Wall paintings books and stories free download online pdf in Tamil

சுவரில்லாத சித்திரங்கள்

சுவரில்லாத சித்திரங்கள்

Author : C.P.Hariharan

E mail id : Cphari_04@yahoo.co.in

சந்தியா பட்டபடிப்பை முடித்திருந்தாள். அவளுக்கு ஒரு அண்ணனும் அக்காவும் ஒரு தங்கச்சியும் இருந்தார்கள். அவள் அப்பாவோ வேலையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவள் அம்மா வீட்டை நிர்வாகம் பண்ணி வந்தாள். பெரிய குடும்பம் என்பதால், குடும்ப பாரம் முழுதாகவும் அவள் அண்ணா ராஜாராம் மீது வீழ்ந்தது. அவன் தான் மூத்தவன். தன் தங்கச்சிகளை ஒரு வழி சேர்க்கும் பொறுப்பு அவனுக்கு இருந்தது. அவன் ஒருவன் சம்பாதியத்தில் தான் கொஞ்ச நாளாகவே அந்த குடும்பமும் ஓடியது. சந்தியாவின் அக்கா செல்விக்கு ஒரு அரசாங்க வேலை கிடைத்துவிட்டது என்றாலும் அவளுடைய கல்யாணமும் சீக்கிரம் நடந்து நிகழ்ந்தது. அவள் புகுந்த வீட்டுக்கு சென்றுவிட்டாள். ராஜாராம் ஒரு நிம்மதி பெரும்மூச்சை இழுத்தான். இன்னும் இரெண்டு தங்கச்சிகள் இருந்ததால் அவனுக்கென்று ஒரு வாழ்க்கையை பற்றி ஒன்றும் யோசிக்கவே முடியவில்லை.

ராஜாராம் சந்தியாவுக்கு மாப்பிளை பார்க்க ஆரம்பித்தான். ஆனால் அவளுக்கு உருப்படியாக வேலை எதுவும் இல்லாததினால் சம்பந்தம் எதுவும் சரிபட்டு வரவில்லை. கடைசியில் வேறு வழியின்றி அவள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள். அவள் தங்கை சித்ராவுக்கு உடம்பு சரியில்லாததினால் திருமணம் பண்ண முடியாத சூழ்நிலை. ராஜாராமுக்கு அவளை பார்க்க வேண்டிய கட்டாயம். அதனாலேயே அவன் தன் வாழ்க்கையை பற்றி யோசிக்கவே இல்லை.

சந்தியாவின் கணவர் சரவணன் ஒரு தனியார் நிறுவனத்தில் தான் பணி புரிந்து வந்தார். ஏதோதட்டி முட்டி வாழ்க்கையின் வண்டியைஓட்டலாம் அவ்வளவு தான். சந்தியாவும் சின்ன சின்ன துணிமணி வியாபாரம் பண்ணி வந்தாள். ஏதோ ஒரு வியாபாரம் என்றால் பறவாயில்லை. அப்பப்ப தோன்றியது போல் பல்வேறு சில்லறை வியாபாரங்களை பண்ணி வந்தாள். எதுவும் தீவிரமாக யோசிக்காமல், எடுத்தோம் கவுத்தோம் என்று கண்மூடித்தனமாக முடிவெடுத்தாள். அதனாலேயே வாழ்க்கையில் எதுவும் உருப்படியாக அவளால் சாதிக்கவும் இயலவில்லை. ஓடும் நீரில் உருளும் கல்லில் பாசி சேர்வதில்லையே. ஆனாலும் அவள் அடுத்தவங்களிடமிருந்து வேலை வாங்குவதில் கட்டிக்காரியாக தான் இருந்தாள். கூடிய சீக்கிரம் சந்தியாவுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு சரண்யா என்று பெயர் வைத்தார்கள்.

இப்படி வறுமையில் வதங்கி தட்டி முட்டி இன்னும் எதன்னை நாள் தான் வாழ்வது என்று சந்தியா துடித்தாள், தவித்தாள். முதலில் கடனை வாங்கி ஓர் சிறிய வீட்டை வாங்கிக்கொண்டாள்.

அவளுக்கோ பேராசை. வரவுக்கு மேல செலவு பண்ணி வந்தாள். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி ஒன்றும் இல்லை என்றாலும், ஆடம்பரத்துக்கு குறை ஒன்றும் இருக்கவில்லை. ஓஹோ என்று தான் வாழ்ந்து வந்தாள்.

