harithavin pagal kanavukal in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஹரிதாவின் பகல் கனவுகள் part 10

Featured Books
Categories
Share

ஹரிதாவின் பகல் கனவுகள் part 10

கனவு 10

சமர் ஹரிதாவையே பார்த்தவண்ணம் நின்றிருந்தான். என்ன விஷயம் சமர் அப்படி பார்க்கிறாய் என்றாள். நீ என்ன நினைக்கிறாய் என்பதே எனக்கு புரியவில்லை என்றான். நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்றாள். அந்த இளங்கோ என்ன செய்து விட்டார் என்று அவர் சொல்படி நடக்கிறாய் என்றான். ஓ அவ்வளவுதானா இதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா ? நீ என்னை நேசிக்கிறாயா இல்லையா . நான் பலமுறை உன்னிடம் சொல்லிவிட்டேன் ஆனால் நீ ஏன் என்னை எப்பவும் சந்தேகபடுகிறாய் .. அப்படியில்லை ஹரிதா என்னால் உன்னை பிரிந்திருக்க முடியவில்லை. நீ என்னடாவென்றால் என்னை கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறாய். இதை கேட்ட ஹரிதா எதுவும் சொல்லாமல் சரி சமர் என்னால் உன்னை புரிந்து கொள்ள முடிகிறது நீதான் அவசரப்படுகிறாய். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன் என்றான் சமர். என்ன முடிவு நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்றான். இதற்குத்தான் இத்தனை பேசினாயா சமர். என் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்பதை நினைத்துப் பார்த்தாயா என்றாள். சரி உன் விருப்பம் போல செய் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனாள்.

அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது. ஆனால் கஷ்டப்பட்டு கண்ணீரை நிறுத்திக்கொண்டாள் . இரவு ஒரே யோசனையாக இருந்தது. அப்படியே உறங்கியும் போனாள். காலையில் சிறிது லேட் ஆக எழுந்து பள்ளிக்கு போனாள். அவள் மனதில் சலனங்கள் இல்லை. சௌமியா விசாரித்தாள். அவளிடம் நடந்ததை சொன்னாள். அவன் அவ்வளவு தூரம் போய்விட்டானா நீ என்ன முடிவு எடுத்திருக்கிறாய் என்றாள் சௌமியா. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. எங்கிருந்து இவனுக்கு என் மேல் அதிகாரம் செலுத்தும் நோக்கம் வந்தது. அவன் என்னை அளவு கடந்து நேசிக்கிறான் சரி ஆனால் என்னை அவன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைப்பது என்ன நியாயம் என்றாள் ஹரிதா. ஆறுமுகம் என்ன ஹரிதா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்றான். சௌமியா சமர் அவளை பிரேக் அப் செய்துவிட்டான் என்றாள். ஓ அவன் நல்ல மாதிரி ஆச்சே என்றான். ம் எல்லோரும் ஆரம்பத்தில் அப்படித்தான் ஒரு பெண்ணிடம் காட்டிக்கொள்ள விரும்புவார்கள். பிறகு தங்கள் வேலையை காட்டுவார்கள். எல்லோரையும் அப்படி சொல்ல முடியாது என்றான் ஆறுமுகம். எனக்கு என்னவோ போல இருக்கிறது என்றாள் ஹரிதா. அவன் போனதில் எனக்கு வருத்தமில்லை ஆனால் போன விதம்தான் வருத்தம் அளிக்கிறது.

