கனவு 11
பிருந்தா டீச்சர் கல்யாணத்துக்கு போகலாமா வேண்டாமா என யோசித்தாள் ஹரிதா. சமரை சந்திக்க வேண்டி வருமே எனவும் சிந்தித்தாள். அதுதான் அவன் கூட ஒன்றுமில்லை என்றாயிற்றே பிறகென்ன என கல்யாணத்துக்கு போவதென தீர்மானித்தாள். கல்யாணம் ஒரு விடுமுறை தினத்தில்தான் வைத்திருந்தார்கள். இவளுக்கு துணை யாரும் இல்லை.அவளேதான் அவளுக்கு துணையாக இருக்க வேண்டும். ஆறுமுகத்துக்கும்,சௌமியாவுக்கும் பிருந்தா டீச்சர் அவ்வளவு பழக்கமில்லை. சௌமியா விசாரித்தாள் சமர் கல்யாணத்துக்கு வருகிறானா என்றாள். அவன் வராமல் எங்கு போய்விடுவான். ம் அப்போ ஏதோ ஒன்று நடக்க போகிறது . அதெல்லாம் ஒன்றும் என்னிடம் நடக்காது என்றாள் ஹரிதா.கல்யாண தினத்தன்று சிம்பிள் ஆக அலங்கரித்து கொண்டிருந்தாள். அவள் ஆட்டோவில் போய் மண்டபத்து வாசலில் இறங்கினாள் . சில பெண்கள் அவளை வரவேற்றனர். சமர் எங்கிருக்கிறான் என அவள் கண்கள் தேடின. அவன் அவள் கண்ணில் படவேயில்லை . கூல் டிரிங்க்ஸ் கொடுத்தார்கள். பிருந்தா டீச்சர் மணப்பெண் அறையில் இருந்து இன்னும் வரவில்லை. இவள் அங்கு போய் பார்க்கலாம் என நினைத்தாள் .
டீச்சர் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாள். அதிக துணை தோழிகள் இல்லாத போதும் இவளை பார்த்ததும் கையை பிடித்துக்கொண்டாள். எப்படி இருக்கிறாய் ஹரிதா . நீ என்னவோ சமர் கூட சண்டை போட்டாயாமே சமர் சொன்னான் . இவள் அதெல்லாம் இப்போ எதற்கு டீச்சர் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றாள். நிஜமாவா ? நிஜம்தான் இனி நீங்கள் புதிய வாழ்க்கையை தொடங்க போகிறீர்கள் அதற்கு என் வாழ்ததுக்கள் என்றாள் ஹரிதா. ஹரிதா நீ டிபன் சாப்பிட்டாயா ? இரு என்று சொல்லிவிட்டு அங்கிருந்த பெண்மணி ஒருவரை அழைத்து ஹரிதாவை சாப்பிட அழைத்து போக சொன்னாள். சமர் அங்கேதான் பரிமாறி கொண்டிருந்தான். இவளுக்கு அவன் உணவு பரிமாறாத போதும் அவன் கண்களும் இவள் கண்களும் ஒருமுறை சந்தித்து கொண்டன. அந்த பெண்மணி இவள் அருகிலேயே நின்று இவளை கவனித்து கொண்டாள். போதும் போதும் என்று சொன்ன போதும் விடவில்லை. ஒரு வழியாய் அங்கிருந்து கிளம்பி எல்லோரும் உட்காரந்திருக்கும் ஹாலுக்கு வந்தாள். அவள் அதிகாலையிலே எழுந்து விட்ட படியால் தூக்கம் சொக்கியது. போய் ஒரு காபி குடித்துவிட்டு வந்தாள். ஆறுமுகத்தையாவது கூட்டி வந்திருக்கலாம் என்ற யோசனை வந்தது.
