harithavin pagal kanavukal in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஹரிதாவின் பகல் கனவுகள் part 30

Featured Books
Categories
Share

ஹரிதாவின் பகல் கனவுகள் part 30


கனவு 30

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹரிதா போர் செட்டில் கும்மாளம் போட்டாள். தாமரை சற்றே தயக்கத்துடன்தான் அவளுடன் இருந்தாள். ஒரு வழியாக இருவரும் குளியலை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். போர் செட் குளியல் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது ஹரிதாவுக்கு.
இப்போதைக்கு இந்த விடுமுறை எப்படி போகுமோ என்றிருந்த ஹரிதாவுக்கு இந்த முறை நல்ல விஷயங்களால் நிரம்பியிருந்தது. அவள் தாமரையுடன் எடுத்த போட்டோக்களை சௌமியாவுக்கும், கீர்த்திக்கும் அனுப்பியிருந்தாள். ஆறுமுகம் வரும் போது அவனுக்கு அந்த போட்டோக்களை காண்பிக்கலாம் என எண்ணியிருந்தாள் .ஹரிதா தாமரையிடம் நான் திலீபன், மஞ்சுவை பார்க்க வேண்டுமே என்றாள். தாமரை பயந்துவிட்டாள். அதெல்லாம் வம்பு தேவையில்லாத வேலை என்றாள். சும்மா சொல்லுடி இங்கே டவுனில் இருப்பதாக சொன்னாயே அவன் ஃபோன் நம்பர் கிடைக்குமா என்றாள். அதெல்லாம் வேண்டாம்டி தாத்தாவுக்கு தெரிஞ்சால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்றாள் தாமரை. இவள் முகம் வாடிவிட்டது. சரி சரி மூஞ்சை தூக்கி வைத்துக்கொள்ளாதே எனக்கு இரண்டு நாள் டைம் குடு நான் திலீபன் ஃபோன் நம்பர் வாங்கித் தருகிறேன் என்றாள்.

சொன்னபடி அவள் இரண்டு நாட்களில் திலீபன் போன் நம்பர் வாங்கி தந்துவிட்டாள். ஹரிதா ரொம்ப ஜாக்கிரதை . அங்கு போய் ரொம்ப நேரம் இருக்காதே என்றாள் தாமரை. போனமா வந்தமா என்று இருந்து வீடு வீணாக வம்பை விலைக்கு வாங்காதே என்றும் சொன்னாள். 10 கி மீ தொலைவில் இருந்தது அந்த டவுன். திலீபனுக்கு ஃபோன் செய்த போது எடுக்கவில்லை ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. சரி டவுனுக்கு போய் ஃபோன் பண்ணிக்கொள்ளலாம் என விட்டுவிட்டாள். அவளுக்கு என்னவோ ஒரு ஆர்வம் அல்லது ஆர்வக்கோளாறு. எப்படியோ லைப்ரரி போவதாய் பொய் சொல்லிவிட்டு அந்த டவுனுக்கு போய் சேர்ந்தாள். இங்கே ஓரளவு நல்ல வசதிகள் இருப்பதாய் பட்டது. மணி 11 ஆகியிருந்தது. மறுபடியும் ஃபோன் போட்ட போது ஃபோன் எடுத்தது மஞ்சு. அவள் குரலை கேட்டதும் ஹரிதா மகிழ்ச்சி அடைந்தாள். இவள் ஹரிதா பேசுகிறேன் என்றாள். அவள் சில நொடி மௌனம் காத்தாள் . நான் கிராமத்துக்கு வந்திருக்கிறேன் உன்னை பார்க்கவேண்டுமே என்றாள். அதெல்லாம் வேண்டாம் என்றாள் மஞ்சு. நான் இங்கே டவுன் வரை வந்துவிட்டேன் என்றாள். சரி அட்ரஸ் சொல்லுகிறேன். அந்த தெருமுனைக்கு உள்ள கோவில் பக்கத்தில் வந்து நில்லு திலீபனை அனுப்புகிறேன் என்றாள்.

