கனவு 9
ஹரிதா வீட்டில் எல்லோரும் தீபாவளி கொண்டாட தயாராகி கொண்டிருந்தனர். இந்த வருஷ தீபாவளியை சிறப்பாக கொண்டாட தீர்மானித்திருந்தனர். ஹரிதா சமருடன் ஷாப்பிங் போய் வந்தாள். ஆறுமுகம் தீபாவளியை கொண்டாட விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தான் .சௌமியா தீபாவளியை கொண்டாட ஹரிதாவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்திருந்தாள்.நாட்கள் வேகமாக ஓடின.சமர் தீபாவளிக்கு தன்னுடைய வீட்டுக்கும் ஹரிதா வரவேண்டும் என அன்பு கட்டளை இத்திருந்தான். தீபாவளி அன்று புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தாள் ஹரிதா. சௌமியா வந்து அவளை தன் வீட்டிற்கு அழைத்து போனாள். என்னடி சமர் என்ன சொல்லுறான். தலைதீபாவளியா ? என்றாள் சௌமியா. அதெல்லாம் ஒன்னுமில்லைடி சும்மாதான் கூப்பிட்டிருக்கிறான் என்றாள் ஹரிதா. வேற என்னடி விசேஷம் ? ஆறுமுகத்துக்கு ஃபோன் பண்ணுவோமா? நீயே பண்ணு சந்தோஷப்படுவான் என்றாள் ஹரிதா . இது இப்போ தேவையா என்றாள் சௌமியா. ம் சும்மா அவனும் நம்ம ஃப்ரெண்ட்தானேடி. சரி சரி ஃபோன் பண்ணுறேன் என்றாள். ஆறுமுகத்துடைய அப்பா நம்பருக்கு ஃபோன் செய்தா சௌமியா. அவனை கூப்பிட்டு ஃபோன் கொடுத்தார். என்ன சௌமியா வாட் எ சர்ப்ரைஸ் என்றான். டேய் நீ எப்படி இருக்கே என்றாள் . நான் நல்லா இருக்கேன் ஹேப்பி தீபாவளி என்றான். சேம் டு யு என்றாள். ஹரிதாவும் ஃபோன் வாங்கி பேசினாள். என்னடா இன்னைக்கு கூட எங்க ஞாபகம் வரலியா என்றாள் . அப்படியில்லை நினைத்துக்கொண்டுதான் இருந்தேன் . சரி ரொம்ப வழியாதே மறுபடி ஃபோன் பண்ணுகிறேன் என்றாள்.
சமர் வீட்டுக்கு சௌமியாவையும் கூப்பிட்டாள் ஹரிதா. நான் எதுக்குடி லவ்வர்ஸ் மத்தியிலே என்றாள் . ம் ரொம்ப பண்ணாதே . நான் மட்டுமே போகிறேன். கோவித்துக்கொள்ளாதே சில சமயம் தனியாய் போவதுதான் நல்லது என்றாள் சௌமியா. ஓகே ஓகே எனக்கு புரிகிறது.சமர் வீட்டுக்கு மாலை 4 மணி போல போயிருந்தாள். அவன் அப்போதுதான் தூங்கி எழுந்திருந்தான். இவளை பார்த்ததும் ரொம்ப மகிழ்ந்தான்.வாருங்கள் பேரரசியே என்றான்.பலகாரங்களை அவனிடம் கொடுத்தாள். அப்பா அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க என்றான். என்ன எப்ப பார்த்தாலும் பிஸியாவே இருக்காங்க. என்னாலே அவங்களை பார்க்க முடியாம போயிடுது என்றாள். டிரஸ் சூப்பரா இருக்கு என்றான். தாங்க்ஸ் சமர். அவன் அவளை அணைக்க முயன்றான். டேய் அப்பா அம்மா வந்துட போறாங்க கொஞ்சம் தள்ளியே இரு என்றாள். ம் நீ எப்பவும் இப்படித்தான் என்றான்.பலகாரங்கள் கொடுத்தான் சாப்பிட்டாள் . கொஞ்ச நேரம் டிவி பார்த்தாள் . அவனுடன் சேர்ந்து சிறிது நேரம் பட்டாசு வெடித்தாள். நீ இந்த தீபாவளியை ஸ்பெஷல் ஆக்கியதற்கு நன்றி என்று சொன்னான். வீட்டில் டிராப் பண்ணுகிறேன் என்றான். டேய் நீ எங்கேயும் அலைய வேண்டாம் .. அப்பா அம்மா வந்தால் நான் வந்துவிட்டு போனதாக சொல்லு என்றாள். ஏதும் ஸ்பெஷல் இல்லையா என்றான் அவன் முகம் வாடி இருந்தது.அவள் எதுவும் சொல்லவில்லை. விடைபெற்றுக்கொண்டாள்.
