DNA கொலைகள்-6
முக்கியமான பல வேலைகளை முடிக்க வேண்டும் என்றும் இதுவரை தான் செய்த ஆராய்ச்சியின் கோப்புகளைத் தன்னுடன் இதில் தொடர்புடைய வெளிநாட்டவர்களையும் கலந்து பேச வேண்டும் என்றும் எண்ணிய டாக்டர் ராயர் வழக்கமான நேரத்தை விட சற்று கூடுதலாகவே தனது ஆராய்ச்சி கூடத்திற்கு வந்து ஏற்கனவே தான் செய்த ஆராய்ச்சிகளோடு புதிதாக தனக்கு வந்த சில ஃபேக்ஸ் காப்பிகளோடு ஒப்பிட்டு அவைகளை விட தன்னுடையது சிறப்பாக போய்க்கொண்டிருப்பதால் தனக்கு தானே குட், குட் என்று சொல்லிக்கொண்டு அதை அப்படியே யாரும் கண்டுபிடிக்க முடியாத இரகசிய வார்த்தைகளாக மாற்றம் செய்துக்கொண்டிருந்த நேரம் தனது அறை கதவு தட்டப்படுவதை உணர்ந்து எஸ் கம்மிங் என்றார்.
டாக்டரின் குரல் கேட்டதும் ஃபாதர் மோசஸ் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். அவரைப் பார்த்ததும் ஹலோ. ஃபாதர் வாங்க, வாங்க இன்னைக்கு என்னோட ஆஃபிசுக்கு வரீங்கன்னு காலையில ஃபோன் செஞ்சிருந்தீங்க. ஆனா இவ்வளவு சீக்கிரமா வருவீங்கனு நினைக்கலை.
ஏன் இதுல உங்களுக்கு ஏதாவது சங்கடமா? இவ்ளோ யர்லியரா வந்தது பிடிக்கலையா? இல்லை ஏன்டா இவன் வந்தான்னு நினைக்கிறீர்களா?
அய்யோ! ஃபாதர் ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? உங்களை போய் அப்படி நினைப்பேனா?நான் ஊருல இருந்தேன்னா நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம். நான் ஆஃபிஸ்ல இல்லைனாலும் அப்படி நினைப்பேனா? நான் ஆஃபிஸ்ல இல்லைனாலும் என்னோட கேபின்லையே உட்கார்ந்து வெயிட் பண்ணலாம். ஸோ யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் ஃபாதர்.
ஹா... ஹா... நான் வரது இருக்கட்டும். வந்து வெயிட் பண்றதும் இருக்கட்டும். ஆனா உங்கக்கிட்ட இருந்து ரிசல்ட் வந்தபாடில்லையே. அது எப்பதான் வரும்.
கோப்படாதீங்க ஃபாதர் வந்திடும். கண்டிப்பா இன்னும் ஒன் இயர்ல வந்திடும். இது ஹாட் பிராமிஸ்.
அதத்தா ஏற்கெனவே ஃபோன்ல சொல்லிட்டீங்கள்ல. அப்புறம் ஏன் திரும்பவும் ரிப்பீட் பண்றீங்க. இதுல வேற துணைக்கு ஹாட வேற கூப்பிட்டுக்கறீங்க.
ஃபாதர் திரும்பவும் கேட்டுக்கற ப்ளீஸ் கோவப்படாதீங்க. உங்களுக்கு இந்த DNA-வை பத்தி சில உண்மைகளைச் சொல்லிடறேன். அப்பத்தான் இது எவ்வளவு பெரிய பிராஜெக்ட்னு உங்களுக்கு புரியும். பட் அதையெல்லாம் இங்க வச்சு சொன்னா அதுக்கு இந்த இடம் சரிப்பட்டு வராது.
வேற எதுதா சரிப்பட்டு வரும்.
என்னோட வீட்டுக்கு.
ஏன் இதுவும் உங்க இடம்தான? இங்க சொன்னா ஏன் சரிப்படாது?
ஃபாதர் நீங்க ரொம்ப கோபத்துல இருக்கீங்கன்னு தெரியுது. பட் நான் சொல்றதுல விஷயம் இருக்கு அதனாலதா என்னோட வீட்டுக்கு கூப்பிடுறேன்.
(ஃபாதர் பெருமூச்சுடன்) சரி. உங்க வீட்டுலதா சொல்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்க வாங்க போலாம்.
******
டாக்டர் ராயரின் வீடு.
ஃபாதர் என்ன சாப்பிடுறீங்க? ஹாட் ஆர் கூல்.
