DNA ☠️ கொலைகள்-5
தேவன் திருச்சபை தோட்டத்தில் அனைத்து ஃபார்மாலிக்டைசையும் முடித்து ரோஸ்லின் மேரியின் உடலை ஆம்புலன்ஸில் அனுப்பி விட்டு இன்ஸ்பெக்டர் ரவி ஜீப்பிற்கு வந்தார். அவரோடு வந்த கான்ஸ்டபிள் முருகனும், ஏட்டு கனகாபிஷேகமும் கேட்டனர் அடுத்து என்ன சார் மூவ்மெண்ட். நேரமும் மிட்நைட் ஆயிடுச்சு. ஜீப்பிலேயே வீட்டுக்கு போயிடறீங்களா? வண்டியைக் கூட காலையில் வந்து எடுத்துக்கலாமே.
இல்லைங்க. ஸ்டேஷனுக்கு வந்துட்டே போறேன். விஷயத்தை எஸ்.பி.க்கிட்ட சொல்லிடலாம்னு பார்த்து ஆஃபிஸுக்கு ரெண்டு முறை ஃபோன் பண்ண பட் லைன் கிடைக்கலை. ரெண்டு முறையும் எங்கேஜ்டாவே இருந்தது. ஒன்னு எஸ்.பி.க்கிட்ட பேசிடனும். இல்லைனா அவர மீட் பண்ண நாளைக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கிடணும். ரெண்டுல ஏதாவது ஒன்னு நடந்தாத்தான் கொஞ்சமாவது மைன்ட் ஃப்ரீயாகும். சரி வாங்க ஸ்டேஷனுக்கு போவோம் என்று ஜீப்பில் ஏறினார்.
ஸ்டேஷனுக்கு வந்தவர் வரும் போதே கான்ஸ்டபிள் முருகனை டீ வாங்கி வரச் சொல்லிவிட்டு, அது வந்ததும் ஆயாசமாய் ஒரு நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு டீயை சிறுகச் சிறுக குடித்தவாரே அந்தத் துண்டு பேப்பரில் எழுதியிருந்த வாசகத்தை மீண்டும் ஒருமுறை மனதுக்குள் ஓட்டினார். "தி கரெக்ஷன் ஸ்டார்ட் ஃப்ரம் நவ் பட் கரெக்ஷன் ஈஸ் அக்கம்பைன்ட் பை டெலிஷன்" இதன் மூலம் கொலைகாரன் சொல்ல வருவது என்ன இது ஒரு தகவலாக சொல்கிறானா அல்லது மிரட்டலாக சொல்கின்றானா எப்படி எடுத்துக் கொள்வது என்று சிந்தித்தார். சரி எது எப்படி இருந்தாலும் முதலில் நாளைக்கு எஸ்.பி.யைப் பார்க்க வேண்டும் என்று மீண்டும் எஸ்.பி. ஆஃபிஸிற்கு தொடர்பு கொண்டு மூன்று முறை ரிங் போக நான்காம் முறை எடுக்கப்பட விபரத்தை சொல்லி எஸ்.பி.யை சந்திக்க அனுமதி பெற்று அலைபேசியை அணைத்த நேரம், மீண்டும் அவரது ஃபோனடிக்க ஒருவேளை எஸ்.பி.யே லைனில் வந்து ஏதேனும் ஆர்டர் போடுறாரா என டிஸ்பிளேயைப் பார்த்தவர் என்ன இது புது நம்பரா இருக்கே யாரா இருக்கும் என்ற யோசனையுடனே ஹலோ என்றார்.
வணக்கம் இன்ஸ்பெக்டர் சார், என்ன ப்ரமோஷன் வந்து முதல் கேஸே இப்படி தலையை சுத்துதேனு இருக்கா?சுத்தணும்.. சுத்தணும்தான அப்படி பண்ணியிருக்க.ஃபோனில் வந்த குரலைக்கேட்டு இன்ஸ்பெக்டர் ரவி உள்ளுக்குள் பொறுமினார். யார் டா இது. சிங்கம்-1 பிரகாஷ் ராஜ் ஸ்டைல்ல பேசறான். ஆனா என்ன கருமம் பிடிச்ச வாய்ஸ் டாவா, டீயா எதுனே தெரியல. நல்ல மிமிக்ரி தெரிஞ்சு கம்யூட்டர் வாய்ஸா இருக்கு.
எதிர்முனையில் பேசிய குரல் பலமாக சிரித்துவிட்டு கேட்டது. என்ன இன்ஸ்பெக்டர் சார் வாய்ஸ வச்சே குழம்பறீங்களா? இதுக்கே இப்படினா. அப்புறம் கேஸ எப்படி கண்டுபிடிப்பீங்க?