அப்பா, அம்மாவுடன் கோவிலுக்கு போய் வந்தாள் ஹரிதா.தனக்கும் சமருக்கும் இடையே எந்த பிரச்சனையும் வரக்கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். அப்பா, அம்மா தன் மீது வைத்திருக்கும் எப்போதும் நம்பிக்கையை காப்பாற்ற உதவு கடவுளே என்றும் பிரார்த்தனை செய்தாள்.தீபாவளி வந்த வேகத்தில் போய்விட்டதென எல்லோருமே புலம்பத்தான் செய்தார்கள். தீபாவளி வரும் முன் இருக்கும் எதிர்பார்ப்பே தனிதான் ஆனால் அது புயல் வேகத்தில் தீர்ந்துவிடும் என்று யார்தான் நினைப்பார்கள். ஹரிதா ஸ்கூல் செல்ல வேண்டிய நாள் வந்தது. ஆறுமுகம் அன்று ஸ்கூல் வர மாட்டேன் என்று சொல்லியிருந்தான். அவனுக்கு ஸ்பெஷல் விடுமுறை ஹாஸ்டலில் வருஷமேல்லாம் காலத்தை கழிக்கிற அவனுக்கு அன்று கூடுதல் விடுமுறை. அவனில்லாதது என்னவோ போலஇருந்தது.சௌமியா வந்திருந்தாள். என்னடி உன் ஃப்ரெண்ட் வரலைன்னு ரொம்ப பீல் பண்ணுற போல என்றாள் சௌமியா. ஆமாண்டி அதுக்கென்ன இப்போ. ம் நம்ம ஸ்கூலுக்கு புது விளையாட்டு டீச்சர் வருகிறாராம் என்றாள். என்னடி சொல்லுற? நம்ம பழைய பரமசிவம் ரிடயர் ஆகிவிட்டாரில்லையா அதுதான் புதிதாக இவர் வருகிறார். பேரென்ன? இளங்கோ. நல்ல பெயர் என்றாள் ஹரிதா. ஆள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாம் என்றும் சௌமியா சொன்னாள். நமமக்கென்ன நாம என்ன ஓட்டப்பந்தயமா ஓட போறோம் என்றாள் ஹரிதா.அதுவும் சரிதான் என்றாள் சௌமியா.
அப்பாவிடம் ஸ்போர்ட்ஸ் டீச்சர் வருகை பற்றி சொன்னாள் ஹரிதா. சரி நீ என்ன செய்யப்போகிறாய் என்றார். தனக்கும் ஆர்வம் இருக்கிறது என்பதை காண்பிக்க விரும்பினாள். அடுத்த இரண்டு நாட்களில் இளங்கோ சார் வகுப்புக்கே வந்துவிட்டார். அவர் அதிகம் பேசுவார் என எதிர்பார்த்தாள். ஆனால் அவர் சிறிய அறிமுகம் மட்டுமே செய்தார். எல்லோரும் விளையாட கட்டாயம் வர வேண்டும் என்றார். அவருக்கு 35 வயதுதான் இருக்கும். நல்ல பிட்டாக இருந்தார். முதல் பார்வையில் முரட்டு தோற்றம் கொண்டவராய் இருந்த போதும் நல்ல தெளிவுள்ள , கனிவுள்ள மனிதனாக தோன்றினார். வகுப்பில் எல்லோருக்கும் அவரை பிடித்து விட்டது. இனி கணக்கு டீச்சர் விளையாட்டு பீரியடை இளங்கோவிடம் கடன் வாங்க முடியாது என்று பசங்கள் பேசிக்கொண்டனர்.ஆறுமுகம் பலகாரங்கள் கொண்டு வந்திருந்தான். எப்படி போச்சு தீபாவளி என விசாரித்தாள் ஹரிதா. என்னவோ உங்களையெல்லாம் பார்க்காமல் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றான்.அடுத்த தீபாவளியை நாம் ஆறுமுகம் வீட்டில் கொண்டாடுவோம் என்றாள் சௌமியா. நிச்சயமாக என்றான் ஆறுமுகம்.
