Bhavana is a question mark books and stories free download online pdf in Tamil

புவனா ஓர் கேள்விக்குறி

புவனா ஓர் கேள்விக்குறி

புவனா, முகுந்தன் மல்லிகா தம்பதியரின் ஒரே வாரிசாக தான் இருந்தாள்.

.ஏக புத்ரி என்பதால் புவனா வெகு செல்லமாக தான் வளர்ந்து வந்தாள். அவள் ராஜா வீட்டு கன்றுக்குட்டி போன்ற தான் வாழ்ந்து வந்தாள். முகுந்தன் சுயமாக தான் தொழில் பண்ணி வந்தான். அப்பப்ப வரும் வேலை வேலைவாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வான். மல்லிகாவோ வீட்டில் இருந்தே சிறிய கேட்டரிங் சேவை பண்ணி வந்தாள். செலவுக்கு ஏற்ப சம்பாதிப்பதும் அவர்களுக்கு மிக சிரமமாக தான் இருத்தது. சந்தையைவிட விலை மிகவும் ஜாஸ்தி என்பதால் மல்லிகாவுக்கு வாடிக்கையாளர்கள் குறைவாக தான் இருந்தார்கள்.

ஒரே பெண் என்பதால் புவனா கேட்டதையெல்லாம் அவர்கள் வாங்கி தந்தார்கள்.அழகிலும் சரி, படிப்பிலும் சரி புவனா ஓர் சராசரி பெண்ணாக தான் இருந்தாள்.இப்படி சோம்பேறித்தனமாகவே காலத்தை கழித்தாள். என்ன பண்ணினாலும், கேள்வி கேட்பார் இல்லை என்ற திமிர் தான் அவளுக்கு என்றும் இருந்தது.

ஒரே மகள் என்றாலும் புவனாவை கவனிக்க அவள் தாய்தந்தையாருக்கு நேரம் இருக்கவில்லை. அவளை தன் போக்கிலேயே விட்டு விட்டார்கள். அவள் தட்டி முட்டி பன்னிரண்டாம் வகுப்பை முடித்து விட்டாள். மதிப்பெண்கள் மிகவும் மோசம் என்பதால் அவளுக்கு கல்லூரியில் நுழைய வாய்ப்பு கிடைக்கவில்லை. அவளுக்கு என்ன பண்ணுவது, ஏது பண்ணுவது என்று ஒன்றும் தலைகால் புரியவில்லை. அவளுக்கு கோபமும், சங்கடமும் ஒருசேர கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பொங்கி பெருகியது. அவளுக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்று தோன்றியது. கையில் கிடைத்ததையெல்லாம் வீசி எறியணும்

என்ற போல் அவளுக்கு தோன்றியது. வயசு பொண்ணு வீட்டில் வெட்டியாக இருந்தால், நாலு பேர் நாலு விதமாக தானே பேசுவார்கள். அவளுக்கு தலையே வெடித்துவிடும் என்ற போல் இருந்தது. நல்ல மதிப்பெண் பெற்றவங்களுக்கே கல்லூரியில் நுழைய முடியாத நிலையில், அவள் கல்லுரிக்கு செல்வது வெறும் ஒரு பகல் கனவாக தான் இருந்தது.

வெறும் பன்னிரெண்டாவது பாசானவங்களுக்கு, கால் சென்டர் ஜோபை தவிர வேற ஓன்றும் கிடைக்காது என்று அவளுக்கு உறுதியாகிவிட்டது. அவளின் தோழிகள் ஜாம் ஜாம் என்று மகிழ்ச்சியாக கல்லூரிக்கு போவதை பார்த்து பொறாமை பட்டாள், ஏங்கினாள். தானும் நன்றாக படித்திருந்தால் இந்த இக்கட்டான சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் என்று வருந்தினாள்.

கால் சென்டர் வேலை பயிற்சிக்காக ஒரு தனியார் கல்வி நிலையத்தில் விண்ணப்பம் செய்தாள்.

இரண்டொரு நாளில் அந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கொண்டாள். கூடிய சீக்கிரம் அவளுக்கு ஒரு கால் சென்டரில் ஒரு துக்கடா வேலையும் கிடைத்துவிட்டது. அங்கே கிடைக்கும் ஊதியம் அவளுக்கு ஒப்பனை செய்யவே

போதாது என்ற போல் தான் இருந்தது.

