harithavin pagal kanavukal in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஹரிதாவின் பகல் கனவுகள் part 27

Featured Books
Categories
Share

ஹரிதாவின் பகல் கனவுகள் part 27


கனவு 27
அன்று மழை வரும்என்று ஹரிதா எதிரபார்த்திருக்கவில்லை. குடையும் எடுத்துப் போயிருக்கவில்லை. ஹரிதா நல்ல வேளையாக அருகில் இருந்த காம்ப்ளக்ஸ் உள்ளே போனாள். மழை விட்டபாடில்லை.. சோவென பெய்து தீர்த்துக் கொண்டிருந்தது. அவள் மழையை விரும்பாதவள் இல்லை எனினும் இப்போது இந்த மழை அவசியமா என கேள்வி எழுப்பிக்கொண்டாள் . மழை முழுவதும் பெய்து ஓய்ந்த போது முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. அவள் கடைத்தெருவுக்கு சில சாமான்கள் வாங்க வந்தாள். அப்போது தான் மழையில் மாட்டிக்கொண்டாள் . எப்படியோ மழையில் லேசாக நனைந்து வீடு போய் சேர்ந்தாள்.வெயில் பருவம் மாறி குளிர்ச்சியான சூழ்நிலை வந்தது போல தோன்றியது. இந்த மழை எல்லாம் போதாது என சிலர் பேசிக்கொண்டு சென்றனர். எல்லோரையும் போல மழை வந்தால் கொண்டாட்டமென இருந்தவள்தான் ஹரிதாவும்.என்னவோ இப்போதெல்லாம் அது வெறும் சிறுவயது கனவு போலத் தோன்றியது. அம்மா சுட சுட டீ கொண்டுவந்து கொடுத்தாள். இவள் உடை மாற்றிவிட்டு டீயை குடித்தாள். இன்று சௌமியாவை பார்க்க போகலாம் என நினைத்திருந்தாள் அதை கேன்ஸல் செய்ய வேண்டி வரும்.

சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். நான் நல்லா மழையில் நனைந்து விட்டேன்டி என்றாள். நீ குடை எடுத்து போகவில்லையா அம்மா அப்பவே சொன்னார்கள் நான்தான் அவசரமாக வெளியே போயிருந்தேன் . ம் நல்லா தலையை துவட்டு என்று சௌமியா அம்மா சொல்வது காதில் கேட்டது . அப்புறம் இந்த மழையில் எங்கேயும் போக வேண்டாம் என அம்மா சொல்லிவிட்டார்கள் என ஹரிதா சொன்னாள். இங்கேயும் அதே புலம்பல் தான் . கொஞ்ச நேரம் பேசிகிக்கொண்டு இருந்து விட்டு போனை வைத்தாள். டிவி போட்டு நியூஸ் பார்த்தாள் . மழை இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று வானிலை அறிக்கை சொன்னார்கள். மழை லேசாய் தூறத்துவங்கியது . ஹரிதா மாடியில் நின்றபடி உற்சாகமாக வெளியே வேடிக்கை பார்த்தாள். ஹரிதா அவள் அம்மாவுக்கு உதவி செய்ய முடிவெடுத்தாள். காய் கறி நறுக்கி கொடுத்தாள். டிவியில் பாட்டு சத்தம் கேட்டது . இந்த நாள் இனிய நாள்தான் என ஹரிதா சொன்னாள். மதியம் சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு வந்தாள். புத்தகங்கள், மேலும் புத்தகங்கள் அவளுக்கு தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டு வந்தது.