டேய் யார்டா, இல்ல யார்டீ நீ. இப்ப என்ன சொல்ல வர. எப்பவுமே குற்றவாளிங்க வழக்கமா சொல்ற மாதிரி, இது உனக்கு தேவையில்லாத கேஸு, விலகிக்கோ, அப்புறம் பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும் அப்படினுதான மிரட்ட போற.. அப்படித்தான?
அடப்போங்க சார். உங்கள என்னவோனு நினைச்ச ஆனா நீங்க இன்னும் அந்தக் காலத்து போலீசாவே இருக்கீங்க. உங்க டிப்பார்ட்மெண்ட்ல பல பேரு எவ்வளவோ ஹை ஜீனிக்கா இருக்காங்க. ஒரு வருஷத்துக்கு முன்னாடிகூட டி.எஸ்.பி. வாணி ஒரு உதட்டு ரேகையை வைச்சே கொலைகாரியைக் கண்டுபிடிச்சிட்டாங்க. (பிரதிலிபியில் வெளிவந்த எனது கதை 'முத்தமிட்டுக்கொல்' - Kathir Arasu) நீங்க என்னன்னா இப்படியிருக்கீங்க (என்று நக்கலாக கேட்க)
ஏய்...ஏய்...ஏய் போதும், போதும் ரொம்ப லெக்சர் அடிக்காத. ஆனா எங்க டிப்பார்ட்மெண்ட் பத்தி நல்லபடியா சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா ஒன்னு நீ எழுதிப்போட்டு போனியே ஒரு துண்டு சீட்டு அது போதும்...டா...டீ எனக்கு. இந்த உலகத்துல நீ எந்த மூலையில இருந்தாலும் உன்ன கைது பண்ணாம விட மாட்டேன்.
என்ன சார் சிங்கம்-2 சூர்யானு நினைப்பா? அவர் பேசுன "வேர் ஆர் யூ இன் தி வேர்ல்ட், ஒன் டே ஐ வில் கம் ஃப்ரெண்ட் ஆப் யூ அண்ட் அரெஸ்ட் யூ"னு பேசுன மாதிரி பேசுறீங்க? பட் என்னை கைது பண்ணா சந்தோஷம்தா. அப்புறம் ஒன்னு சொன்னீங்களே.. நான் எழுதிப் போட்ட பேப்பர் கிடைச்சதுனு அதுல ஒரு சின்ன கரெக்ஷன். அத எழுதி போட்டது நான்தான் பட் அந்த கொலையை பண்ணது நான் இல்ல. போனாப் போகுதுன்னு ஒரு கொசுறு செய்தி. அந்த பொணத்த அங்க பொதைச்சது நாந்தான். அப்புறம் "தி கரெக்ஷன் ஸ்டார்ட் ஃப்ரம் நவ் பட் கரெக்ஷன் ஈஸ் அக்கம்பைன்ட் பை டெலிஷன்"ல இனிமே தா டெலிஷன் ஆரம்பிக்கப்போகுது.
(என்ன ஒரு தெனாவாட்டான பேச்சு என்று நினைத்த இன்ஸ்பெக்டர் ரவி). என்ன... பொணத்தை போட்டது நானு.. ஆனா கொன்னது நானில்லைனு குழப்பறியா?
(மீண்டும் சிரித்தபடியே பதில் சொன்னது எதிர் முனை). ஐயோ... சத்தியமா நான் கொலை பண்ணலை சார் உண்மைதா. இன்னும் சொல்லப்போனா எங்க அம்மா சத்தியமா இந்த கொலையை பண்ணல. பட் இனிமே நடக்கப் போற கொலைகளை நான்தான் பண்ணப் போற. மொத்தம் மூன்று கொலைகள். முடிஞ்சா மூனாவது கொலை பண்றதுக்குள்ளயாச்சும் என்னை புடிச்சிக்காட்டுங்க.
ரப்பிஷ்... (நேற்று அந்த இரவு நேரத்தில் கூட அவ்வளவு தெனாவட்டாக பேசிய அந்த அனாமலிஸ் காலை முழுவதுமாக கேட்டு டென்ஷனான) எஸ்.பி. மகேந்திரன் மேஜையை முஷ்ட்டியால் குத்தினார்.எவ்வளவு திமிரா பேசியிருக்கா? நம்ம டிப்பார்ட்மெண்ட என்னவோ ஸ்கிரிப்ட் எழுதி வச்சிக்கிட்டு நடிக்கிற சினிமாக்காரன்னு நினைச்சிக்கிட்டானா? அந்த ஸ்கௌன்ட்ரலோட நம்பர டிப்பார்ட்மெண்ட்ல கொடுத்து ட்ரேஸ் அவுட் செய்து பார்த்தீங்களா?