நான் எதையும் சாப்பிடற குடிக்கிற மூடில் இல்ல. இன்னும் சொல்லப்போனால் நான் சொல்றது உங்களுக்குக் கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருக்கலாம்.
எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஃபாதர்
சீக்கிரமா இந்த ஆராய்ச்சிய முடிக்க பாருங்க. ஏன்னா இதுக்கு நான் நிறைய பணத்தைப் போட்டிருக்க. அதுமட்டுமல்ல, என்னோட அக்காவோட பணத்தையும் கொஞ்சம் இன்வெஸ்ட் பண்ணியிருக்க. நான் என்னதா ஃபாதரா இருந்தாலும் பணத்தாசை பிடிச்சவன்தான். அதனால்தான் நீங்க ஆராய்ச்சி அது. இது. லாபம் நிறைய பார்க்கலாம்னு சொன்னதும், என்ன ஏதுன்னு கூட கேட்காம பிரென்ட்ஷிப் அடிப்படையில பணம் கொடுத்த. ஆனா எங்கக்கா அப்படியில்ல. நேர்மையானவங்க. லண்டன்ல அவங்களுக்கிருக்குற சூழ்நிலைய பயன்படுத்தி இங்க அவங்க பணத்தை கொஞ்சம் கொஞ்சமா இதுல போட்டிருக்க. இதுலா தெரிஞ்சிடுச்சுனா. கர்த்தர் மேல சத்தியமா சொல்ற என்ன உண்டில்லைனு பண்ணிடுவாங்க.
புரியுது ஃபாதர் புரியுது. நான் வித் இன் ஒன் இயர்னு சொன்னதுக்கூட ரிசர்ச்சோட கன்குலூஷனுக்குதா. பை த பை அதிகபட்சம் இன்னும் ஏழு மாசம்.
ஓகே. நான் ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே?
நோ ஃபாதர், எவ்வளவு மானிட்டரி ஹெல்ப் பண்ணியிருக்கீங்க? எப்படி கோவிச்சுக்குவே?
ஏதோ DNA மாற்றியமைக்கிறது. அதனால் ஃபியூட்சர்ல சொசைட்டிக்கு பெரிய அளவுல பிரச்சனைகள் வரும். அதுக்குண்டான ரெமிடிய பினாமிஸ் மூலமா நாமளே புரொடக்ஷன் பண்ணி செமயா பணம் பார்க்கலாம்னு சொன்னீங்கள்ல, அத கொஞ்சம் விளக்குங்களே.
அவ்வளவுதான என்று சிரித்த டாக்டர் ராயர் தன்னுடைய லேப்டாப்பில் சில வரைபடங்களைப் ஃபாதருக்கு காட்டினார்.
அதைப் பார்த்த ஃபாதர் மோஸஸ் புருவங்களைச் சுருக்கியும், விரித்தும் என்ன டாக்டர் இது? ஏதோ சிக்சாக் ஏணி மாதிரி இருக்கு என்றார்.
சிரித்தபடியே டாக்டர் ராயர், இதுதான் நம்மளோட டி.என்.ஏ.வோட வரைபடம் என்று டாக்டர் ராயர் சில ராயர் சில வரைபடங்களை ஃபாதரிடம் கொடுக்க அதை பார்த்த ஃபாதர்.
என்ன டாக்டர் சொல்றீங்க? ஆனா சில சமயம் படத்துலயோ, இல்ல டீவி சீரியல்லயோ காட்டும் போது ஒரு தலையும் அதோட சேர்ந்த வால் மாதிரியுமில்ல காட்டுவாங்க. நீங்க காட்டுறது டோட்டலாவே டிஃபர் ஆகற மாதிரி இருக்கு. அப்ப இதுதான் ஒரிஜினல் இமேஜா. அப்ப அது.
லேசாக சிரித்த டாக்டர் ராயர், நீங்க கேட்கற கொஷின் கரெக்ட் ஃபாதர். பட் நீங்க சொல்றது உயிரணுக்கள், அதுதா அப்படி இருக்கும். அந்த வகையில் இந்த உயிரணுக்களையும் வடிவமைக்கிற மரபணுக்களைத்தான் நாம டி.என் ஏ-னு சொல்றோம். இன்னும் தெளிவாச் சொல்லனும்னா உயிரணுக்களுக்குள் இருக்கும் மரபணுத் தகவல்களைச் சுமந்து செல்லும் மூலக்கூறுதான் டி.என்.ஏ. அதாவது இன்னும் கிளியரா சொல்லனும்னா பரம்பரை பரம்பரையா வர.