டிவி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின் என்று வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடனில் வாங்கி வைத்தாள். உயர்தர ஆடைகளும் எல்லோரும் அணிந்து கொண்டார்கள். எல்லாமே பிராண்ட் பொருட்கள் தான் வாங்கிக்கொள்வார்கள். அப்பப்ப சினிமா, ட்ராமா, பார்க், பீச் என்று செல்லாவிட்டால் அவர்களுக்கு தலையே வெடித்து விடும் என்ற போல் இருந்தது. எல்லா இடங்களுக்கும் விமானத்தில் தான் பயணிப்பார்கள்.

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அடுத்தவங்க மாதிரி வாழ்ந்தே ஆகணும் என்ற பிடிவாதம்.அவர்களுக்கு எப்போதும் இருந்தது. எப்படி இதெல்லாம் நடக்குது என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ந்து போனார்கள்.

அவர்களுக்கு செற்று தொலைவுகளில் நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடமிருந்து எல்லா மாதமும் கடனை வாங்கி கொண்டு வீட்டு செலவுகளை சாமாளித்தார்கள். யாராவது கடனை திருப்பி கேட்டால் உடனடியாக அடுத்தவர்களிடம் கடன் வாங்கி அந்த கடனை மீட்டி விடுவார்கள். அப்படியாக செல்லிக்காசு கூட வட்டி இல்லாமல்அவர்களுக்கு நிறைய கடன் வாங்க முடிந்தது. எல்லோரும் அவனவன் பஞ்சப் பாட்டே பாடும் இந்த காலத்தில் அடுத்தவர்களிடமிருந்து கடன் வாங்குவதும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஒருவரிடம் கடன் வாங்குவது, அடுத்தவங்களுக்கு தெரியாமல் முன் எச்சரிக்கையாக இருந்தாள். அடுத்தவங்களிடமும் கடனை வாங்கியிருக்கோம் என்று மற்றவங்களுக்கு தெரியாமல் இருக்கும் வரல் தான் தாங்களும் வாழ முடியும் என்று நினைத்தார்கள். அடுத்தவங்களுக்கு தெரிய வந்தால் கண்டிப்பாக “நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும்” என்ற போல் ஆகிவிடும் என்று வியந்தார்கள்.

தங்கள் வண்டவாளமும் தண்டவாளத்துக்கு வந்துவிடும் என்று நினைத்தார்கள்.

நீதி, நேர்மை, நியாயம், தர்மம் என்று பார்த்தால் நடுத்தெருவுக்கு தான் வந்து நிற்கணும். கொஞ்சமாவது அடாவடித்தனம் பண்ணாமல் வாழ்க்கையில் எதுவும்

சுலபமாக சாதிக்க முடியாது என்று நினைத்தார்கள்.

வியாபாரம் பண்ண ஒரு கடையை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அதுக்கு வாடகையும் போக பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக லாபம் ஒன்றும் மிஞ்சவில்லை. கொஞ்சம் கிரடிட் கார்டை பயன்படுத்தியும் சமாளித்தார்கள். யார் எப்ப கடனை திருப்பி கேட்பார்கள் என்ற பயமும் அப்பப்ப எழுந்தது. இதயம் படபடத்தது. நிம்மதியாக அவர்களால் தூங்க முடியவில்லை. தகுதிக்கு ஏற்ப வாழ்ந்திருந்தால்,இந்த இக்கட்டான சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம். இப்படியாக காலம் கரைந்தோடியது. சந்தியாவின் மகள் சரண்யாவும் பட்ட படிப்பை முடித்திருந்தாள். வறுமையில் படிப்பில் கவுனம் செலுத்தவும் அவளுக்கு மிக சிரமமாகத்தான் இருந்தது. வறுமையின் வெப்பத்தில் நொந்து நொறுங்கிப்போனாள். அவளுக்கும் ஒரு விடிவு காலம் வரும் என்று நினைத்தாள்.

வசந்தகாலம். பல்வேறு வண்ண வண்ண பூக்கள் பூக்கும் காலம்.. மரங்கள் பழைய இலைகளை உதிர்த்து, புது இலைகளை துளிர்விட்டிருந்தது. அவை புத்தன் புது ஆடைகளை அணிந்தது போல் இருந்தது. புது இலைகள், கீழே வீழும் பழைய இலைகளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.

ஊரெங்கும் பூவாசம் நிரம்பியது. எங்கெங்கும் பசுமை நிறைந்திருந்தது.