இளங்கோ ஆறுமுகத்தின் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்தை கேள்விப்பட்டு அவனை கூப்பிட்டு விசாரித்தார். அவன் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருப்பது கண்டு சந்தோஷப்பட்டார். அவனுக்கு தெரிந்தவர்கள் ஸ்போர்ட்ஸில் ஆர்வமாக இருப்பவர்கள் பெயர் கேட்டதும் அவன் உடனே சொன்ன பெயர் ஹரிதா . அவர் ஹரிதாவையும் அவனுடன் விளையாட விரும்புபவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டார்.ஹரிதா முதலில் தயங்கினாலும் பிறகு ஆறுமுகத்திடம் நன்றி தெரிவித்தாள். என்னடி ஸ்போர்ட்ஸ் லிஸ்ட் ல பேர் கொடுத்திருக்கியாமே இனி உன்னை சமர் எப்படி பார்ப்பான் என்றாள் சௌமியா. அதெல்லாம் ஒண்ணுமில்லை. இது ஒரு அருமையான வாய்ப்பு தேவையில்லாத சிந்தனைகளில் இருந்து நான் விடுபட ஒரு நல்ல வாய்ப்பு . இனி என் இலக்கு நன்றாக விளையாடுவதுதான் என்றாள் ஹரிதா . இதை கேட்ட சௌமியா வாயடைத்துப்போனாள் . ஆனால் அவளுக்கு ஸ்போர்ட்ஸ் மீது அத்தனை ஆர்வமில்லை.நாட்கள் செல்ல செல்ல இளங்கோ எல்லா ஸ்போர்ட்ஸ் கிளப்பின் நடவடிக்கைகளை சீர்படுத்த தொடங்கினார். காலையிலும் மாலையிலும் பிராக்டிஸ் செய்வதற்கான ஏற்பாட்டை செய்தார்.
இளங்கோ விளையாட்டை மாணவர்கள் நேசிக்க வேண்டும் என்றும் நம்முடைய வாழ்வின் ஒரு சிறப்பான பகுதி ஸ்போர்ட்ஸ் என்றும் கூறினார்.ஹரிதா காலையில் ஜாகிங் செல்ல தொடங்கினாள்.அப்போது யோகா டீச்சர் சிந்துவை பார்த்தாள். அவளுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயம் என்றாள்.இப்போதும் காதல் குழப்பம் இருக்கிறதா என்று ஹரிதாவை கேட்டாள். அதெல்லாம் இப்போது இல்லை. நான் விளையாட விரும்புகிறேன் என்றும் சொன்னாள். ஆல் தி பெஸ்ட் ஹரிதா என்று சிந்து சொன்னாள். நேரம் இப்போதெல்லாம் சரியாக இருந்தது. சமரை பற்றி நினைக்கவே நேரம் இல்லை.அவள் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றவற்றில் பங்கு பெற விரும்பினாள். ஆறுமுகம் இளங்கோவிடம் நன்கு பழகத்தொடங்கி விட்டான். அவனும் , ஹரிதாவும் அவரிடம் வெளிப்படையாக தங்கள் சந்தேகங்களை கேட்க தொடங்கி விட்டிருந்தனர் .ஹரிதா விளையாடுவதை பார்க்க அவள் அப்பா ஸ்கூலுக்கே வந்திருந்தார். அவருக்கு ரொம்ப பெருமையாய் இருந்தது. இளங்கோவினை பாராட்டிவிட்டு சென்றார். ஹரிதா ஆறுமுகம் கூட மாலை 8 மணி வரை விளையாட்டு பிராக்டிஸ் செய்தாள்.