போதும் டாக்டர் நானும் படிச்சவன் தான். எனக்கும் ஓரளவுக்கு விபரம் தெரியும். அதனால ஸ்டூடன்டுக்கு கிளாஸ் எடுக்கற மாதிரி இல்லாம நீங்க இதுல எதையெதை. எப்படி மாத்தி அமைக்கப் போறீங்க? அதனால் எப்படி பிரச்சனைகள் வரும், இன்னொன்னு அப்படியே பார்த்தாலும் ஜெனடிக் மாடிஃபிகேக்ஷன் பரவலாக நடந்துக்கிட்டிருக்குதான. அப்புறம் நீங்க சொல்றது போல் அந்தளவுக்கு இலாபம் பார்க்க முடியுமா?
கண்டிப்பா முடியும் ஃபாதர் அதுலயும் சாதாரண அதிக இலாபமா இல்ல. கொள்ள லாபம் பார்க்கப் போறோம்.
அதுதான் எப்படி?
சிரித்த ராயர், ஃபாதர் எப்பவுமே நல்லதை விட கெட்டதுக்கு ரீச்சிங் பவர் அதிகம். சாமியைப் பார்த்தேன்னு சொல்றவன பார்த்து சிரிக்கும் உலகம் பேயைப் பார்த்தேன்னு சொல்றவன நம்பி பயப்படும். அதுவும் மெடிக்கல் லைன்ல சொல்லவே வேணாம். இதை சாப்பிட்டா நீ நல்லாயிருப்பேனு சொல்றப்ப கேட்காத உலகம், இதை சாப்பிடலைனா நீ செத்துடுவேனு சொன்னா கண்டிப்பா சாப்பிடும். எல்லா நோயையும் பூரணமா குணப்படுத்தற காலடியில இருக்குற மூலிகையா இருந்தாலும் சரி, இல்லை வேதியியல் ரீதியா அணுகுற அலோபதியா இருந்தாலும் சரி அது எவ்வளவு விலைனாலும் வாங்கி தன்னை காப்பாத்திக்கற வேகம் மனிதனுக்கு எப்பவுமே உண்டு. இந்த ஒரு முனையைப் பிடிச்சிக்கிட்டு மறுமுனையில மனுஷன கட்டி. இல்லாத நோயைக்கூட இருக்குறதா நம்ம வச்சி பயமுறுத்தியே நம்ம இஷ்டத்துக்கு ஆட்டி படைத்து சம்பாதிச்சிடலாம். அதுவும் இல்லாம மனித சமுதாயத்துக்கே பெரிய பிரச்சனைய உண்டாக்கற மாதிரி வடிவமைக்கப் போறோம். ஆனா இதுல என்ன ஒரு சிக்கலும் கூடவே இருக்குனா. நாம வாங்கியிருக்கறது பாட்டனி ரிசர்ச்க்கு, பட் பண்றது ஹியூமன் சம்பந்தப்பட்டது. அதுக்கு அரசாங்கத்திடம் முறையா பர்மிஷன் வாங்கணும். இருந்தாலும் நாம் நேரடியாக பிஸ்னஸ் பண்ணாம மாஃபியா கேங்க் மூலமாத்தான் பண்ணப்போறோம். மேலும் ஃபாரின்ல இருக்குற கம்பெனிங்க கன்ட்ரோலதா நாம் இத பண்றோம். ஸோ நாளைக்கே நாம மாட்டினாக்கூட நமக்கு இதுக்கு எந்த சம்பந்தமும் இல்லைனு வெளிய வந்துடலாம்.
அதெப்படி நாம வெளிய வர முடியும்.
வழி இருக்கு ஃபாதர். நாம இந்த ஆராய்ச்சிய சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டோம்னா அதை பத்திய ஏ டூ சட் டீடெயில்ஸ் வித் பிராஜக்ட்டை இதை யாருக்காக சொய்யறமோ அவங்கக்கிட்ட கொடுத்திடுவோம். அதன் பிறகு அவங்க சைட்ல இருந்து நமக்கு ஆதாயமே தவிர ஆபத்து இல்லை.
அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
சிம்ப்ளி ட்ரூ ஃபாதர். அதாவது என்னதான் நல்லவங்களா இருந்தாக்கூட தனக்குனு ஒரு சோதனை வந்தா சிலசமயம் காட்டிக்கொடுத்திடுவாங்க. ஆனா இந்த மாதிரி இன்டர்நேஷனல் லெவல்ல கேட்டவர்களுக்கு நாம விசுவாசமா இருந்துட்டோம்னா உயிரே போனாலும் காட்டிக்கொடுக்க மாட்டாங்க. ஏன்னா அடுத்து ஏதாவது பண்ணனும்னு திட்டம் போட்டாலும் எவ்வளவு பணம் கொட்டி கொடுத்தாலும் யாரும் ஒர்க் பண்ண வர மாட்டாங்க. அதனால்தான் சொல்றேன் வீ ஆர் சேவ் வித் ஃப்ரூட்.
சரி என்னென்னமோ சொல்றீங்க. பட் அந்த பிசினஸ் மெத்தெட்லாம் உங்க வேல இருந்தாலும் என்ன பண்ண போறோம். அது எப்படி பண்ண போறீங்கன்னு மட்டும் சொல்லுங்க. ஏன் பிசினஸ் மெத்தட் உங்க வேலையின்னு சொல்றேன்னா. நான் பண்ற இந்த ஆக்ட்டிவிட்டி எங்கக்காவுக்கும் தெரியக்கூடாது. குறிப்பா பெருமாள்புரத்து மக்களுக்கும் தெரியக்கூடாது. ஏன்னா எங்கக்கா என்ன ரொம்பவும் நல்லவன்னு நினைச்சிக்கிட்டிருக்காங்க. அதோட பெருமாளபுரத்து பியூப்பில்ஸ் என்னோட ஒரு முகத்ததான் பார்த்திருக்காங்க. அவங்களுக்கு நான் நல்லது பண்ற மாதிரியும் தெரியணும், அதே சமயத்துல இந்த முகமும் தெரியக்கூடாது.
இதுலா எனக்கு தெரியாதுங்களா? எனக்கு இவ்ளோ பண்றீங்க. உங்கள் காட்டி கொடுப்பனா?
சரி, திரும்பவும் கேட்குற இந்த ஜெனட்டிக் மாடி ஃபிக்ஷன எப்படி பண்ண போறோம்? எப்படி சம்பாதிக்க போறோம்?
டாக்டர் ராயர் சொல்ல ஆரம்பித்தார்.
டாக்டர் நீங்க சொல்றது சாத்தியமா? இதுவெல்லாம் நடக்க கூடியதா?
ஃபாதர், எந்த ஒரு தப்பையுமே தப்பே இல்லாம சரியான முறையில தப்பா செஞ்சா தப்பு தப்பா தெரியாம தப்பாத சாத்தியமே.
டாக்டர் சொன்ன விதத்தைக் கேட்ட ஃபாதர் முடியைப்பிய்த்து கொள்ளாத குறையில் ஏன் டாக்டர் ஆக்டர் விசு மாதிரி பேசறீங்க? என்று கேட்டார்.
ஃபாதர் அப்படிக் கேட்டதும் பலமாக சிரித்த டாக்டர் ராயர். என்ன ஃபாதர் புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கா? என்றார்.
இல்லைனுலாம் சொல்லமாட்டேன். ஜீசஸ் மேல சத்தியமா புரியலை. எப்படி செய்யப்போறீங்க? சாத்தியமானு கேட்டா சாத்தியம். அதை இன்ன மாதிரி செய்யப் போறோம்னு சொல்லாம விசு படத்துல அவரோட ஃபேவரைட் ஸ்டைல்ல வர மாதிரி நீங்க ஒன்னு பேசுனா எப்படி புரியும்?
டாக்டர் ராயர் மீண்டும் சிரித்துவிட்டு சொன்னார்.நாமளும் அப்படித்தான பண்ணப் போறம். தப்பான பிஸ்னஸ்தா. ஆனா சரியானது மாதிரி வெளியுலகுக்கு காட்ட போறோம். நாம செய்யறதோட விளைவு அப்படிப்பட்டது. அதாவது வெளியுலகுக்கு நன்மை மாதிரி தெரியும். பட் அதோட ரியாக்ஷன் வேற மாதிரி அமையும். அந்த பக்க விளைவுகள் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கறப்ப நமக்கு காசு.இல்ல இல்ல பணம் அதுவும் டாலர்ல வானத்தைப் பிச்சுக்கிட்டு கொட்டப் போகுது.
அதுதா எப்படி?
டாக்டர் ராயர் சொல்ல, சொல்ல மோசஸின் கண்கள் அவ்வப்போது ஆச்சர்யத்தாலும் சற்றுக் குழப்பத்தாலும் பெரிதாகி, சிறிதாகி என மாறி, மாறி அமைந்தது.
கொலைகள் நடக்கும்