இளங்கோ கண்டுபிடித்துவிட்டார். என்ன ஹரிதா கவனமெல்லாம் எங்கு இருக்கிறது.கவனம் சிதறினால் விளையாட்டில் வெற்றி பெற முடியாது என்றார். எனக்கு புரிகிறது சார் ஆனால் சமர் இப்படி சொல்வான் என நினைக்கவில்லை என்றாள். யார் சமர்? அவள் சொன்னாள். நீ சின்ன பெண் இத்தனை கஷ்டம் உனக்கு வந்திருக்க கூடாது. இதெல்லாம் இந்த வயதில் வரும் சாதாரணமான விஷயம். அவன் உங்களை தப்பாய் பேசியதுதான் எனக்கு வருத்தம் என்றாள். அதை விடு நான் அவனிடம் பேசிக்கொள்கிறேன். நீ அவன் ஃபோன் நம்பர் கொடு என்றார். கொடுத்தாள் . நீ எதை பற்றியும் கவலைப்படாதே.. நீ விளையாட்டிலும் , படிப்பிலும் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும் என்றார்.சரி சார் என்றாள். நீங்கள் அவனிடம் கடுமையாக பேச வேண்டாம் என்றாள். நான் நிச்சயம் அவ்வாறு பேச மாட்டேன் என்றார். ஹரிதா அப்போதைக்கு நிம்மதி அடைந்தாள் . இனி அது பற்றி தான் கவலைப்பட தேவையில்லை என்றே எண்ணினாள். ஆறுமுகம் நன்றாக பிராக்டிஸ் செய்து வந்திருந்தான். அடுத்த சில நாட்களில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற இருந்தது.ஹரிதாவும் , ஆறுமுகமும் கலந்து கொள்ள இருந்தார்கள்.

இளங்கோ சமருக்கு ஃபோன் போட்டார். அவனை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக சொன்னார். அவன் தயங்கினாலும் சரி வருகிறேன் என்று சொன்னான். அவன் மனதில் குழப்பமே மிஞ்சியிருந்தது. எப்படியும் ஹரிதா தனக்குத்தான் சொந்தம் என்ற நினைப்பு அவன் அப்படி நடந்து கொள்ள காரணமாய் இருந்தது. அவனுக்கு தான் யார் என்பது நினைவில் இல்லை . அவன் வேறு ஹரிதா வேறு என்ற உணர்வே அவனிடத்தில் இல்லை. இப்படியாக தடுமாற்றம் அடைந்திருந்தான். இளங்கோ அவனை தன் வீட்டருகே இருக்கும் பார்க்குக்கு வர சொல்லியிருந்தார். அவன் மாலை 4 மணிக்கே அவர் வர சொன்ன நேரத்துக்கே போய்விட்டான். இளங்கோ தன்னை அறிமுகபடுத்திக் கொண்டார். என்ன விஷயம் சார் ஹரிதா அப்படி நடந்துகொள்ள நீங்கள்தான் காரணமா என்றான். அப்படியில்லை சமர் நான் நினைத்ததை விட நீ ஸ்மார்ட். ஆனால் அவளோ சின்ன பெண் அவளிடம் பிரேக் அப் அது இது என்று பேசியிருக்கிறாய். ம் அது எங்கள் பெர்சனல் விஷயம் என்றான். இருக்கட்டும் ஆனால் அவள் எவ்வளவு வருத்தப்பட்டாள் என்பது எனக்கு தெரியும் என்றார் இளங்கோ. அதெல்லாம் நடிப்பு என்றான் சமர். இதற்கு மேல் பேசி பலன் இல்லை ..நீ இனிமேல் இது சம்பந்தமாக தொந்தரவு செய்ய மாட்டாயே என்றார். இல்லை நிச்சயமாக? நிச்சயம் அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றான்.அவர் விடைபெற்றுக்கொண்டார்.

