங்க. அதைத் தவிர வேறெதுவும் கிடைக்கல.. அப்படியே இருந்தாலும் அவங்கிட்டயும் பதிவு வாங்கியாச்சு. ஆனாலும் உருப்படியா எதுவும் கிடைக்கலையே என ஆதங்கப்படற மாதிரி தெரியுது. அதுவும் நீங்க இன்ஸ்பெக்டரானதும் முதல் கேசு..

நீங்க சொல்றதும் உண்மை தான் கனகம். என்ன பண்றது? போலிஸ்காரனைவிட கிரிமினலுக்கு மூளை நூறு மடங்கு ஜாஸ்தியா வேலை செய்யும்னு கேலிக்கு சொல்லுவாங்க. ஆனா போலிஸ்காரன் அறிவு அவன விட ஆயிரம் மடங்கு வேலை செய்யறதாலதா நோ சான்ஸ்னு சொன்ன கேசையெல்லாம் திறமையா கையாண்டு கண்டுபிடிச்சிருக்காங்க. நான் இன்ஸ்பெக்டர் ஆனதும் முதன்முதல்ல எவனோ ஒருத்தனோ இல்ல கூட்டமோ எனக்கு சவால் விட்டிருக்காங்க. கண்டுபிடிக்கிற அந்த கூட்டத்தையோ அல்லது அந்த ஒருத்தனையோ கூண்டுல ஏத்துற. டிப்பார்ட்மெண்ட்ஸ் ஆளுங்ககிட்டயிருந்து ஒன்னும் கிடைக்கலைனாலும் எனக்கு ஒன்னே ஒன்னு கிடைச்சிருக்கு. ஆனா எந்தளவுக்கு யூஸ் ஆகும்னு தெரியல. என்றபடியே ஒருத்துண்டு சீட்டை நீட்டினார். அதில் ஆங்கிலத்தில் சில வரிகள் எழுதப்பட்டிருந்தன.

என்ன சார் தம்மாத்தூண்டு பேப்பரு...

இல்லை கனகம் இதப் படிச்சு பாருங்க.கனகம் படித்தார். அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததை காட்டி கேட்டார்.என்னங்க சார் ஒன்னும் புரியலயே. இது எப்படி க்ளு ஆகும்.

க்ளு ஆகணும்னு வேண்டிக்குங்க கனகம்.

என்ன சார் நீங்களே இப்படி சொல்றீங்க?

காரணம் இல்லாம சொல்லலைங்க ஏட்டு. ஏன்னா இது உண்மையிலேயே கொலைகாரன் விட்டுட்டுபோன பேப்பர்தானா இல்ல காத்துல எங்கேயாவது இருந்து அடிச்சிக்கிட்டு வந்து நம்மள சோதிக்கனும்னு இங்க விழுந்திருக்கானு தெரியல.

சார் மனசை போட்டு குழப்பிக்காதீங்க. உங்கக்கூட பத்து வருஷமா வேலை பார்க்கறேன். உங்க திறமையைப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும். நாமெல்லாம் நண்பர்கள்னு அடிக்கடி சொல்லுவீங்கள்ல அந்த நம்பிக்கையில சொல்ற. நீங்க இன்ஸ்பெக்டரானதும் முதல் கேசுனு கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிட்டீங்கன்னு நினைக்கிறேன். கண்டிப்பா இது க்ளுதான் அதுவும்... எந்த சாமியா இருந்தா என்ன ஏசுவோட கோயில்லருந்து கிடைச்சிருக்கு.. இந்தக் கேசை வெற்றியா முடினு அவரே ஆசிர்வாதம் பண்ணதா நினைச்சிப்போம்.

ஏட்டு கனகாபிஷேகம் இப்படிச் சொன்னதும், இன்னைக்கு நேத்துல்ல ஏட்டு நாம ஒன்னா சேர்ந்து ஒர்க் பண்ண ஆரம்பிச்சதுலருந்து நான் எப்ப இப்படி ஒருமாதிரி ஃபீல் ஆனாலும் நல்லா மோட்டிவேட் பண்ணி என் மனசை தெளிவாக்கிடறீங்க. இப்ப நீங்க சொன்னீங்கள்ல ஏசுவே ஆசிர்வாதம் பண்றாரோன்னு அதை வச்சே சொல்ற இந்த கேசை நாம வித் இன் ஒன் வீக் ஆர் போர் தென் டூ வீக்ஸ்ல சக்ஸஸா முடிக்கிறோம்.

இன்ஸ்பெக்டர் ரவி இப்படி சொன்னதும் இதுதான் எங்க ஐயா. என்ற ஏட்டு மகிழ்வோடு ஒரு சல்யூட் வைத்து பின் அடுத்து நம்மோட ஸ்டெப் என்னங்கைய்யா என்றார்.

நாம பேசனதுக்கப்புறமா கண்டிப்பா இது க்ளுனுதா என் மனசுக்கு படுதுங்க ஏட்டு. இதை இப்ப  படிச்சு பார்த்தா என் மனசுக்கு  இதுல ஏதோ ஒரு விஷயம் அடங்கியிருக்குனு படுது. எதுவுமே கிடைக்கலை. பட் எப்படியும் கண்டுபிடிச்சிடுவேங்கைய்யானு எஸ்.பி. முன்னால வெறுங்கைய்ய விரிச்சிகிட்டு நிக்கறதை விட வந்ததுக்கு இதுவாச்சும் கிடைச்சதேனு ஒரு சின்ன சந்தோஷம். ஹும்  எஸ்.பி.க்கிட்ட பேசிப் பார்ப்போம். நான் நினைக்கிற மாதிரியே எஸ்.பி.க்கும் பட்டு அவரோட கைடும் கிடைச்சதுனு வச்சிக்கிங்க, செத்தாங்க சேகரு..

யாருங்கையா சேகரு.

அட.. ஆள தெரியாதவனுக்குதா இப்ப சேகருன்னு பேர் வைக்க ஆரம்பிச்சிட்டாங்களே.

இவ்வாறு பேசிக்கொண்டே சிறிது நேரம் போக ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸ் வந்ததும் ரோஸ்லின் மேரியின் உடலை அதில் ஏற்றிவிட்டு தன் ஜீப்பிற்கு வந்தார்.

சரி இன்ஸ்பெக்டர் ரவியும், ஏட்டு கனகாபிஷேகமும் படித்த அந்த துண்டு காகிதத்தில் அப்படி என்னதான் எழுதியிருந்தது.

"தி கரெக்ஷன் ஸ்டார்ட் ஃப்ரம் நவ் பட் கரெக்ஷன் ஈஸ் அக்கம்பைன்ட் பை டெலிஷன்" 


-கொலைகள் நடக்கும்