மாப்பிள்ளை வந்து மணவறையில் அமர்ந்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தாள். மந்திரங்கள் முழங்க துவங்கினார் புரோகிதர்.நாதஸ்வரமும், மேளமும் வாசிக்க தொடங்கினர். எல்லோருடைய கவனமும் மணவறை மீதுதான் இருந்தது. இவளிடத்தில் ஃபோன் இல்லாதது பெரிய குறையாக தெரிந்தது. மணமக்களை போட்டோ எடுக்கலாம் என நினைத்து பிறகு அந்த எண்ணத்தை கைவிட்டாள். பிருந்தா டீச்சர் பாவம் எவ்வளவு சங்கடங்களுக்கு பிறகு இந்த திருமணம் நடக்கிறது. வதந்தியால் டீச்சருடைய திருமணம் எவ்வளவு தள்ளிப்போய்விட்டது . அப்போது சிந்து யோகா டீச்சர் வந்திருந்ததை பார்த்தாள். இவள் கையசைத்தாள் . அவள் கவனித்தாலோ இல்லையோ என நினைப்பதற்குள் இவள் அருகில் உள்ள சேர் ஒன்றில் வந்தமர்ந்தாள் சிந்து. என்ன ஒரே கல்யாண சிந்தனையா என்றாள். அதெல்லாம் இல்லை சார் வரவில்லையா? அவருக்கு சூப்பர்மார்க்கெட் விட்டு வர மனம் வரவில்லை என்றாள். அப்புறம் உன் பாய்ஃபிரண்ட் எப்படி இருக்கிறான். இவள் நடந்ததை சொன்னாள். ஓ ரொம்ப சாரி. இதையெல்லாம் நீ பெரிதுபடுத்தாதே நமக்கு ஆயிரம் வேலை இருக்கிறது என்றாள். சரி நான் போய் பிருந்தாவை பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு போனாள்.
சிந்துதான் எவ்வளவு தன்னம்பிக்கையாக இருக்கிறார். குழந்தை இல்லாத கவலையை மறைத்துக்கொண்டு எப்படியோ சமாளிக்கிறார் என எண்ணினாள் ஹரிதா. வேறு யாரும் தெரிந்த முகங்கள் இல்லை.இவள் வயதொத்தவர்கள் சிலர் அங்கேயும் இங்கேயுமாய் டான்ஸ் ஆடி கொண்டிருந்தனர். நாதஸ்வரகாரர்களும் அவர்களுக்கு இணையாக இசைத்துக்கொண்டிருந்தனர். சிந்து டிபன் சாப்பிட்டுவிட்டு வந்தாள். என்ன மேடம் அங்கே ஒரு பெண்மணி இருந்திருப்பார்களே என்றாள். ம் என்னையும் நன்றாக கவனித்தார்கள் என்றாள் சிந்து. பிருந்தா டீச்சர் மணவறைக்கு வந்தார். இருவர் ஜோடிப்பொருத்தம் பரவாயில்லை என்று சிந்து சொன்னாள். ஆனால் இவள் மனதில் சமர் பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது. இவள் சிறுபெண்ணாக இருந்த போதும் தனக்கும் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சிந்தனை இருந்தது. என்ன தூக்கமா என்றாள் சிந்து. ம் காலையில் கொஞ்சம் நேரமாக எழுந்துவிட்டேன் என்றாள் ஹரிதா. உன்னிடம் இதை சொல்லலாமா என தெரியவில்லை .. என்ன மேடம் ஏதாவது பிரச்சனையா? அதற்குள் மங்கள மேளங்கள் முழங்க, புரோகிதர் மந்திரம் ஓத பிருந்தா கழுத்தில் தாலி கட்டினார் மாப்பிள்ளை. இவள் அட்சதை தூவியது சற்று தள்ளியே விழுந்தது.
எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். என்னவோ இவர்களே கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறமாதிரி அப்படி ஒரு டென்ஷன்.சிந்து நான் கூடிய சீக்கிரம் இந்த ஊரை விட்டு போய்விடுவேன் என்றாள். என்னாச்சு மேடம் ஏன் அப்படி சொல்கிறீர்கள். எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆக போகிறது என்றாள் சிந்து. அவசரப்படாதீர்கள் மேடம். அதெல்லாம் ஒன்றுமில்லை. சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது என்றாள். அது என்னவோ உண்மைதான் என்றாள் ஹரிதா. சார் விவாகரத்துக்கு ஒத்துக்கொண்டாரா ? அவருக்கு இதில் இஷ்டமில்லை. ஆனாலும் அந்த நரகத்தில் இருக்க நான் தயாரில்லை என்றாள் .இன்பமோ துன்பமோ இருவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.இங்கே இன்பம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எனக்கு கெட்ட பெயர்தான் மிச்சம் என்று சொன்னாள். இவள் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள். ஹரிதா எப்போதுமே உன் மனதிலும், உடலிலும் கவனம் தேவை என்றாள். சரி மேடம் என்றாள். இருவரும் சேர்ந்து மேடையேறி மணமக்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இவள் கிப்ட் ஒன்றை கொடுத்தாள். சிந்து பண கவர் ஒன்றை கொடுத்தாள்.சிந்து விடை பெற்றுக்கொண்டாள்.
இவளை மதியம் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என பிருந்தா சொல்லிவிட்டாள். நாதஸ்வரகாரர்கள், மேளக்காரர்கள் கிளம்பிவிட்டார்கள். டிஜே மியூசிக் போட்டு பட்டையை கிளப்பினார்கள். இவளுக்கும் ஆட வேண்டும் போல இருந்தது. அங்கே சிறுவர் சிறுமியர் ஆடிக்கொண்டிருந்தனர். சமர் வந்து மியூசிக்
டிஜேவிடம் பேசிக்கொண்டிருந்தான். அடுத்த கொஞ்ச நேரத்தில் ஒரு சில காலேஜ் பெண்களும் நடனமாட ஆரம்பித்தனர். சமர் அவர்களுடன் கலந்து கொண்டான். உற்சாகம் கொப்பளித்தது. இவளுக்கு பொறுமை போய்க் கொண்டிருந்தது. நாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் ஒரு டான்ஸ் இல்லை, பாட்டு இல்லை , கூட ஆட ஜோடி இல்லை என்று நினைத்தாள்.கூட்டம் சாப்பிட்டுவிட்டு களைய தொடங்கியது. பிருந்தா இவளை மேடையில் இருந்து கூப்பிட்டாள். இவள் போய் அவள் அருகில் நின்று கொண்டாள். என்னடி மாப்பிள்ளை ஓகே வா நீ ஒண்ணுமே சொல்லலியே என்றாள் பிருந்தா. இவள் சிரித்தாள். என்ன சொல்லுறாங்க டீச்சர் என்னை கிண்டல் பண்ணுகிறார்களா என்றார் மாப்பிள்ளை.அதெல்லாம் ஒண்ணுமில்லை இவருவரின் பொருத்தமும் நன்றாக இருக்கிறது என்றாள் ஹரிதா.
சிறிது நேரத்தில் பிருந்தாவும், மாப்பிள்ளையும் கீழே சமருடன் ஆட தொடங்கினர். அது நன்றாக இருந்தது. மாப்பிள்ளை சற்று கலர் கம்மி என்ன சிலர் சொல்ல கேட்டிருந்தாள் ஹரிதா. அப்படியே இருந்தால்தான் என்ன . அதனால் என்ன அவர் நல்லதொரு ஆணாய் இருந்தால் போதாதா என நினைத்தாள் ஹரிதா. சிந்துவின் நிலமை யாருக்கும் வரக்கூடாது. பிருந்தா, மாப்பிள்ளை , ஹரிதா மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர். அப்போது பிருந்தாவுக்கு மாப்பிளை ஊட்டிவிட்டார். பிருந்தாவும் பதிலுக்கு ஊட்டி விட்டாள். இவள் சில சடங்குகளுக்கு உடன் இருந்தாள். அடுத்து என்ன ஃபர்ஸ்ட் நைட் தான் என யாரோ சொல்ல இவளை வெட்கம் பிடுங்கி தின்றது. இதைப் பற்றி இப்போது சொல்லவேண்டிய அவசியம் என்ன. அது ஒரு அந்தரங்கம் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்தாள். பிருந்தாவிடம் விடை பெற்றுக்கொண்டாள். மாப்பிள்ளை ரொம்ப நன்றி வந்ததற்கு என்றார். நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டாள்.