ஹரிதா மறுநாள் ஆர்வமாக இளங்கோவிடம் என்ன சார் என்ன ஆச்சு?சமர் என்ன சொன்னான் என்று கேட்டாள் . சமர் உனக்கு பொருத்தமானவன் இல்லை. நீ கொஞ்சம் கொஞ்சமாக அவனை மறக்க முயற்சி செய் என்றார். சரி சார். அவன் முரட்டு பிடிவாதக்காரனாக இருக்கிறான். அவன் உன்னை நேசிப்பது சரி ஆனால் வேறு எந்த நிகழ்விலும் நீ பங்கேற்க கூடாது என்பதெல்லாம் தவறு என்றார். நீ உன்னை கவனித்துக் கொள் மற்றதெல்லாம் தன்னாலே நடக்கும் என்றும் சொன்னார். அவள் இது பற்றி மறுபடி சௌமியாவிடமோ , ஆறுமுகத்திடமோ பேசவில்லை. சமர் மறுபடி ஹரிதாவை தொடர்பு கொள்ளவில்லை. இவளும் அதுபற்றி கவலைப்படவில்லை. மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டாள் ஹரிதா. அவளிடம் இருந்த பயம் , கூச்சம் போன்றவை இப்போது மறைந்து போயிருந்தது. அவள் மூன்றாம் பரிசு வாங்கியிருந்தாள். ஆறுமுகம் கூடைப்பந்து அணி இரண்டாம் பரிசு வென்று இருந்தது. இளங்கோ இருவரையும் பாராட்டினார். சௌமியா ட்ரீட் கேட்டதால் ஹரிதா, சௌமியா ஆறுமுகம் மூவரும் ஒரு ஐஸ் கிரீம் பார்லர் சென்றிருந்தனர். ஹரிதா மனதில் தான் தெளிவான பாதையில் செல்வதாக தோன்றியது.

சமர் அவனுடனான நட்பு இப்படி போகுமென்று நினைக்கவில்லை ஹரிதா . அவள் மனதில் திட்டங்கள் இருக்கவில்லை. ஆனால் சமர் மனதில் இருந்தது. அவளை கல்யாணம் பண்ணி குழந்தை பெரும் கனவெல்லாம் இருந்தது. சமர் நல்லவன் அவனுக்கு குறையில்லை ஆனால் தான் அவனுக்கு நிகரில்லாதது போல அவன் நடந்து கொண்டதுதான் ஹரிதாவுக்கு வருத்தம் அளித்தது. என்ன இருந்தாலும் அவன் ஆண்பிள்ளை அல்லவா எல்லோரையும் போலத்தான் அவனும் . ஹரிதா அடுத்த இலக்கை நினைக்கவில்லை. அவள் மனம் அன்றாட வாழ்வில் நிலைத்திருந்தது. இப்போதைக்கு அது தரும் அமைதியே போதும் என்று தோன்றியது.ஆறுமுகம் அவளை விளையாட்டில் ஊக்கப்படுத்தினான். அவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருந்தாள் .சௌமியா ரஞ்சித் அங்கு நல்ல முறை படித்து வருவதாக சொன்னாள் இவளை விசாரித்ததாகவும் சொன்னாள். . இதைக் கேட்ட ஹரிதா மகிழ்ச்சி அடைந்தாள்.மேலும் சில மாணவர்கள் இளங்கோவிடம் விளையாட்டு பயிற்சி பெற்றனர். அவருக்கு அந்த ஸ்கூலில் நல்ல பெயர் கிடைத்தது. வெளியூர் போய் விளையாட ஹரிதாவுக்கும் , ஆறுமுகத்துக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் ஹரிதா அப்பா தயங்கினார். இளங்கோ அவருக்கு தைரியம் சொல்லி அழைத்துப்போனார்.