இன்னும் இல்லைங்கைய்யா. பண்ணாலும் அது நோ யூஸ்.
வா...ட், என்ன சொல்றீங்க?ஹீ ஆர் ஷி ஈஸ் எ கைன்ட் ஆஃப் டிஃபிக்கல் பெர்சன் சார். அவனோ.. அவளோ ரொம்பவே கேர் ஃபுல்லாத்தான் ஹேண்ட் பண்ணணும்.
இதுவரைக்குமே அவனா.. அவளா..னு தெரியல. இதுல இது வேறையா. சரி எதவச்சி அப்படி சொல்றீங்க?திரும்பவும் அடுத்த பத்தாவது நிமிஷம் எனக்கு ஃபோன் பண்ணாங்கைய்யா, பண்ணி...திரும்பவும் பண்ணானா/ளா, பண்ணி...
ஹா... மிஸ்டர் இன்ஸ்பெக்டர், ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துட்ட. தேவையில்லாம என்னோட ஃபோன ட்ரேஸ் பண்றேனு சொல்லி உங்க டைம வேஸ்ட் பண்ண வேணா. அது வேஸ்ட். ஏன்னா போலிஸுக்கிட்ட இருந்து தப்பிக்க நான் ஃபூலிஷா சிம்ம மாத்தற நார்மல் கிரிமினல் கிடையாது கொஞ்சம் ஹை வெரைட்டி கிரிமினல் அதனால ஃபோனயே மாத்தற ஆளு. மேக்ஸிமம் இந்த ஃபோனோட எனக்கு இருக்குற உறவு இந்த கால் முடிஞ்சதுமே முடிஞ்சிடும் ஐ மீன் உங்கக்கூட பேசி முடிச்சதுமே தூக்கி போட்டுடுவே. சோ வழியில கிடைச்ச ஃபோனுன்னு எவனாவது இல்லாத அப்பாவி எடுத்து யூஸ் பண்ணப் போக வீணா அவன அரெஸ்ட் பண்ணிடாதீங்க. ஓகே... நான் பேச வேண்டியத பேசி முடிச்சாச்சு .எனி ஹவ் பெஸ்ட் ஆஃப் யுவர் லக் டு கேட்ச் மீ.
இன்ஸ்பெக்டர் ரவி இதையும் சொல்லி முடிக்க, அதைக் கேட்ட எஸ்.பி. மகேந்திரன் முகத்தில் அப்பட்டமான வெறுப்பு தெரிந்தது. அவர் பேசினார், உனக்கு எல்லா வழியையும் க்ளோஸ் பண்ணிட்ட, முடிஞ்சா கண்டுபிடிங்கறா... ச்சே முதல்ல இது னா..வா, ளா..வா கண்டு பிடிக்கணும்.
வாய்ஸ் அனலைசர்ஸ்ஸுக்கு ஒரு காப்பி அனுப்பியிருக்கே சார்.
ஓகே. பட் கரெக்ஷன் ஈஸ் அக்கம்பைன்ட் பை டெலிஷன், இதோட மோட்டிவ் என்னவாயிருக்கும்? இந்த ஸ்டேட்மெண்ட் படி நான் பண்ணப்போறது கொலைனாலும் அது ஒரு திருத்தம். அதனால என்ன பிடிக்க முயற்சி பண்ணாதங்கறானா/ளா. இல்ல சவால் விடறதா எடுத்துக்கறதா. இல்ல நம்மள குழப்பி விடறதுக்காக அப்படிப்போட பட்டுச்சா.
எனக்கு ஒன்னு தோனுதுங்கைய்யா. பணத்துக்காக கொலை பண்றதோ, இல்ல பழிக்கு பழியாவோ தோனலை. வேற ஏதோ ஒரு ஸ்டேட்மெண்ட்டா தெரியுது. இதுல ஏதோ ஒன்னு அடங்கியிருக்கு. கொலைகாரன் அல்லது கொலைகாரியோட நோக்கம், நடந்த தப்புக்கு டெலிஷனாவோ இல்லைனா நடக்கப் போற தப்புக்கு டெலிஷனாவோ இருக்கும்னு தோனுது.
சரி அதுக்குனு அப்படியே விட்டுட முடியாதுல்ல. முதல்ல நடந்த கொலையைக்கண்டுபிடிக்கணும், அதுக்கூடவே நடக்க போறதையும் தடுக்கணும். எனி கௌவ், உங்க அடுத்த மூவ் எப்படி?