சமர் சௌமியாவுக்கு ஃபோன் பண்ணியிருந்தான். என்ன செய்கிறாள் ஹரிதா ஆளையே பார்க்க முடியவில்லை என்றான். அவள் லாங் ஜம்ப் ஹை ஜம்ப் பிராக்டிஸ் செய்கிறாள் என்று சொன்னாள். ம் இப்போ எதுக்கு இவளுக்கு இந்த வேலை என்றான். அதென்னவோ ஆறுமுகமும் அவளும் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் காட்டுகிறார்கள்.இளங்கோவும் அவர்களுக்கு உதவுகிறார் என்று சௌமியா சொன்னாள். யார் அது இளங்கோ . அவர் புதிதாக வந்திருக்கும் ஸ்போர்ட்ஸ் டீச்சர் என்றாள். சரி நான் ஹரிதாவை பார்க்க விரும்புவதாக அவளிடம் சொல் என்றான். மறுநாள் உன் ஆள் தவித்து போய் கிடக்கிறான் ஹரிதா நீ அவனை ஒருமுறை பார்த்து வா என்றாள் சௌமியா. அவனுக்கென்ன இப்போ அவசரம் என்றாள் ஹரிதா. இல்லைடி அவன் எனக்கு ஃபோன் பண்ணினான் என்று சொன்னாள். மறுபடி அவன் ஃபோன் பண்ணினால் நான் சண்டே அன்று அவனை பார்ப்பதாய் சொல்லு என்றாள் ஹரிதா. சரி சொல்லுகிறேன். மாலை வேளை இப்போதெல்லாம் இனிமையாக இருப்பதாக ஆறுமுகத்திடம் சொன்னாள் ஹரிதா.
இரண்டு நாட்களாக இளங்கோவுக்கு உடல் நிலை சரியில்லாததால் பள்ளிக்கு வரவில்லை. இவள் நேரத்தோடு வீட்டுக்கு வந்துவிட்டாள். சமரை பார்த்து பேசினால் தேவலாம் என நினைத்தாள். சண்டே பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டாள் . என்ன சமரிடம் பேசுவது என்று யோசித்தாள். அவனை இப்போதெல்லாம் பார்க்க முடியாத வருத்தம் அவளுக்கும் இருந்தது. ஆனால் இந்த சான்ஸ் விட்டால் மறுபடி தன்னால் ஸ்போர்ட்ஸ் பக்கம் வர முடியாது என்ற எண்ணம் இருந்தது. இளங்கோ அப்பாவுக்கு ஃபோன் பண்ணியிருந்தார். சாரி ஹரிதா கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றார் இளங்கோ. பிராக்டிஸ் நிறுத்த வேண்டாம். நான் நாளைக்கு வந்துவிடுவேன் என்றார். சரி சார் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்றாள். ஆறுமுகத்திடம் ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாள்.அவன் நாம் நாளை நேரத்தோடு பிராக்டிஸ் துவங்கி விடுவோம் என்றான். சரி ஆறுமுகம் என்றாள்.
ஜாகிங் முடித்த கையுடன் காலை 6 மணிக்கே கிரவுண்ட் போய்விட்டாள் .ஆறுமுகம் சற்று தாமதமாக வந்தான். சாரி சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது என்றும் சொன்னான். அதனால் பரவாயில்லை. அவர்கள் பிராக்டிஸ் துவங்கினார்கள். இளங்கோ வந்துவிட்டார். இவர்களை பார்த்ததும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். இப்போது எப்படி இருக்கிறீர்கள் என கேட்டாள் ஹரிதா. பரவாயில்லை. நான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று சொன்னார். அவர் இருவரையும் அழைத்து போய் டிபன் வாங்கி கொடுத்தார். நான் இல்லாத போதும் நீங்கள் இருவரும் தொடர்ந்து பிராக்டிஸ் பண்ண வேண்டும் என்றார். சண்டே சமரை கோவில் அருகே சந்தித்தாள் ஹரிதா. நான் உன்னிடம் நிறைய பேச வேண்டும் என்றான் சமர். நானும்தான் உன்னிடம் பேச வேண்டும் என்றாள் ஹரிதா. மாலை மேகங்கள் இருட்டி மழை வரும் போல தோன்றியது.