கண்களுக்கு அது குளிர்ச்சியாக இருந்தது. இயற்க்கை வார்த்தைகளால்

வர்ணணிக்க முடியாத அளவிற்கு அழகாக, அமோகமாக தோத்தமளித்தது. அப்பப்ப வீசும் இளம் தென்றல் மனதுக்கு இதமாக இருந்தது. சுற்று சூழ்நிலைகள் சுவாரசியமாக இருந்தது. எங்கெங்கும் உல்லாசமும் உட்சாகமும் தென்பட்டது. சரண்யா மனதிலும் காதல் மலர்ந்தது. அங்கே இருக்கும் மரங்களில் அவள் தொட்டில் கெட்டி ஊஞ்சல்ஆடினாள். கூடவே அவள் இளமையும் ஊஞ்சலாடியது. அவள் மனதில் பட்டாம்பூச்சிகள் வட்டமிட்டு.

பறந்தது. முன் பக்கத்தில் சீராக வெட்டி விட்ட கூந்தல்

அவள் கன்னத்தை தாலாட்டியது. அவள் மீதி இருக்கும் கூந்தலை

கொஞ்சம் மார் பக்கங்களிலும், கொஞ்சம் பின் பக்கமுமாக

சீர் செய்துகொண்டாள். இப்படியெல்லாம் கூந்தலை

சீர் செய்யலை என்றால், சுத்த கர்நாடகம், பட்டிக்காடு என்று இந்த ஊர் உலகம்

பட்டம் கெட்டி விடும் என்று நினைத்தாள் . காலம் போன்ற கோலம் கெட்டி தானே ஆகணும்.

அவள் காதலன் பெயர் சுந்தர். அவனும் பார்க்க வாட்டசாட்டமாக இருந்தான். அவன் ஓர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தான்.

ஒரு நாள் அவர்கள் திருமணமும் தடபுடலாக நடந்து நிகழ்ந்தது. கூடிய சீக்கிரம் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.

சரண்யாவுக்கோ அடுத்தவர்களிடமிருந்து வேலை வாங்கி தான் பழக்கம்.

வறுமையில் வாடினாலும் ஒரு வேலையும் செய்ய அவள் தயாராகவில்லை. சோம்பேறித்தனம் என்று சொன்னால் போதாது, அப்படி ஒரு சோம்பேறித்தனம்.

ஒரு நாள் திடீரென்று சுந்தரின் வேலையும் தற்பொழுதாக கை நழுவி போனது.

திரும்பவும் அவள் வாழ்வில் புயல் வீசியது. சரண்யாவுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. அவள் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்தாள். நிலைகுலைந்தது தடுமாறினாள்.இது வரலும் வாழ்க்கையை ஒரு விளயாட்டாகத் தானே நினைத்தோம் என்று வருந்தினாள். நாம் துயரத்தில் இருக்கும்போது இந்த உலகம் வேடிக்கை மட்டும் தானே பார்க்கிறது என்று புரிந்துகொண்டாள். அவளுக்கு ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. கை நனையாமல் மீன் புடிக்க முடியாது என்று அவளுக்கு உறுதியாகிவிட்டது. இது வரலும் எப்படி எப்படியோ சமாளித்தோம், மேலும்அப்படியே சமாளித்து வாழ்க்கையின் வண்டியை ஓட்ட முடியாது என்று நினைத்தாள். ஒரு சின்ன வியாபாரத்தை நம்பி ஐந்து பேர் வாழ முடியாது என்று எண்ணினாள். அவள் வேலைக்காக விண்ணப்பம் செய்தாள். நாயா பேயா அலைந்தாள். ஓயாமல் உழைத்தாள் .கடவுளின் அருளால் வேலையும் அவளுக்கு கிடைத்து விட்டது. வாழ்க்கை தந்த மிக பெரிய பாடம். கடுமையாக உழைத்தால் மட்டுமே வாழ முடியும் என்று கற்றுக்கொண்டாள். இது வரலும் உற்றார் உறவினர்கள் தந்த உபதேசங்கள் அவள் காதில் விழவில்லை. அவளுக்கு வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அன்று முதல் கடுமையாக உழைக்க முடிவெடுத்தாள். வெட்டி பேச்சை குறைத்து, சாக்குபோக்கு சொல்லாமல் வேலையில் மட்டும் தன் கவுனத்தை செலுத்தினாள். காலப்போக்கில் சுந்தருக்கும் ஒரு வேலை கிடைத்துவிட்டது. அவள் ஒரு நிம்மதி பெரும்மூச்சிரைத்தாள்.

சரண்யா ஒரே மகள் என்பதால் திருமணமாகியும் புகுந்த வீட்டுக்கு செல்லவில்லை. சுந்தரும் வீட்டு மாப்பிள்ளையாக வே இருந்துவிட்டான். அலுவலுக வேலைகள் முடிந்ததும் வீட்டு வேலைகளில் கூடமாட ஒற்றுழைத்தான். சுறுசுறுப்பாக இருந்தான்.