ஹரிதா போய் அரைமணி நேரத்தில் திலீபன் நடந்து வந்தான். என்ன ஹரிதா ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாய் என்றான். என்னவோ உங்கள் இருவரையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அது ஒரு தப்பா எனக் கேட்டாள். அவன் அவளை வீட்டுக்கு அழைத்து சென்றான். குழந்தை தூங்கி கொண்டிருந்தது. பேரென்ன என்றாள் பெண் குழந்தை பிரீத்தி என்றாள் மஞ்சு. இவள் வாங்கி வந்திருந்த பிஸ்கட் பழங்களை கொடுத்தாள். இவளுக்கு டீ போட்டு கொடுத்தாள் மஞ்சு. நாங்கள் எங்கெல்லாமோ ஓடினோம். கடைசியில் இவருடைய ஃப்ரெண்ட் ஒருவர் உதவியால் இங்கேயே செட்டில் ஆகிவிட்டோம் என்றாள் மஞ்சு. சரி ரொம்ப நேரம் இங்கே இருக்க வேண்டாம் கிளம்பு ஹரிதா அது உனக்குத்தான் தேவையில்லாத தொந்தரவுகளை தரும் என்றான் திலீபன். அவள் மனசே இல்லாமல் விடை பெற்றுக்கொண்டாள். இந்த சந்திப்பு அவளுக்கு மகிழ்ச்சியையும் , வருத்தத்தையும் சேர்ந்தே தந்தது. தான் மெனக்கெட்டு ரொம்ப தூரத்தில் இருந்து வந்த போதும் கொஞ்ச நேரம் அவர்களோடு பேச முடியவில்லையே என நினைத்தாள்.

அங்கேயே அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டாள் . ஒரு வழியாய் இரண்டு மணி போல வீட்டுக்கு வந்தாள். சாயங்காலம் தாமரையை பார்க்கவேண்டும் என எண்ணியிருந்தாள். இவள் பேருக்கு மதிய சாப்பாடு சாப்பிட்டாள். மாடி அறைக்கு போனாள். ஏதேதோ நினைவுகள் சுழன்று அடித்தன. இவள் திலீபனின் ஒரு கை நிலையை நினைத்து வருந்தினாள். அவர்கள் இப்போது ஒரு குடும்பமாக இருக்கிறார்கள் அந்த வகையில் நிம்மதி அடைந்தாள். சௌமியாவிடம் பேசும் போது இதை பற்றி சொன்னாள். அவள் அதெல்லாம் கிராமத்து கலாச்சாரம் நமக்கு எப்படி புரியும் என்றாள். நீ சொல்வதும் சரிதான். தீபன், மஞ்சுவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை மொபைலில் பார்த்தாள். அவள் தூங்க விரும்பினாள். கண்களை மூடிக்கொண்டாள். அங்கே கரண்ட் கட் ஆவது குறைச்சல் என்று யாரோ சொல்லியிருந்தார்கள்.மின்விசிறி இதமான வேகத்தில் இயங்கி கொண்டிருந்தது. யாரோ தன் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி காட்டுவது போல கனவு வந்தது திடுக்கிட்டு விழித்தாள்.அருகில் இருந்த தண்ணீர் பாட்டில் இருந்து தண்ணீரை குடித்தாள். தாலி இது பற்றிய அவளது சிந்தனை நீண்டது.