அழகில்லை என்றாலும், நாகரீகத்துக்கு தகுந்தபடி தன்னை நன்றாக ஒப்பனை செய்துகொள்வதில் குறை ஒன்றும் இருக்கவில்லை.

வேலைக்கு செல்ல ஆரம்பித்த போது தான், பிரசாத் கூட அவள் அறிமுகமானாள். அவன் புவனாவின் அலுவலகத்தின் பக்கத்திலேயே, ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தான். அவன் டிப்ளோமா இன் இன்ஜினியரிங் தான் பண்ணியிருந்தான். புவனாவிடம் தான் ஒரு என்ஜினீயர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். அவனும் அழகிலும் படிப்பிலும் அவளை போன்றவே சராசரியாகத்தான் இருந்தான். இரெண்டு பேரும் ஒரே காளவண்டியில் கெட்டி வைத்த காளைகள் போன்ற தான் இருந்தார்கள். அவளுக்கு வயசுக்கு ஏற்ப ஒழுக்கம், அடக்க ஒடுக்கம் எதுவும் இருக்கவில்லை. அவள் ஒரு வெகுளி பெண் போன்ற ஓடி நடந்தாள்.

நாகரீகத்துக்கு ஏற்ப நடந்ததால் வரவுக்கு மீறி செலவு

செய்து வந்தாள். காலப்போக்கில் அவர்கள் நட்பு வரம்பு

மீறியது. பிரசாத் அடிக்கடி அவள் வீட்டுக்கு சென்றான். தன் வீட்டில் அவனை பாய் பிரெண்டு என்று சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டாள். இந்த காலத்தில் பாய் பிரெண்டு இருப்பதும் சகஜம் தானே என்று மல்லிகாவும் நினைத்தாள். அவன் அவளுக்கு ஓர் பாதுகாப்பாக இருப்பான் என்று தான் எண்ணினாள்.அதனாலேயே அவளும் அவர்கள் நட்பை பெரிதாக கருதாமல் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டாள். அவர்கள் ஈர்ப்பு முந்தியது. ஒரு நாள் பிரசாதுக்கு வேலையில் இடம் மாற்றம் நேர்ந்தது. புவனா என்ன

பண்ணுவது என்று தெரியாமல் தவித்தாள். கொஞ்ச நாள் கைபேசியில் இருவரும் தொடர்பு கொண்டார்கள். அப்புறம் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு அவனிடம் சென்றாள். பிறகு அம்மாவிடம் போனை போட்டு, தான் பிரசாத் கூட வாழ விரும்புவதாக கூறினாள். மல்லிகா அதிர்ந்து போனாள்.

அக்கம் பக்கம் இருக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று

அவளுக்கு புரியவில்லை. இப்படி ஓடி போயி, ஓடுகாலி என்று பெயர் எடுத்துக்கொணடாளே என்று மிகவும் வருந்தினாள். இப்படி உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் பேரழிவில் தானே முடியும் என்று மல்லிகா நினைத்தாள். இப்படி வாழ்க்கையில் ஒரு லட்சியமும் இல்லாமல், துழையில்லா தோணி போன்ற போய்விட்டாளே என்று வருந்தினாள். தலைக்கு வந்தது தலைப்பாவோட போகவில்லையே, அவளுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.முகுந்தனுக்கும் வயதாகி விட்டது. அவன் சுகாதார நிலை

பாதிக்கப்பட்டது. மல்லிகா முற்றிலும் மனதளவுக்கு நொறுங்கி போனாள்.

பிரசாத் கூடையாவது அவள் சீரும் சிறப்புமாக நீடுடிவாழ்வாள் என்று தான் மல்லிகா கனவு கண்டாள். ஆனால் அவளுக்கென்று இன்னும் விதிவிலக்கு காத்திருந்தது அவள் அறியவில்லை.

ஒரு நாள் புவனா பிரசாதிடம் அவன் பி. டெக். சான்றிதழை கேட்டபோது தான் பிரச்சென்னையே ஆரம்பமானது, அவன் பி. டெக் பண்ணினதாக தானே கூறியிருந்தான். இப்போது டிப்ளோமா இன் இன்ஜினியரிங் சான்றிதழை காண்பிக்கிறானே. எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி பந்தா பண்ணியிருப்பான் என்று உருக்குலைந்து போனாள். இன்னும் என்னென்ன பொய் எல்லாம் சொல்லி தன்னை ஏமாற்றியிருப்பானோ என்று வியந்தாள்.