பி.எம். ரிப்போர்ட் அன்ட் வாய்ஸ் ரெக்ககனைசர் வரதப் பொருத்து மூவ் பண்ணனுங்கைய்யா.
ஓகே... உங்கள முழுமையா நம்பற. இப்போதைக்கு கேசு என்னவோ எந்த எவிடன்ஸும் இல்லாம, கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு. இருந்தாலும் காட்டை விட்டு வெளிய வரதுக்கு கண்டிப்பா ஒரு வழி இருக்கும். முதல்ல அதைக் கண்டுபிடிங்க. ஆனா அந்த ரூட்டை எப்படி கண்டுபிடிப்பீங்க? அதுல எப்படி டிராவல் பண்ணுவீங்கங்கறது உங்க டேலண்ட்டை பொறுத்து இருக்கு. பட் எனி ஹவ் கூடிய சீக்கிரம் நல்ல ரிசல்ட்டா கொடுப்பீங்கன்னு நம்பறேன். அட் திஸ் ஸேம் டைம் எந்த ஹெல்ப் வேணும்னாலும் எந்த டைம்னாலும் தயங்காம கேளுங்க அது அன் டைமா இருந்தாலும் பரவாயில்லை.
தேங்க்ஸ் சார் கண்டிப்பா. என சல்யூட் வைத்துவிட்டு வெளியே வந்தவர் தனது ஜீப்பின் மீது ஹெட் காண்ஸ்டபிள் கனகாபிஷேகம் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.
கனகம்.. கனகம் என்னாச்சுங்க? ஏன் மயங்கி இருக்கிறீங்க? சம்திங் எனி ப்ராப்ளம்?
லேசாக கண் விழித்தவர்.,அதுலா ஒன்னுமில்லைங்கையா. கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம். காலையில் எஸ்.பி. ஆபிசுக்கு வர அவசரத்துல பிரெஷர் டேபிலட் எடுத்துக்க மறந்துட்டேன்.
என்னங்க நாம் போலிஸுங்க, நம்ம டியூட்டியில நேரம் காலம்ங்கறதே கிடையாதுங்க. ஆப்ரேஷன் பண்ணப் போற டாக்டர்ஸ்கூட நேரம் காலம் குறிப்பாங்க. பட் நம்மளோடது அப்படியில்லை. தோ.. எஸ்.பி. ஆஃபிசுலேர்ந்து வந்து 5 நிமிஷம் தான் ஆச்சு, ஆனா இப்ப எஸ்.பி. ஃபோன் பண்ணி வரச்சொன்னா டைம் குறிச்சிட்டா போக முடியும். அதனால ஹெல்த்த பார்த்துக்குங்க கனகம். இன்னோனு உங்கள ஏன் நா எப்பவும் என் கூட வச்சிருக்கேனா, என்னதான் நீங்க போஸ்டிங்ல எனக்கு கீழயிருந்தாலும் என்னைவிட டிபார்ட்மெண்ட்ல உங்களுக்கு அனுபவம் அதிகம். அநேகமா இந்த இயர் என்டிங் நீங்க ரிடையர்மெண்ட்னு நினைக்கிறேன். அந்தளவுக்கு உங்களுக்கு போலீஸ் மூள. அதனால்தான் உங்களோட ஹைடன்சும் வேணுன்னுதா...
என்னங்கைய்யா உங்களுக்கு நா ஹைட்...
நோ மிஸ்டர் கனகம். நம்ம துறையில பதவியை விட அனுபவத்துக்கு அறிவு அதிகம்.
ரொம்ப தேங்க்ஸ்ங்கைய்யா. ஆனா ஒரு சின்ன திருத்தம்.
சொல்லுங்க.உங்களோட நா டிராவல், ஐ மீன் ஒர்க் வைஸா பண்றது அடுத்த மாசத்தோடங்கைய்யா. அடுத்த மாசம் எனக்கு ரிடையர்மெண்ட்டுங்கையா.
ஈஸ் ட். ஓகே கனகம் இந்த கேஸ உங்களுக்காகவே நா கூடுதல் சேலன்ஜா எடுத்துக்கறே. உங்க ஓய்வுக்கு முன்னாடி நாம இந்த கேஸ முடிக்கறோம். எஸ்.பி.க்கிட்ட நல்ல பேர் வாங்கறீங்க. பெருமையா ரிடையர் ஆகறீங்க ஓகே.
என்று ரவி சொல்லும்போதே ஃபோன் அடித்தது. ஆனால் இந்த முறை அடித்தது ஹெட் காண்ஸ்டபிள் கனகாபிஷேகத்துக்கு.எடுத்து ஹலோ என்றவர் அப்படியே அதிர்ந்து போனார்.
கொலைகள் நடக்கும்