சரண்யாவின் அம்மா அப்பாவுக்கு வயதாகிவிட்டது. அவர்களால் முந்தி மாதிரி வேலைகளை செய்ய முடியவில்லை. சரண்யாவும் சுந்தரும் வீட்டை ஆள அரம்பித்தார்கள். கொஞ்சம் இடம் கொடுத்தால் மடம் புடுங்கிவிடுவார்கள் என்ற போல் ஆகிவிட்டது நிலைமை.

தன் மகள் புகுந்த வீட்டுக்கு சென்று சீரும் சிறப்புமாக நீடூடி வாழ்வாள் என்று தான் ஒவ்வொரு தாய்தந்தையாரும் எதிர்பார்ப்பார்கள் என்று சந்தியா வருந்தினாள். இப்படி வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கிறது மட்டுமல்லமல் ஒருசேர அதிகாரமும் பண்ணுவார்கள் என்றுஅவர்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அது அவர்களுக்கு திகிலூட்டியது .வீடானாலும் நாடானாலும் யார் கையில் பணம் இருக்கிறதோ அவர்கள் ஆட்சி தானே நடக்கிறது. பணம் இல்லாததினால் பசங்கள் சொல்பேச்சுக்கெல்லாம்

ஆட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு நேர்ந்தது. பசங்கள் சொல்வதை அனுசரித்து போவதை தவிர வேறு வழி ஒன்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இப்படி தன் வீட்டிற்க்கே வந்து தங்களையே அதிகாரம் பண்ணறாங்க என்று சந்தியா வருந்தினாள். சாக்கடைக்கு போக்கிடம் எதுவும் இல்லையே. ஓடும்

தண்ணீரை தானே எல்லோரும் மதிப்பார்கள். ஆடும் வரை கூட்டம் வரும்

ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும். எல்லா ஆட்டத்துக்கும் ஓர் முடிவு இருக்கும் என்று நம்பினாள். முதியோர் இல்லத்துக்கு அனுப்பாமல் இருந்தால், அதுவே பெரிய விஷயம் என்று நினைத்து தனக்குத் தானே ஆறுதல் அளித்துக்கொண்டார்கள்.

ஒரே வாரிசு என்பதால் ஏராளமாக செல்லம் கொடுத்து சீராட்டி பாராட்டி சரண்யாவை ஆளாக்கினார்கள். அவர்கள் மனம் ஓடம் போல் ஆடியது. இடுப்பில நாலு காசு இருக்கிறவங்களுக்கு அசப்பில நாலு வார்த்தைகள் வரத்தானே

செய்யும். ஏழை என்றால் அடக்கி வாசிச்சுதானே ஆகணும். அடங்கி போவது தானே முறையும். அதில் சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடு ஒன்றும் இல்லையே. பணம் இருந்தால் மட்டுமே உரிய மதிப்பும் கிடைக்கிறது. இல்லை எனறால் எல்லோரும் மிதிக்க தானே செய்கிறார்கள். செல்லாக்காசாக இருக்கும்.

வரை தங்கள் பேச்சு எதுவும் ஈடுபடாது என்று அவர்களுக்கு மனதில் உறைத்தது.

தங்களுக்கு நேர்ந்தது எதுவும், எதிரிக்கு கூட நேர க்கூடாது என்று ஏங்கினார்கள். சீராக வாழ்வதற்கும் கொடுப்பினை வேண்டுமே. அவர்களின் பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரைந்தது. அவர்கள் குடும்ப நலனுக்காக பிரார்த்தனை பண்ணிக்கொண்டார்கள். தங்கள் பொருளாதார நிலை சரியானால் பொண்ணும் மாப்பிள்ளையும் தானாகவே தனிக்குடித்தனம் சென்று விடுவார்கள் என்று சந்தியா நினைத்தாள். கொஞ்ச நாள் எல்லோரும் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்பினார்கள். பின்னாடி தேவை படும்போது எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்ற கச்சிதமான ஒரு முடிவுக்கு வந்தார்கள். அது வரலும் பொறுத்திருந்து பார்ப்போம் என்று நினைத்தார்கள். பொறுமையும் தன்னம்பிக்கையும் தானே வாழ்க்கையின் அடிப்படையான ஆதாரமும் என்று எண்ணினார்கள்.

முற்றும்

Author : C.P.Hariharan

E mail id : Cphari_04@yahoo.co.in