அம்மா அருகே சென்று அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியை தொட்டு பார்த்தாள். என்னடி இது என்றாள். ம் என்னவோ எனக்கு உன் தாலியை பார்க்க வேண்டுமென்று தோன்றியது என்றாள். எல்லா பெண்களுக்கும் கட்டாயம் உண்டு என்றாள் ஹரிதா அம்மா. இது அவளுடைய மன உறுதியா இல்லை இதுதான் தலையெழுத்து என்று சொல்கிறாளா என புரியவில்லை. இவள் தாமரையை பார்த்து நன்றி சொன்னாள்.அந்த பிரச்சனையை இத்தோடு விட்டு விடு மறுபடி நாம் இதை பற்றி பேச வேண்டாம் என திலீபன், மஞ்சு விவகாரத்தை குறித்து சொன்னாள் தாமரை . என்னடி நீ ரொம்ப அலுத்துக்குற இப்போ என்ன ஆயிடுச்சு என்றாள் ஹரிதா. நீ ஊருக்கு போய் விடுவாய் நாங்கள்தான் இங்கேயே இருக்க வேண்டும். ம் எனக்கு தாலி பற்றி சில சந்தேகங்கள் உள்ளன என்றாள். ஆளை விடுடி ஹரிதா என கிளம்பினாள் தாமரை. சதா ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க இந்த தாலி எவ்வாறு உதவுகிறது என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள். நிஜமாகவே அதற்கு அத்தனை பவர் இருக்கிறதா என தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

இன்னும் இரண்டு நாட்களில் ஊர் திரும்ப வேண்டும் என அப்பா சொல்லியிருந்தார். அவளுக்கு இந்த கிராமமே பிடித்திருந்தது. ஆனால் கட்டுப்பாடு ? அதை மீறுவதற்கு இங்கே வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றியது. தாமரை, திலீபன், மஞ்சு என எல்லோரும் யாருக்கோ கட்டுப்பட்டு வாழ்கிறார்கள். தங்கள் வாழ்வை அதனையொட்டி அமைத்துக்கொள்கிறார்கள். தானும் தாலிக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் என நினைக்கும் போது வருத்தம் ஏற்பட்டது. அம்மாவிடம் கேட்கலாம் இது பற்றி. அவளுக்கு அப்பாவை தவிர ஒரு சிந்தனையும் கிடையாது. ஊருக்கு போவதற்கு முதல் நாள் லைப்ரரியை இறுதியாக பார்த்து வந்தாள். அவருக்கு நன்றி சொன்னாள் . தாமரையை டவுனுக்கு அழைத்து போய் அவளுக்கு பிடித்த உடை ஒன்றை வாங்கிக்கொடுத்தாள். அவளுக்கு மன நிறைவாக இருந்தது. ஊருக்கு கிளம்பும் நாளில் தாத்தா நீ என்ன செய்கிறாய் என்று யாருக்கும் தெரியாது என்று நினைக்காதே என்றார். இவள் அமைதியாய் இருந்தாள். நீ சின்னப்பெண் பார்த்து நடந்து கொள் என்றார். அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

ஊருக்கு வந்ததும் எல்லவற்றையும் சுத்தப்படுத்த தொடங்கினாள் அம்மா. நான் போய் சௌமியாவை பார்த்து வருகிறேன் என கிளம்பினாள் ஹரிதா. இருடி இப்போதானே வந்தோம் சாயங்காலம் போகலாம் என்றாள் அம்மா. நீ சொல்வதும் சரிதான் என்று அம்மாவுக்கு வீட்டை கிளீன் பண்ணுவதில் உதவிகள் செய்தாள். அப்பா ஆபீஸ் போய் விட்டார். இவள் மதியம் ஏதோ டிவியில் சினிமா பார்த்தாள். அம்மா அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாள். பாவம் அம்மா வேறு சிந்தனைகளே தோன்றாத வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறாள். நான் எப்போதும் எதிர்மறையாக சிந்திக்கிறேன் என அம்மா சொன்னாள். அது உண்மைதான். டிவியை ஆஃப் செய்தாள் மணி 4 ஆகியிருந்தது. டீ போட்டு குடித்தாள். பாவம் அம்மா தூங்கட்டும் என தன் ரூமுக்கு சென்று ஹெட் செட்டில் பாட்டு கேட்டாள். கீரத்தி ஏன் போனே பண்ணவில்லை. சௌமியா வீட்டுக்கு போகும் போது அங்கிருந்து பண்ணிக்கொள்ளலாம் என நினைத்தாள். அம்மா 5 மணி போலத்தான் எழுந்தாள் . அவளிடம் சொல்லிவிட்டு சௌமியா வீட்டுக்கு போனாள்.