மழை லேசாக விட்ட மாதிரி இருந்தது. மேகங்கள் விலகி சூரியன் லேசாக எட்டிப்பார்த்தது. அன்று நல்ல முகூர்த்த நாள் என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அப்போதுதான் இளங்கோ சாரிடம் இருந்து ஃபோன் வந்தது. இவள் எடுத்து பேசினாள். ஹரிதா நான் கல்யாணம் அட்டென்ட் பண்ணிவிட்டேன் இங்கே ஹேப்பி ரெஸ்டாரன்ட்டில் இருக்கிறேன் வருகிறாயா மீட் பண்ண முடியுமா என்றார். நான் ஒரு அரை மணி நேரத்தில் வருகிறேன் என்றாள். குடையை மறக்காமல் எடுத்துக்கொண்டாள். என்ன பேசப்போகிறோம் என்றெல்லாம் அவள் ஒத்திகை பார்க்கவில்லை. ஒரு சாதாரண சந்திப்புதானே என்று நினைத்தாள். அவர் சற்றே ஆள் தடித்து போயிருந்தார். என்ன சார் குண்டாயிட்டே போறீங்க என்றாள் ஹரிதா. அதெல்லாம் எல்லோரும் சொல்லுறது தான். நீ என்ன சாப்பிடுகிறாய் என்றார் . காப்பியே போதும் .. சரி இப்போது படிப்பெல்லாம் எந்த அளவில் இருக்கிறது ? நான் முன்னைக்கு பரவாயில்லை சௌமியாதான் ஹெல்ப் பண்ணுகிறாள் என்று சொன்னாள்.

ஒரு அரைமணி நேரம் போல பேசியிருப்பார்கள். மழை மறுபடி வேகமாக பெய்ய துவங்கியது. இவள் இந்த மழையை நம்பவே முடியாது எப்போது பெய்யும் என்று ஊகிக்கவே முடியவில்லை என்றாள். அதெல்லாம் இயற்கை . நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்றார். இவள் நான் கிளம்புகிறேன் சார் என்றாள். சரி பார்த்து ஜாக்கிரதை . நான் ஆறுமுகத்தை அடுத்த வாரம் போய் பார்க்கலாம் என்று இருக்கிறேன் என்றார். அவனை விசாரித்ததாக சொல்லவும் என்றாள். அவள் வீடு வந்து சேர்ந்த போது குடை எந்த வித ஹெல்ப்பும் பண்ணாமல் போய் மொத்தமாக நனைந்து விட்டாள். மழை அடர்த்தியாய் பெய்தது கொண்டிருந்தது. சில சமயம் மூர்க்கமாய் கொட்டி தீர்ப்பதாகவும் ஹரிதாவுக்கு தோன்றியது. வீட்டில் அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தான் இளங்கோவை பார்க்க போனாள். ஆனால் அம்மா அப்பா வந்ததும் விஷயத்தை சொன்னாள். அப்போது அவள் குரல் வேறு மாதிரி இருந்தது. இனிமேல் அந்த ஆளை பார்க்க போக வேண்டாம் என்றார் அப்பா. நீ பெரிய பெண் யாராவது மறுபடி அது போல வதந்தி கிளப்பினால் நம்மால் சமாளிக்க முடியாது என்றார்.
அவர் சொல்வதிலும் நியாயம் இருந்தது. யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று யாருக்கு தெரியும்.

ஆறுமுகத்துக்கு ஃபோன் பண்ணலாம் என நினைக்கும்போதே அம்மா அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. எல்லாமே ஒரு அளவோடு இருக்க வேண்டும் அதை மீறிப்போனால் அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டும் என அப்பா சொல்லியிருந்தார். ஆறுமுகத்துக்கு ஃபோன் பண்ணும் எண்ணத்தை கை விட்டாள். கீர்த்தி மாலை 7 மணி போல ஃபோன் பண்ணியிருந்தாள். இவள் இளங்கோவை சந்திக்க போனதை பற்றியும் அவள் அப்பா சொன்னதையும் கீர்த்தியிடம் சொன்னாள். ம் இது வேறா நீ அப்படி போனதில் தப்பில்லை. ஆண்கள் மனது வேறு . பெண்கள் மனது வேறு. இந்த வித்தியாசம் எல்லோருக்கும் புரிவதில்லை . அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்றாள் ஹரிதா. நீ நல்ல நோக்கத்தில்தான் பார்க்க போயிருப்பாய் . ஆனால் உன் வயது அப்படியான நல்ல நோக்கத்தை மறக்கடித்து விடும். எனக்கு புரிகிறது. ஆனால் இளங்கோ சார். தேர்ந்தெடுப்பார்கள் உன்னை மாதிரி ஆளைத்தான் எல்லோருமே தேர்ந்தெடுப்பார்கள். இதைக் கேட்டவள் அதிர்ச்சி அடைந்தாள் . கீர்த்தி எனக்கு சில சமயம் நீ பேசுவதை கேட்கும் போது பயமாக இருக்கிறது. அந்த பயத்தைத்தான் ஆண்கள் அறுவடை செய்வார்கள் என்றாள்.