அவளுக்கு லேசான பயம் இருந்தது. ஆனால் என்னவோ தன் மனதை திடப்படுத்திக்கொண்டு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டாள். அவள் மனம் தன்னம்பிக்கை நிறைந்ததாக மாறிக் கொண்டு வந்தது. ஆறுமுகம் மனதார இளங்கோவிற்கு நன்றி தெரிவித்தான். பரிசுகளை அள்ளிக்குவிக்கவில்லை என்றாலும் நன்றாக விளையாண்டார்கள் என்ற பெயர் ஹரிதாவுக்கும் , ஆறுமுகத்துக்கும் கிடைத்தது. நாட்கள் இனிமையாக நகர்ந்தது.பொங்கல் விடுமுறைக்கு சௌமியாவையும், ஹரிதாவையும் தன்னுடைய ஊருக்கு அழைத்திருந்தான் . சௌமியா மறுப்பேதும் சொல்லவில்லை. பொங்கல் சிறப்பாக கொண்டாடினார்கள். அவள் அப்பா , அம்மா இல்லாமல் போகும் பயணம் என்பதால் தயக்கம் இருந்தது. ஆறுமுகத்தை முழுமையாக நம்பினாள் ஹரிதா. சௌமியா அவனுடன் வித்தியாசம் இல்லாமல் பழகியது ஆறுமுகத்துக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஒரு முறை சமர் ஃபோன் செய்ததாக சௌமியா சொன்னாள்.அதை பற்றி அதிகம் ஹரிதா கேட்டுக்கொள்ளவில்லை.

பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பினார்கள் சௌமியாவும்,ஹரிதாவும். ஆறுமுகம் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்ததாக சௌமியா சொன்னாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா கிண்டல் பண்ணாதீர்கள் என்றான். நிஜமாகவே நீ என்னை காதலிக்கிறாயா என்றாள் சௌமியா.அவன் எதற்கு இப்போது அதைப்பற்றி கேட்கிறாய் என்றான். என்ன நினைக்கிறாய் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தது அதுதான் கேட்டேன். ஹரிதா வருவதை பார்த்ததும் இருவரும் அமைதி ஆகினர். என்ன லவ் வேவ்ஸா என்றாள்.அதெல்லாம் இல்லை சும்மா அவனிடம் விசாரித்துக்கொண்டிருந்தேன் என்றாள் சௌமியா.அடுத்த விளையாட்டு ட்ரிப் எங்கே என்று கேட்டாள் சௌமியா. அதை இளங்கோ சார்தான் சொல்ல வேண்டும் என்றாள். அவர் நன்றாக பார்த்துககொள்கிறாரா? அதெல்லாம் குறை சொல்ல முடியாது. அவர் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்றாள் ஹரிதா. சௌமியா , ஆறுமுகம் இருவரும் ஹரிதா இப்படி சொல்வது கேட்டு நிம்மதி அடைந்தனர்.

மேலும் மேலும் முன்னேற துடித்தாள் ஹரிதா. படிப்பிலும் அவள் கவனம் இருந்தது. அவள் அம்மா, அப்பா அவளை கவனமாக இருக்கும்படி சொல்லி வந்தனர்.ஹரிதாவை விளையாட வெளியூர் அனுப்புவதில் அவர்களுக்கு யோசனை இருந்தாலும் இளங்கோவின் மேலும் அவர் நடந்து கொண்ட விதத்திலும்,பேச்சிலும் நம்பிக்கை இருந்தது.ஒரு சில ஊர்களுக்கு ஹரிதாவின் அப்பாவும் சென்று அவள் விளையாடுவதை பார்த்து ஊக்கப்படுத்தினார்.அன்று ஞாயிற்று கிழமை ஹரிதா ரெஸ்ட் எடுக்கட்டும் என அப்பா சொன்னார். அவளும் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தாள். ஆறுமுகம் ஃபோன் பண்ணியிருந்தான். அவனிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அவளுக்கு சமர் நினைவு வராமல் இல்லை. ஆனால் அப்படியே அந்த நட்பு நீடித்தாலும் எவ்வளவு தூரம் போகுமென்று உத்தரவாதம் இல்லை என்று தோன்றியது. அப்போது பிருந்தா டீச்சர் வந்திருந்தார்கள். பிருந்தா டீச்சருக்கு கல்யாணம். சமர் கீழேயே நின்று கொண்டிருந்தான். அவசியம் கல்யாணத்துக்கு வந்து விடும்படி டீச்சர் சொன்னாள் . இவள் எப்படியும் சமரை சந்தித்துத்தான் ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாக உணர்ந்தாள். அவன் பிருந்தா டீச்சரை டூ வீலரில் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.