சௌமியா இவளை கட்டிக்கொண்டாள். செம போர் டி நீ இல்லாம. இந்த டான்ஸ் கிளாஸ் டீச்சர் பெண்ட் எடுக்கராங்க. நான் நாளையில் இருந்து டான்ஸ் கிளாஸ் வருகிறேன் என்றாள் ஹரிதா. நல்லது . நீ கீர்த்திகிட்ட பேசினாயா என்றாள் ஹரிதா. இல்ல நான் பேசி 4 நாள் ஆகுது அவளுக்கு ஃபோன் போடு நான் பேசுறப்ப திருச்சி போயிருக்கேன் அப்படின்னு சொன்னா. கீர்த்தி சாரி ஹரிதா இங்கே ஒரு ஃபங்சன் வந்தேன் அங்கேயே ரெண்டு நாள் தங்கும்படி ஆயிடிச்சி என்றாள். நான் இன்னைக்குத்தான் ஊரில் இருந்து வந்தேன். அப்புறம் நீ எப்படி இருக்கிறாய் கீர்த்தி. எனக்கென்ன குறை சாப்பிடுகிறேன் , தூங்குகிறேன். இப்போ அடுத்து என்ன பிளான் . ரிசல்ட் வந்ததும் தான் முடிவு பண்ணனும் . எனக்கு மேல படிக்கணும்னு ஆசை அப்பா கல்யாணம் பண்ணிக்கோ அப்புறம் படின்னு சொல்லுறாரு. நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ணுற ஐடியா எல்லாம் இல்லை. வேலைக்கு போக போறேன். நல்ல விஷயம் கீர்த்தி. அப்புறம் சௌமியா கூட கொஞ்ச நேரம் பேசினாள்.

மறுநாள் டான்ஸ் கிளாஸ் மிகுந்த சிரமமாக இருந்தது ஹரிதாவுக்கு. ஒரு வாரமா ஆடவில்லை என்றால் அப்படித்தான் இருக்கும் என்றாள் டான்ஸ் மாஸ்டர். உடம்பெல்லாம் வலித்தது. சௌமியா வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடு என்றாள். அதெல்லாம் இருக்கட்டும் ரிசல்ட் எப்போ வருமாம் அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே என்றாள். அவ்வளவு நாளா ?அதுக்கப்புறம் காலேஜ் வேலையெல்லாம் பார்க்கணும் என்றாள் சௌமியா. மூவி போய் ரொம்ப நாள் ஆகுது போலாமா என்றாள் சௌமியா. எனக்கு இண்டரெஸ்ட் இல்லை உனக்காக வருகிறேன் என்றாள். படம் நன்றாக இருந்தது. கதாநாயகி சம்பந்தப்பட்ட கதை .. பாவம் கதாநாயகி ஆவியாய் வந்துதான் பிரச்சனைகளை தீர்க்க முடிந்தது. சௌமியா உற்சாகமாக படம் பார்த்தாள். அவள் அழகுக்கும், அறிவுக்கும் பொருந்தாத ஒரு சினிமா. ஆனால் சினிமா பார்க்கும் போது அறிவு எல்லாம் மாயமாகி விடுகிறது. கற்பனை மட்டுமே வேலை செய்கிறது. சௌமியா அந்த கதாநாயகி நன்கு நடித்திருப்பதாக சொன்னாள். இவளும் அதை ஆமோதித்தாள்.

சௌமியா ஆறுமுகத்திடம் பேசினாள். மறுபடி எப்போது வருவாய் எனக் கேட்டிருந்தாள். நீங்கள் எல்லாம் பிஸி ஆக இருப்பீர்கள் அதுதான் யோசித்தேன் என்றான். அதெல்லாம் இல்லை இப்போது நாங்கள் அவ்வளவு பிஸி இல்லை . உன்னை பார்த்து ரொம்ப நாளாகிறது என்றாள். நான் அவசியம் வருகிறேன் . உனக்கு ஃபோன் பண்ணிவிட்டு கட்டாயம் வருகிறேன் என்றான் ஆறுமுகம்.