கீர்த்தி சொல்வது சரிதான். ஒருவரின் உண்மையான நோக்கத்தை கண்டறிவது சிரமம். முகமூடிகளின் காலம் இது என்று யாரோ சொன்னது பிடிபட்டது. தான் ஒன்றும் அப்படிப்பட்டவள் அல்ல என்றாலும் தனக்கும் ஒரு முகமூடி தேவைதான் எனப்பட்டது. சௌமியாவிடம் ஏதும் சொல்லலாமா என யோசித்தாள். அவளிடம் நேரில் சொல்லிக்கொள்ளலாம் என விட்டு விட்டாள். இந்த உடம்பு படுத்தும் பாடு என்றெல்லாம் கதைகள் எழுதுகிறார்களே அவர்களுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெரியுமா தெரியாதா?இனி நம் வழி தனி வழியாய் இருக்க வேண்டும் என சொல்லிக்கொண்டாள். கீர்த்தனா நைட் ஸ்டடி போய் வந்துவிட்டதாக சௌமியா சொன்னாள். என்ன ஆச்சாம் அதெல்லாம் ஒன்றுமில்லை எல்லாம் சின்ன பசங்கள். இவள் எதற்கும் தயாராய்த்தான் போயிருந்தாள். ஆனாலும் அவர்கள் தயங்கியபடியே இருந்து விட்டு ஒன்றும் பேசக்கூட இல்லையாம் என்றாள் சௌமியா. வெறும் பலூன் உடைந்த மாதிரி ஆயிற்று ஹரிதாவுக்கு. சௌமியாவிடம் இளங்கோ விஷயத்தை சொன்னாள். கீர்த்தி சொன்னதுதான் சரி. அத்தோடு விட்டுவிடு. நீ தனியாக போவதெல்லாம் சரியாய் இருக்காது. அவர் ஒழுக்கமானவராய் இருக்கலாம். அது ஒரு தற்காலிக ஏற்பாடே என்றாள்.

ஆறுமுகம் பேசினான். என்ன ஹரிதா ஏன் ஒரு மாதிரி டல் ஆக பேசுகிறாய் என்றான். எனக்கு ஒன்றுமில்லை. மழையில் நனைந்தேன் அல்லவா அதுதான் குரல் ஒரு மாதிரி இருக்கிறது என்றாள். இவள் அதிகம் பேசவில்லை. அவன் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னாள். போனை வைத்து விட்டான். இப்படியாக ஸ்டடி ஹாலிடேஸ் கரைந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு பழையபடி வெயில் தன் வேலையை காட்டியது. சேர்த்து வைத்து வெப்பத்தை தகித்தது. இந்த மாற்றத்தை ஹரிதா உடம்பு உடனடியாக ஏற்கவில்லை. தும்மல் போட்டாள். ஜூரம் வரும் போல இருந்தது. கம்ப்யூட்டர் கிளாஸ் போய் வந்தாள். அங்கே டீச்சர் புது தாலி மின்ன இருப்பதைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். டீச்சர் யாரையோ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிவிட்டார் என்றே தோன்றியது. கேட்டும் விட்டாள். என்ன ஆச்சு டீச்சர் மாப்பிள்ளை யார் என்றாள். அவள் போட்டோவை காட்டினாள். இவளுக்கு அவனுக்கும் ஒரு பொருத்தம் கூட இல்லை. இவள் இருந்தாலும் வாழ்த்துக்கள் டீச்சர் என்றாள். என் மாமா பையன்தான் இது என்றாள். வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை . ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கொண்டோம் என்றாள். இவளுக்கு வருத்தமாய் இருந்தது. வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் இப்படி ஒரு கல்யாணம் என எண்ணினாள்.