முன் பின் யோசிக்காமல் முட்டாள்தனமாக இவனை மட்டும் முற்றிலும் நம்பி வீட்டை விட்டு வந்துட்டோமே என்று நிலைகுலைந்து போனாள். அது மட்டுமானால் பறவாயில்லை. அவனுக்கு குடிக்கிற பழக்கமும் வேறு கச்சிதமாக இருந்தது. தினசரி குடிச்சிட்டு வந்து, வீட்டு கூடத்தில் கும்மி அடிச்சு கும்மாளம் போட்டான்.அதுவும் பற்றாது என்று இன்னும் சில பெண்களோடு தொடர்ப்பும் வைத்திருந்தான் என்றும் பின்னாடி தெரியவந்தது. அவனை சீர் திருந்த, முடின்ச வரலும் முயன்றாள்.ஆனால் அவள் முயற்சிகள் எந்த

பயனையும் அளிக்கவில்லை. பிரசாதின் மீது அவளுக்கு இருந்த

காதல், ஈர்ப்பு, பாசம், நேசம் எல்லாமே ஒரே நிமிடத்தில் கண்ணீரில் கரைத்து. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டில் இருந்து வந்திட்டோம் என்பதால், அங்கே திரும்பி செல்வதற்கும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது என்று புவனா நினைத்தாள். ஆனாலும் இவனிடம் சேர்ந்து

மேலும் வாழ்க்கையை தொடர முடியாது என்று அவளுக்கு சந்தேகமின்றி உறுதியாகிவிட்டது. இவனோடு தொல்லை தாளாமல், ஒரு நாள் பொட்டி படுக்கையுடன் தன் வீட்டுக்கே வந்து சேர்ந்தாள். எப்படி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு சென்றாளோ, அதேபடியே, அவனிடமும் சொல்லாமல் கொள்ளாமல், போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்ற போல், பொட்டி படுக்கையுடன் பிறந்த வீட்டுக்கே வந்து சேர்ந்தாள். அம்மாவிடம் நடந்ததை எல்லாம் கூறினாள் .

அவளுக்கு பிறந்த வீட்டில் இருப்பதை தவிர வேறு வழி ஒன்றும் தெரியவில்லை.

இவ்வளவு பிரச்சென்னைகளை வெச்சுகிட்டு, வேலையில் கவுனம் செலுத்த அவளால் இயலவில்லை. வேலையில் இருந்தும் அவளை தூக்கிவிட்டார்கள்.

துன்பதுயரங்கள் தனியாக வருவதில்லையே.

அவன் கூட போகும் போது எதுவும் யோசிக்கவில்லையே என்று வருந்தினாள். அன்று காதல் தானே முக்கியமாக தோன்றியது. பெண் புத்தி பின் புத்தி என்பார்கள். இப்படி வாழ்க்கையையே இழந்து சுக்குநூறாக நிற்கிறோமே என்று கண்ணீர் வடித்தாள். இப்படி ஏமாந்து போயிட்டோமே என்று அம்மாவிடம் கூறி கேவி கேவி அழுதாள். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று மல்லிகாவுக்கும் தெரியவில்லை.

பல்வேறு இடங்களில் புவனா வேலை பார்த்தாள். கவுன குறைவினால் எல்லா வேலையும் தண்ணீரில் போட்ட கோலம் போன்ற கை நழுவி போனது. கொஞ்ச நாள் ஓய்வு எடுப்போம் என்று திட்டவட்டமாக ஓர் முடிவுக்கு வந்தாள்.

அக்கம் பக்கம் இருக்கிறவங்க துக்கம் விசாரித்து வேடிக்கைதான் பார்த்தார்கள். மல்லிகாவுக்கு ஊராருக்கு பதில் சொல்லியே போதும் போதும் என்றாகிவிட்டது. நடந்து நிகழ்ந்ததையெல்லாம் ஊராரிடம் மறைக்க முயன்றார்கள். என்றாலும் எவளவு நாள் தான் பொய் சொல்லி சமாளிப்பது என்று அவ்ரகளுக்கு தெரியவில்லை. ஊராரிடம் பிரசாத் வேலையில் இடம் மாற்றுதலால் தனியாக இருப்பதாக கூறினார்கள்.