வீட்டுக்கு மதியம் 3 மணி போல வந்தாள் வந்தவள் டையர்டு ஆகி அப்படியே தூங்கவும் செய்தாள். இது என்ன ஃபர்ஸ்ட் நைட் அப்படி ஒன்று கட்டாயம் இருக்குமா? நிதானமாக இருந்தால்தான் என்ன என அவள் முன்பே யோசித்திருந்தாள் . பால் சொம்பு ,பழம்,ஸ்வீட் என கொண்டுபோனால் தான் ஃபர்ஸ்ட் நைட்டா? இப்படியாக அவளது சிந்தனை கனவிலும் நீண்டது. மறுநாள் பள்ளிக்கு போகும் முன் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள் . எப்படியெல்லாம் டீச்சரை அலங்காரம் பண்ணியிருந்தார்கள் என எண்ணினாள். இவள் ஸ்கூல் போனதும் சௌமியாவிடம் பேச துடித்தாள் . ஆனால் இவள் லேட் ஆக போனதால் பெல் அடித்துவிட்டது. கல்யாணம் என்றால் அப்படித்தான் சில சங்கடங்கள் இருக்கும் என்று சௌமியா சொன்னாள். ஆனால் அதெல்லாம் போக போக பழகிவிடும் மேலும் அடுத்தவர் சந்தோசத்துக்காக சிலவற்றை செய்ய நேரிடலாம் என்றும் சொன்னாள். ஓ அது என்ன அதெல்லாம் நீ இப்போது தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறாய். நீ என்னை விட புத்திசாலி அதெல்லாம் சொல்லாமலே புரியும் என்றாள். ஆறுமுகம் நீ என்ன நினைக்கிறாய் கல்யாணத்தை பற்றி . எனக்கெல்லாம் அப்படி ஒன்று நடக்குமா என்பதே சந்தேகம்தான் என்றான்.
பிருந்தா கல்யாண நிகழ்வு அவளை மிகவும் யோசிக்க வைத்திருந்தது.முன்பின் தெரியாத ஒருவருடன் நாம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியுமா? இதே கேள்வியை அவள் மனம் பல முறை கேட்டது. அவ்வாறு செய்ய முடியுமென்றால் நம் மனசாட்சி கேள்வி கேட்காதா ? ம் எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று எல்லோருமே நம்புகிறார்கள். ஒரு வாரம் கழித்து பிருந்தா ஃபோன் பண்ணியிருந்தாள். எப்படி இருக்கிறீர்கள் டீச்சர். நான் உன்னை நினைத்துத்தான் கவலையாய் இருந்தேன். சமர் என்னிடம் எல்லாம் சொன்னான். போகட்டும் அவன் இன்னும் சின்ன பிள்ளையாகவே இருக்கிறான் என்றாள். நாங்கள் ஹனிமூன் வந்திருக்கிறோம் மூணாறு என்றாள். என்னவோ உன் நினைப்பு வந்தது ஃபோன் பண்னினேன் என்று சொன்னாள். சரி டீச்சர் சந்தோஷமாய் இருங்கள் என்றாள். அவள் ஃபோன் வைத்து விட்டாள். இந்த சமர் விவகாரம் தன்னை விட அடுத்தவர்களை பாதித்து இருக்கிறது. சமர் நீ மட்டும் சற்று பொறுமையாக இருந்திருந்தால் இந்த கல்யாணத்திலே நாமும் ஒன்றாய் டான்ஸ் ஆடியிருக்கலாம். உனக்கு என் மேலே அவ்வளவு காதலா ? இல்லை வெறும் ஈடுபாடா .. ஹரிதாவுக்கு தூக்கம் வரவில்லை. ஹெட் செட்டில் பாட்டு கேட்கலாம் என முடிவெடுத்தாள்.