ரம்யா டீச்சருக்கு ஏதோ ஒரு கிப்ட் கொடுக்க வேண்டும் என சௌமியாவை அழைத்துக்கொண்டு கடை கடையாய் ஏறி இறங்கினாள் . கடைசியில் ஜோடிப்புறாக்கள் கொண்ட பொம்மையை வாங்கினாள். இது என்னடி எப்போ பார்த்தாலும் புறா அப்படின்னு என்றாள் சௌமியா. அதெல்லாம் எல்லா காலத்திலேயும் உள்ளதுதான் சீப் அண்ட் பெஸ்ட். இருவரும் சிரித்தார்கள். எல்லோரும் கை தட்டி வாழ்த்து சொன்னார்கள் ரம்யா டீச்சருக்கு . அவள் கண் கலங்கினாள். ஹரிதா சமாதானப்படுத்தினாள். இதெல்லாம் சரியாய் போய் விடும் என்றும் சொன்னாள். ஹரிதா வீட்டுக்கு வந்த பிறகும் ரம்யா டீச்சர் நினைவாகவே இருந்தது. என்னதான் இருந்தாலும் அவள் அம்மா ,அப்பா நினைவு இல்லாமலா போய்விடும். ஹரிதா தான் காதலிக்க வேண்டும் என்ற ஆசையை துறந்தாள். அது என்னவோரு கஷ்டம். இஷ்டப்பட்டு ஒருவனை அடைய எல்லாவற்றையும் இழக்க வேண்டுமா? அதுவும் ரம்யா டீச்சர் புருஷம் மூஞ்சியும் ஆளும் எப்படித்தான் இவர்களுக்குள் லவ் வருகிறதோ எதை காட்டி மயக்குவார்களோ ஓ அப்படி இருக்குமோ சே சே அதெல்லாம் இருக்காது சிரித்துக் கொண்டாள்.

சௌமியா நீ ரம்யா டீச்சர் ஹஸ்பண்ட் போட்டோ பார்த்தாயா என்றாள் ஹரிதா. உனக்கு வேறு வேலையில்லை. அவனை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் அவன் சிறுவயது முதலே டீச்சருக்கு பழக்கம் என்றாள். எனக்கு பிடிக்கவில்லை என்றாள் ஹரிதா. சௌமியா உனக்கு பொறாமை என்றாள். ம் பொறாமை ஆமாம் காதல் எவ்வளவு புனிதமானது என்றாள் சௌமியா கிண்டலாக. ஹரிதா அந்த டாபிக் விட்டு வெளியே வர முயற்சித்தாள். அவளுக்கு நிறைய வேலை இருந்தது. அவள் அம்மாவிடவும் இருவர் போட்டோவை காண்பித்தாள் . என்னடி இது இந்த டீச்சர் ஏன் இப்படி பண்ணினாங்க என்றாள். அவங்களுக்கு பிடிச்சிருக்கு போல அதுதான் என்றாள் ஹரிதா. ம் கலிகாலம் . நீயும் இப்படி ஏதும் பண்ணிவிடாதே என்றாள் ஹரிதா அம்மா. உனக்கு லட்சணமாய் மாப்பிள்ளை பார்க்கிறேன் என்றாள். இவள் புன்னகைத்தாள். தனக்கு வறப்போகிறவன் எப்படி இருக்க போகிறானோ அவன் காலில் எல்லாம் விழ வேண்டுமா என யோசித்தாள். இந்த காலில் விழும் விஷயமெல்லாம் வேண்டாம் என சொல்லிவிட வேண்டும் என நினைத்தாள். அப்புறம் என்ன கண்டிஷன் போடலாம் எனவும் சிந்தித்தாள் . நமக்கானவன் என்று ஒருவன் இருப்பானா அவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும்? இதைப் பற்றி இப்போது என்ன அவசரம் என அவள் உள்மனது சொன்னது.