மனதில் இருப்பதை முகம் காட்டி கொடுக்கும் என்பார்கள். புவனாவின் முக பாவங்களில் இருந்தே, அவள் வாழாவெட்டியாக பிறந்த வீட்டுக்கு நிரந்தரமாக வந்துவிட்டாள் என்ற முடிவுக்கே அக்கம் பக்கம் இருக்கிறவர்கள் வந்துவிட்டார்கள். எது எப்படி இருந்தாலும், வாழ்ந்து தானே ஆகணும் என்று புவனா எண்ணினாள். ஊர் வாயை அடக்க முடியாதே. தப்பு பண்ணிட்டோம். ஒரு நாள் இல்லை என்றால், இன்னொரு நாள் ஒத்துக்கொண்டுதானே ஆகணும். உப்பை தின்றால் தண்ணீர் குடித்து தானே ஆகணும். எவ்வளவு நல்லது பண்ணினாலும், செய்த ஒரு தப்பை தானே இந்த ஊர் உலகம் சுட்டிக்காட்டுகிறது.

உற்றார் உறவினர்கள் தூக்கம் விசாரித்து சென்றுவிட்டார்கள். அப்புறம் அவர்கள் அவங்க பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

அக்கம் பக்கம் இருக்கிறவங்க அவளை பரிதாபமாக பார்த்தார்கள். ஒரு சிலர் பார்த்தும் பார்க்காமலேயே போனார்கள். சிலர் அவளை பார்க்கும்போது வேணுமென்றே முகத்தையே திருப்பிக்கொண்று சென்றார்கள், இன்னும் சிலர் அவள் முகத்துக்கு நேரடியாகவே காறி துப்பினார்கள். எல்லாத்துக்கும் மௌனம் சாதிப்பதை தவிர வேற வழி ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை

அடுத்து எப்படி காயை நகர்த்துவது என்று அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பிரசாதிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அவன் நினைச்சதை சாதிச்சிட்டான். இன்னமும் அவன் நினைவில் வாழ்வதில் எந்த ஒரு பயனும் இலை என்று அவளுக்கு அடிமனதில் ஆணியாக உறைத்தது. அவளுக்கு இவ்வளவு சிறிய வயதில் வாழ்க்கையே முடிந்தது போன்ற தோன்றியது, இவ்வளவு சீக்கிரம் அவள் வாழ்க்கை முடிந்துவிடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. மனதை தேத்திக்கொண்டு வேலையில் கவுனம் செலுத்துவதை தவிர வேறு வழி ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை. அவளுக்கு தன் தாய்தந்தையாரை தவிர ஆற்றுதல் கூறவும் யாரும் இருக்கவில்லை.

திடீர் என்று ஒருநாள் அவள் அப்பாவும் இறந்துவிட்டார். அவள் மன நிலை இன்னும் பாதிக்கப்பட்டது. கொஞ்சநாள் அம்மாவுக்கு கேட்டரிங் சேவையில் கூடமாட உதவி செய்தாள். அவங்க ரேட் மார்க்கெட் ரேட்டை விட ஜாஸ்தி என்பதினாலும், தரம் மட்டமாக இருந்ததினாலும் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

ஊர் உலகம் அவர்களை வெறுத்து ஒதுக்கியது. அவர்களுக்கு ஊரை விட்டே ஓடி போகின்ற சூழ்ந்தலை ஏற்பட்டது. ஊர் வம்பை எவ்ளவு நாள் தான் பொறுத்து போகிறது என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

நதியில் படிந்து கிடக்கும் கூழங்கல் போன்ற அவள் வாழ்க்கையும் ஆகிவிட்டது. எப்போதாவது வரும் தண்ணீரின் அழுத்தத்தில் அந்த கூழாங்கல் கொஞ்சம் நகரும்.

அவள் கண்ணீரே இல்லாமல் கண்வாங்கினாள். பாசத்தை காணாமல் தினம் ஏங்கினாள். அன்று சிவப்பாக இருந்த அவள் கன்னம் இன்று வெளுத்துவாங்கியது.

மல்லிகாவுக்கோ சமையலை தவிர வேற எதுவும் தெரியாது. ஒரே வாரிசு என்றாலும், தன் மகளுக்கு சீரான ஒரு வாழ்க்கையை அமைத்து தர முடியவில்லையே என்று தனம் தனம் ஏங்கி கருகி போனாள்.

தன் மகளின் வாழ்க்கை இப்படி நாலுபேர் சொல்லிக்கொள்ளும்படி ஆகிடுத்தே என்று ஒப்பாரி வைத்தாள். அன்று கொஞ்சமாவது கண்டிச்சு வளர்த்திருந்தால் இன்று இந்த இக்கட்டான சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் என்று நினைத்தாள்.

அவளுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து இன்று குட்டி சுவர் ஆக்கிவிட்டோமே என்று வருந்தினாள். அவரும் மகராசனாக போய் சேர்ந்திட்டார். அன்று அரவாரமாக இருந்த வீடு இன்று கலவரம் முடிந்தது போல் ஆகிவிட்டது.

தன் மகளுக்கு நாலு காசாவது சேர்த்து வெச்சுட்டு சென்று சேரவேண்டும் என்று மல்லிகா நினைத்தாள்.

அவன் இவ்வளவு போலியாக இருப்பான் என்று புவனா கனவிலும் எதிர்பார்க்கவில்லை. நம்பி வந்தவளை இப்படி சாகடித்திட்டானே. அடுத்தவங்களை ஏமாற்றுபவர்கள் ஏமாறுவதில்லையே. ஏமாறுவர்களுக்கு மற்றவங்களை ஏமாற்றவும் தெரிவதில்லையே. அவள் இரண்டாவது ரகம் என்று நினைத்தாள்..

பின்பு பிரசாதை பற்றி யோசிப்பது முட்டாள்தனம் என்று நினைத்து

அவனை தலை முழுகி விட்டாள்.அவனும் அவன் போக்கிலேயே இருந்து விட்டான். முறைப்படி அவர்கள் திருமணமும் நடக்கவில்லையே, என்றால் தானே விவாக ரத்தும் செய்ய முடியும்.

தன் மகளை நன்றாக படிக்க வைத்து, ஒரு பட்ட படிப்பாவது கொடுக்கணும் என்று மல்லிகை நினைத்திருந்தாள்.

அப்புறம் அவள் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்தணும் என்றெல்லாம் கூட கனவு கண்டிருந்தாள். அவள் கனவுகள் அத்தனையும் ஒரே நிமிடத்தில் கண்ணீரில் கரைந்துவிட்டதே என்று வருந்தினாள். சீரும் சிறப்போட வாழ்வதற்கும் கொடுப்பினை வேண்டுமே என்று எண்ணினாள்.மல்லிகாவுக்கு நடந்தது எதுவும் ஜீரணிக்க முடியவில்லை.

இப்படி திருமணமாகாமலேயே சீரழிஞ்சு நடு தெருவிற்க்கே வந்துவிட்டாளே

என்று அவள் உள்ளம் தடுமாறியது. நம்பிக்கை தான் வாழ்க்கை என்றாலும், யாரையும் கண்மூடித்தனமாக நம்ப முடியாது என்று கற்றுக்கொண்டாள்.

புவனா வானத்தை வெறித்து பார்த்தாள். தன் காட்டில் மேலும் மழை பொழியாது என்று புவனாவுக்கு உறுதியாகிவிட்டது. அவள் சிறகிழந்த பறவை போன்ற தவித்து தடுமாறினாள். அவளுக்கு எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அவளுக்கு தன் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று அலைபாய்ந்தது. அவள் ஓர் கேள்விக்குறியாகவே இருந்துவிட்டாள். காற்றில் பறக்கும் பட்டம் போன்றவே,வாழ்க்கை போகும் வழியில் போவதை தவிர வேறு வழி ஒன்றும் அவளுக்கு தென்படவில்லை. புவனாவின் வாழ்க்கை ஒரு புரியாத புதிர் போன்ற, கேள்விக்குறியாகவே இருந்துவிட்டது.

முற்றும்

Author : C.P.Hariharan

e mail id : cphari_04@yahoo.co.in